"தாடி"! அன்று அக்யூஸ்டு.. இன்று சோம்பேறி.. மோடி, அமித்ஷாவை "விமர்சித்த" ராதாரவி.. கலாய்த்த பேரரசு
சென்னை: பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தாடி வச்சிருக்காங்க, இப்படி வசமாக மாட்டிக்கிட்டீங்களே என நடிகர் ராதாரவியை இயக்குநர் பேரரசு கலாய்த்தார்.
Recommended Video
ரியா தி ஹான்டட் ஹவுஸ் எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாக்யராஜ் பங்கேற்றார். பழைய இருட்டுபாளையம் எனும் ஊரில் பேய் வீடு இருக்கிறது. இது ஊர்மக்களை திகிலில் இருக்க வைத்தது.
இந்த படம் ஒரு காமெடி கலந்த த்ரில்லர் படமாகும். இந்த படத்தில் பாண்டியராஜன், வையாபுரி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி, பெசன்ட் நகர் ரவி, நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ், இயக்குநர் பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராதாரவி
இந்த விழாவில் ராதாரவி பேசுகையில் செல்போன் பார்த்துக் கொண்டே பெண்கள் சாலையில் செல்கிறார்கள். இதனால் செயின் பறிப்பு உள்ளிட்டவை நடக்கிறது. சினிமா தியேட்டர்களுக்கு போய் இது போன்ற நல்ல திரைப்படங்களை பாருங்கள். ஆனால் தியேட்டரில் பாப்கார்ன் விலை அதிகமாக இருக்கிறது என புகார் கூறுகிறீர்கள்.

பாப்கார்ன்
தியேட்டரில் பாப்கார்னை எதற்காக வாங்குகிறீர்கள். சினிமாவுக்கு போனோமா வந்தோமா என இருங்கள். உங்களை தியேட்டர் நிர்வாகம் பாப்கார்ன் வாங்குமாறு கட்டாயப்படுத்துகிறதா என்ன? வேதாந்தா இலக்கியத்தின்படி தாடி வைத்திருந்தால் தமசிக் என பொருள்படும். அதாவது சோம்பேறித்தனம், இந்த படத்தின் இயக்குநர் கோபி தாடி வைத்திருப்பது குறித்து சொல்வதற்கு வந்தேன்.

பாக்யராஜ்
அதற்குள் பக்கத்தில் பாக்யராஜும் லேசாக தாடி வைத்திருக்கிறார். தாடி என்றால் சோகத்தில் இருக்கும் போது மட்டுமே தாடி வைத்த காலம் போய் இன்று எல்லாரும் தாடி வைத்திருக்கிறார்கள் என நகைச்சுவையாக பேசினார். இவருக்கு அடுத்து இயக்குநர் பேரரசு பேசுகையில் அண்ணன் ராதாரவி எப்போது பேசினாலும் வம்பை விலை கொடுத்து வாங்குகிறார்.

வம்பை விலைக்கு வாங்கிய ராதாரவி
இன்றும் அப்படிதான் தாடி குறித்து பேசி வம்பை விலைக்கு வாங்கியுள்ளார். பாக்யராஜ், கோபி, பெசன்ட் நகர் ரவி ஆகியோர் மட்டுமா தாடி வைத்திருக்கிறார்கள். இன்னும் முக்கியமான இருவர் தாடி வைத்திருக்கிறார்களே. அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அண்ணாமலை. இவர்கள் இருவரும் சோம்பேறிகளா?

பாஜக தலைவர்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் லேசாக தாடி வைத்திருந்தார். இந்நேரம் நீங்கள் பேசியதெல்லாம் அண்ணாமலைக்கு போயிருக்கும் என பேரரசு நகைச்சுவையாக பேசியிருந்தார். இப்படித்தான் கடந்த மாதம் தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அக்யூஸ்டு
அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகர் ராதாரவி, இந்தியாவில் ரெண்டே ரெண்டு அக்யூஸ்டுங்கதான் இருக்காங்க. ஒருவர் மோடி, இன்னொருவர் அமித்ஷா. நீங்கள் (திமுக) எத்தனை தடவை ஒன்றிய அரசுனு சொன்னாலும் அவர்கள் இருவரும் கண்டுக்கவே மாட்டாங்க என ராதாரவி பேசியதால் பாஜகவினர் குழம்பினர். இயக்குநர்கள் பாக்யராஜ், பேரரசு, நடிகர் ராதாரவி ஆகியோர் பாஜக நிர்வாகிகள் ஆவர்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications