Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயகாந்த் இருந்த போது செய்த அதே தவறு.. வாய்ப்புகளை வீணடிக்கும் பிரேமலதா? 2026 அவ்வளவு தானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவும் அதிமுகவும் கிட்டத்தட்ட தங்கள் கூட்டணியை இறுதி செய்து விட்டன. தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக இன்று எந்த பக்கம் செல்வது என தெரியாமல் திணறி வருகிறது. விஜயகாந்தின் செல்வாக்கு, தேமுதிகவின் அடிப்படை வாக்கு வங்கி, தெலுங்கு பேசும் மக்கள் ஆதரவு பிரேமலதா விஜயகாந்துக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதனை சரியாக பயன்படுத்தி கூட்டணியை உறுதி செய்யாமல் வாய்ப்புகளை தவறவிட்டு வருகிறார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

விஜயகாந்த் தலைமையில் தேமுதிக தொடங்கப்பட்ட காலத்தில், அது மிக வேகமாக வளர்ந்த ஒரு அரசியல் இயக்கமாகவே பார்க்கப்பட்டது. 2006 சட்டமன்றத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் கிடைத்த வெற்றி, கட்சிக்கு அடித்தளமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 இடங்களில் வெற்றி பெற்று, தமிழக அரசியலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை அடைந்தது தேமுதிகவின் உச்சகட்டமாக கருதப்பட்டது. ஆனால் 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற புதிய அரசியல் முயற்சியில் இறங்கியதுதான், தேமுதிகவின் அரசியல் பாதையை தலைகீழாக மாற்றியது.

DMDK Tamil Nadu Assembly Election 2026 Premalatha Vijayakanth

2026 சட்டமன்ற தேர்தல்

அதன்பிறகு தேமுதிக தொடர்ந்து தேர்தல் தோல்விகளை சந்தித்து வந்தது. ஒருகாலத்தில் 8 சதவீதத்துக்கும் மேல் இருந்த வாக்கு சதவீதம், காலப்போக்கில் சுருங்கி 1 சதவீதத்துக்கும் கீழ் சென்றது. இந்தச் சூழலில், 2026 தேர்தல் தேமுதிகவிற்கு ஒரு அக்னி பரீட்சை என்றே அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. இந்த தேர்தலிலும் கட்சி தோல்வியடைந்தால், தொண்டர்களின் மனநிலை மேலும் தளர்ந்து போகும் அபாயம் இருப்பதால், கூட்டணி முடிவில் பிரேமலதா விஜயகாந்த் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் விஜயகாந்த் மறைவால் உருவான அனுதாப அலை, தேமுதிகவிற்கு ஓரளவு சாதகமாக அமைந்தது.

தேமுதிக வாக்கு வங்கி

இருப்பினும் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது, கட்சியின் தற்போதைய நிலையை வெளிப்படுத்துவதாகவே பார்க்கப்பட்டது. அதே நேரத்தில் பல தொகுதிகளில் தேமுதிக வாக்குகள், அதிமுகவிற்கு மறைமுகமாக பலம் சேர்த்ததும் அரசியல் கணக்கில் கவனிக்கப்படாமல் இல்லை. தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் போன்ற பகுதிகளில் கிடைத்த கூடுதல் வாக்குகள், விஜயகாந்த் மீது இருந்த தனிப்பட்ட ஈர்ப்பு, பிரேமலதாவின் தீவிர பிரச்சாரம், மற்றும் குறிப்பிட்ட சமூக ஆதரவு ஆகியவற்றின் கலவையாகவே இருந்தது.

2026 சட்டமன்ற தேர்தல்

தென்காசி, ராஜபாளையம், சங்கரன்கோவில் போன்ற பகுதிகளிலும் இதே போன்று தேமுதிக வாக்குகள் கூட்டணிக் கட்சிக்கு ஆதரவாக மாறியதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில், தேமுதிகக்கு இன்றும் பல தொகுதிகளில் 5,000 முதல் 8,000 வாக்குகள் வரை உறுதியான ஆதரவு இருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. 2026 தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் களத்தில் இருப்பதால், திமுக மற்றும் அதிமுக வாக்குகள் பிளவுபடும் சூழல் உருவாகலாம்.

தேமுதிக கூட்டணி குழப்பம்

அப்படியான நிலையில், குறைந்த வாக்கு வித்தியாசமே வெற்றியை தீர்மானிக்கும். அந்த இடைவெளியை நிரப்பும் சக்தியாக தேமுதிக வாக்குகள் அமையக்கூடும் என்பதால் தான், இரு திராவிட கட்சிகளும் தேமுதிகவை இழுக்க முயற்சி செய்கின்றன. தற்போதைய பேச்சுவார்த்தைகளில், சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 5 அல்லது 6 என்ற அளவில் தான் பேசப்படுகின்றன. ஆனால் தேமுதிக தரப்பில், கட்டாயமாக ஒரு மாநிலங்களவை இடம் வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்படுகிறது.

பிரேமலதா விஜயகாந்த்

இதனால், கொள்கை அடிப்படையிலான கூட்டணியை விட, பேரம் மற்றும் லாப-நஷ்ட கணக்கே முன்னிலை பெறும் சூழல் உருவாகியுள்ளது. எந்த கட்சி அதிக அரசியல் பலன் தருகிறது என்பதையே அடிப்படையாகக் கொண்டு முடிவு எடுக்க வேண்டிய நிலையில் தேமுதிக இருப்பதே, கூட்டணி இறுதி செய்வதில் இழுபறி நீடிப்பதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த கால அனுபவங்களைப் பார்த்தால், தேமுதிக அரசியல் கொள்கைகளை விட தேர்தல் கணக்குகளையே முன்னிலைப் படுத்துகிறது என்ற விமர்சனங்களும் உண்டு.

விஜயகாந்த் அரசியல் மரபு

அதே நேரத்தில் பிரேமலதா விஜயகாந்த் மீது சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது. 2011, 2016, 2021 சட்டமன்ற தேர்தல்களில் கடைசி வரை கூட்டணியை இறுதி செய்யாமல் தேமுதிக இருந்தது. விஜயகாந்த் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருந்தாலும், பிரேமலதா விஜயகாந்த், அவரது சகோதரர் எல்கே சுதீஷ் ஆகியோர் இரு கட்சிகளிடமும் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தியது கூட்டணியை இறுதிச் செய்ய முடியாமல் போனதற்கு காரணமாக அமைந்தது. அதனால் தான் 2021ல் தேமுதிக தனித்து விடப்பட்டது. தற்போது பிரேமலதா அதே தவறை செய்கிறார். இருக்கும் செல்வாக்கை பயன்படுத்திக் கொள்ளாமல் வாய்ப்புகளை வீணடிக்கிறார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+