விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார்...வதந்தியை நம்ப வேண்டாம்...தேமுதிக தகவல்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2ஆம் கட்ட பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்று இருப்பதாகவும், நலமுடன் இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தேமுதிக தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

DMDK leader vijayakanth has admitted in the hospital due to bad health

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு செப்டம்பர் 23ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.

இதையடுத்து அவரது மனைவி மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாத்துக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து அவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அறிந்த அவரது கட்சித் தொண்டர்கள் கலக்கம் அடைந்து இருந்தனர். இந்த நிலையில் இருவரும் குணமடைந்து கடந்த வெள்ளிக் கிழமை வீடு திரும்பினர். இவர்கள் இருவரும் யாரையும் சந்திக்கப் போவதில்லை என்றும் முழு ஓய்வில் இருக்கப் போவதாகவும் அறிவித்து இருந்தனர். இந்த் நிலையில் இன்று மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் விஜயகாந்த் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+