சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அவரை" முதல்வராக்கணும்.. எனக்கு எல்லாம் தெரியும்".. விஜயபிரபாகரன் சொன்ன அந்த வார்த்தை.. பரபர தேமுதிக

விஜயகாந்த் முதல்வர் ஆவார் என்று விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: விஜயபிரபாகரன் யார் என்பதை இந்த உலகுக்கு விரைவில் காண்பிப்பேன்... எனக்கு எல்லாமே தெரியும். '90ஸ் கிட்ஸ்' என்றால் யார் என நிரூபிப்பேன்.. எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும், கவுன்சிலராகவும் வேண்டும் என்றால், திமுக - அதிமுக போன்ற கட்சிகளில், பணம் கொடுத்து வாங்கி கொள்ளலாம்.

Recommended Video

    எதிர்காலம் இல்லையா..? தவறான எண்ணம்: கட்சியினருக்கு விஜயகாந்த் எனர்ஜி அறிக்கை!

    தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த்துக்கு கடந்த சில வருடங்களாகவே உடம்பு சரியில்லை.. அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று கொண்டிருக்கிறார்..

    பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட் பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்

    இதனால், கட்சியின் நேரடி அரசியல் நடவடிக்கைகளை தேமுதிகவின் பொருளாளருமான பிரேமலதாவும், சுதீஷ், மகன் விஜய பிரபாகரன் போன்றோரே கவனித்து வருகின்றனர்.

     விஜயகாந்த்

    விஜயகாந்த்

    ஆனால், விஜயகாந்த் செயல்பட முடியாமல் போனதில் இருந்தே கட்சியும் வீழ்ந்துவிட்டது.. முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு தாவிவிட்டனர்.. ஒருகாலத்தில் தேமுதிகவை தங்களது கூட்டணியில் இணைத்துக் கொள்ள பல கட்சிகள் ஆர்வம் காட்டி வந்த நிலையில், இன்று அனைத்து கட்சிகளும் கூட்டணி கதவை இழுத்து மூடும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்டு மண்ணை கவ்வியது, அக்கட்சியின் எதிர்கால அரசியலையே ஆட்டம் காண வைத்துள்ளது..

    தேமுதிக

    தேமுதிக

    மிகப்பெரும் பின்னடைவை அந்த கட்சி சந்தித்துவிட்டது.. சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில், திமுகவுக்கு ஆதரவான ஓரிரு வார்த்தைகளை தேமுதிக மேலிடம் சொன்னாலும்கூட, அது பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை. இப்போதைக்கு விஜயபிரபாகரன் மட்டும் கட்சி நிகழ்ச்சிகளில் நிறைய கலந்து கொண்டு வருகிறார்.. நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.. ஒவ்வொரு முறை பேட்டி தரும்போதும், விஜயபிரபாகரன் சொல்லும் வார்த்தைகள் இதுதான்..

     விஜயகாந்த்

    விஜயகாந்த்

    "தேமுதிக அதே எழுச்சியோடுதான் செயல்படுகிறது... வெற்றி தோல்வி வந்து போகும்... மறுபடியும் தேமுதிகவை தூக்கி நிறுத்துவோம்.. அப்பாவுக்கு உடல்நிலை நன்றாக உள்ளது.. பழைய நிலைக்கு திரும்ப இன்னும் கொஞ்ச நாள் ஆகும்.. எங்களால் முடிந்த முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறோம்... மக்களை சந்திக்க வேண்டிய நேரத்தில் நிச்சயம் சந்திப்பார்.. வாக்கு சதவீதம் எங்களுக்கு அப்படியேதான் உள்ளது... தொண்டர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள்" என்பார்.

    விஜயபிரபாகரன்

    விஜயபிரபாகரன்

    இப்போதும் அதுபோலவே ஒரு பேட்டி தந்துள்ளார்.. அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் தேமுதிக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார்.. அப்போது அவர் "தேமுதிகவை முதலில் இருந்து துவங்க வேண்டிய தேவையில்லை... அனுபவத்தை கொண்டு, இருக்கும் இடத்திலிருந்தே சிறப்பாக நடத்தலாம்... சட்டசபை தேர்தலில், கடைசி நேரத்தில் ஏற்பட்ட சூழ்ச்சியால், சரியான கூட்டணி அமைக்க முடியாமல் எங்களால் போய் விட்டது.

     நோக்கம்

    நோக்கம்

    இந்த கட்சிக்கு வருவதற்கு காரணம், என் அப்பாவை போல், பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்டுமே. விஜயபிரபாகரன் யார் என்பதை இந்த உலகுக்கு விரைவில் காண்பிப்பேன்... எனக்கு எல்லாமே தெரியும். '90ஸ் கிட்ஸ்' என்றால் யார் என நிரூபிப்பேன்.. எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும், கவுன்சிலராகவும் வேண்டும் என்றால், திமுக - அதிமுக போன்ற கட்சிகளில், பணம் கொடுத்து வாங்கி கொள்ளலாம்.

    பொதுமக்கள்

    பொதுமக்கள்


    ஆனால், தேமுதிகவை பொறுத்தவரை, விஜயகாந்த் தமிழக முதல்வராக வேண்டும் என்ற நோக்கத்துடன் எல்லாரும் செயல்பட வேண்டும்.. விஜயகாந்தையும், கட்சியையும் கைவிட்டு விடக்கூடாது" என்றார்... விஜயபிரபாகரனின் இந்த பேச்சை கேட்டுதான் பொதுமக்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.. காரணம், விஜயகாந்த் என்ற நல்ல இதயம் கொண்ட மனிதருக்காகவே, இன்னமும் அந்த கட்சியை விட்டு பலர் வெளியேறாமல் உள்ளனர்.. மற்றபடி கட்சியை பலப்படுத்தும் கட்டாயத்திற்கு தேமுதிக என்றோ ஆளாகிவிட்டது..

    கட்டமைப்பு

    கட்டமைப்பு


    சட்டசபை தேர்தலின்போது, விருப்ப மனு தாக்கலுக்கு கூட வேட்பாளர்களை காணோம்.. அந்த அளவுக்கு கட்டமைப்பு மோசமாக உள்ளது.. மிக குறைந்த அளவு வாக்கு வங்கியை வைத்து கொண்டு, கூட்டணிக்கட்சிகளையும் மதிக்காமல், பணம் ஒன்றே குறிக்கோளுடன் மட்டுமே தேமுதிகவின் பயணம் அமைந்து வருகிறது.. கடந்த 5 வருட காலங்களில் மக்களுக்காக செய்த போராட்டங்கள் என்னென்ன? தமிழகத்திற்கு செய்த சாதனைகள் என்னென்ன? என்பதையும் மனதில் வைத்து கொண்டு செயல்பட வேண்டிய நெருக்கடிக்கு தேமுதிக ஆளாகி உள்ளது என்பதைதான் சொல்ல வேண்டி உள்ளது.

    English summary
    Vijayaprabhakaran says about Vijayakanth and DMDKs future plans
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X