சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று 35 மாவட்டங்களில் கொரோனா பரவல்.. எங்கெல்லாம் கடுமையான பாதிப்பு.. முழு விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று 35 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, மதுரை செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலையில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரத்தை பார்ப்போம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 உயர்ந்து உள்ளது.கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1079 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 3940 பேருக்கு கொரோனா.. 54 பேர் மரணம்.. . மதுரையில் மோசமான பாதிப்புதமிழகத்தில் மேலும் 3940 பேருக்கு கொரோனா.. 54 பேர் மரணம்.. . மதுரையில் மோசமான பாதிப்பு

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்பதை இப்போது பார்ப்போம்.

  • அரியலூர் 461
  • செங்கல்பட்டு 5051
  • சென்னை 53762
  • கோவை 460
  • கடலூர் 982
  • தர்மபுரி 69
  • திண்டுக்கல் 370
  • ஈரோடு 124
  • கள்ளக்குறிச்சி 707
  • காஞ்சிபுரம் 1791
  • கன்னியாகுமரி 328
  • கரூர் 136
  • கிருஷ்ணகிரி 110
  • மதுரை 1995
  • நாகப்பட்டினம் 250
  • நாமக்கல் 97
  • நீலகிரி 71
  • பெரம்பலூர் 162
  • புதுக்கோட்டை 167
  • ராமநாதபுரம் 742
  • ராணிப்பேட்டை 730
  • சேலம் 710
  • சிவகங்கை 168
  • தென்காசி 332
  • தஞ்சாவூர் 420
  • தேனி 575
  • திருப்பத்தூர் 138
  • திருவள்ளூர் 3524
  • திருவண்ணாமலை 1767
  • திருவாரூர் 428
  • தூத்துக்குடி 866
  • திருநெல்வேலி 744
  • திருப்பூர் 150
  • திருச்சி 546
  • வேலூர் 1095
  • விழுப்புரம் 814
  • விருதுநகர் 363
  • விமான நிலைய கண்காணிப்பில்: 361

(வெளிநாடு)

  • விமான நிலைய கண்காணிப்பில் 306

(உள்நாடு)

  • ரயில் நிலைய கண்காணிப்பில்: 403

மதுரை நிலவரம்

மதுரை நிலவரம்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை பார்ப்போம். சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1992 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 284 பேருக்கும், செங்கல்பட்டில் 183 பேருக்கும், திருவண்ணாமலையில் 114 பேருக்கும், திருவள்ளூரில் 99 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 92 பேருக்கும், ராமநாதபுரத்தில் 83 பேருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனியில் எவ்வளவு

தேனியில் எவ்வளவு

வேலூரில் 84 பேருக்கும், சேலத்தில் 79 பேருக்கும், திருவாரூரில் 78 பேருக்கும், தேனியில் 62 பேருக்கும், விருதுநகரில் 58 பேருக்கும், விழுப்பரத்தில் 47 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 34 பேருக்கும், புதுக்கோட்டையில் 36 பேருக்கும், திருச்சியில் 43 பேருக்கும், கோவையில் 32 பேருக்கும், கடலூரில் 32 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கையில் 27

சிவகங்கையில் 27

கன்னியாகுமரியில் 24 பேருக்கும், சிவகங்கையில் 27 பேருக்கும், தஞ்சாவூரில் 23 பேருக்கும், திருப்பத்தூரில் 23 பேருக்கும், திருநெல்வேலியில் 22 பேருக்கும், திருப்பூரில் 3 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 10 பேருக்கும், கன்னியாகுமரியில் 24 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 14 பேருக்கும், ராணிப்பேட்டையில் 10 பேருக்கும், அரியலூரில் 3 பேருக்கும், தர்மபுரியில் 6 பேருக்கும், திண்டுக்கல்லில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகம்

சென்னையில் அதிகம்

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 21,094 பேரும், செங்கல்பட்டில் 2,326 பேரும், மதுரையில் 1,379 பேரும், திருவள்ளூரில் 1,307 பேரும், காஞ்சிபுரத்தில் 993 பேரும், திருவண்ணாமலையில் 1,072 பேரும், வேலூரில் 845 பேரும் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ராமநாதபுரத்தில் 537 பேரும், சேலத்தில் 446 பேரும், தேனியில் 421 பேரும், திருச்சியில் 343 பேரும், விழுப்புரத்தில் 334 பேரும், திருவாரூரில் 286 பேரும், தூத்துக்குடியில் 286 பேரும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

English summary
district wise abstract of covid 19 positive cases in tamil nadu, report of june 28 , chennai have 31,896 cases till now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X