விஜயகாந்த் இருந்தபோதே அமைந்திருக்க வேண்டிய கூட்டணி இது.. எத்தனை தொகுதிகளில் போட்டி? பிரேமலதா பதில்!
சென்னை: தேமுதிக நிர்வாகிகளின் விருப்பத்திற்கு ஏற்ப திமுக உடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டிலேயே திமுக - தேமுதிக கூட்டணி அமைய வேண்டியது என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு பின் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
2026 சட்டசபைத் தேர்தலில் திமுக உடன் தேமுதிக கூட்டணி அமைத்திருக்கிறது. தேமுதிக தொடங்கப்பட்டு 21 ஆண்டுகளில் முதல்முறையாக திமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது. கடந்த 2 மாதங்களாகவே எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை அறிவிக்காமல் பிரேமலதா விஜயகாந்த் போக்கு காட்டி வந்தார். இதனிடையே அதிமுக நிர்வாகிகளுடனும் பல்வேறு சந்திப்புகளை நடத்தி வந்தார்.

அதிமுகவுடன் பேச்சுவார்த்தை
குறிப்பாக மகா சிவராத்திரி நாளில் கோவை ஈஷா யோகா மையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு நடத்தி இருந்தார். அந்த சந்திப்பின் போது மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் இடம்பெற்றிருந்தார். இருப்பினும் இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு நடத்தினார்.
பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
பிரேமலதா விஜயகாந்த் உடன் அக்கட்சியின் பொருளாளர் சுதீஷ் இருந்தார். மறுபக்கம் அமைச்சர் கே.என்.நேரு, எ.வ.வேலு, கனிமொழி உள்ளிட்டோர் இருந்தனர். இந்த சந்திப்பின் மூலமாக திமுக உடனான கூட்டணியை தேமுதிக உறுதி செய்தது. இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது.
தேமுதிக நிர்வாகிகளின் விருப்பம்
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளின் விருப்பம் திமுக உடன் கூட்டணி அமைப்பதுதான். அந்த வகையில் தேமுதிக நிர்வாகிகள் விரும்பிய இந்த கூட்டணி, விஜயகாந்த் இல்லாத நேரத்தில் அமைந்துள்ளது. 2016ஆம் ஆண்டிலேயே திமுக - தேமுதிக கூட்டணி அமைந்திருக்க வேண்டியது. அப்போது பழம் நழுவி பாலில் விழப் போகிறது என்று கருணாநிதி கூறி இருந்தார்.
அண்ணன் ஸ்டாலின்
தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் இந்த கூட்டணி அமைந்துள்ளது. தொகுதி பங்கீடு, எந்த தொகுதி உள்ளிட்டவை குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். ராஜ்ய சபா சீட், தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் தொடர்பாகவும் முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அறிவிப்பார். எங்கள் கூட்டணி சட்டசபைத் தேர்தலில அமோக வெற்றியை பெறும் என்று தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications