சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லெப்ட்டில சிக்னல் காட்டிட்டு.. ரைட்டிலும் திரும்பாமல்.. ஸ்டிரெயிட்டா மய்யம் போய்ருமோ "அந்த கட்சி"

கமல்ஹாசனுடன் கூட்டணி வைக்க முயற்சிக்கும் தேமுதிக

Google Oneindia Tamil News

சென்னை: போற போக்கைப் பார்த்தா நேராக மய்யத்திற்குப்போய் தேமுதிக செட்டிலாகி விடும் போல. அப்படித்தான் தெரிகிறது.
ஒரு காலத்தில் ஓஹோவென்று வாழ்ந்த கட்சி தேமுதிக. அப்படி அதை கெளரவமான இடத்தில் வைத்திருந்தார் விஜயகாந்த். டெர்ரர் போல இருந்தவர் அவர்.

ஆனால் இன்று அந்தக் கட்சி கிடக்கும் கிடையைப் பார்த்தால் யாருக்குமே பரிதாபம்தான் வரும். அப்படி ஆக்கி வைத்து விட்டனர் கட்சியை.

"ஜஸ்ட் மிஸ்".. ஒரே குறி ஸ்டாலின்தான்.. ஆனாலும் திமுகவுக்கு "உதவிய" பாஜக.. அதிரடி சீக்ரெட்!

திமுக

திமுக

அதிமுகவில் இடமில்லாமல் போய் விட்டது. திமுகவும் கதவை சாத்தி விட்டது. இப்போது ஒன்று தனித்து நிற்க வேண்டும். இல்லாவிட்டால் கமல் கூட்டணி அல்லது தினகரன் கூட்டணியில் போய்ச் சேர வேண்டும். இதைத் தவிர வேறு வழியே இல்லை. இதனால் அடுத்தடுத்த நகர்வுகளில் தேமுதிக தலைவர்கள் இறங்கியுள்ளனர். இப்போதைக்கு தனித்துப் போட்டி என்ற ஆப்ஷனை அவர்கள் எடுக்கவில்லை போலும். எனவே தினகரன் தரப்பிலும், கமல் தரப்பிலும் ஆளுக்கு ஒரு டீம் போட்டு பேசி வருவதாக சொல்கிறார்கள்.

தேமுதிக

தேமுதிக

தற்போது கமல்ஹாசனுடன் தேமுதிக தரப்பில் சீரியஸாக பேசி வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் கூட்டணியில் ஏற்கனவே சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும், இந்திய ஜனநாயகக் கட்சியும் இடம் பிடித்துள்ளன. எஸ்டிபிஐ உள்ளிட்ட சில கட்சிகளும் வரும் வாய்ப்புள்ளது. இந்த நிலையில் தற்போது தேமுதிக வந்தால் அவர்களுக்கு என்ன இடம் கிடைக்கும் என்று தெரியவில்லை.

சரத்குமார்

சரத்குமார்

மக்கள் நீதி மய்யமும், தேமுதிகவும் கிட்டத்தட்ட சம பலம் உடையவை. கமல்ஹாசன் கடந்த லோக்சபா தேர்தலில் தேமுதிகவை விட சிறப்பாக செயல்பட்டிருந்தார். அதேசமயம், சரத்குமார், இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை அவ்வளவு வாக்கு வங்கி பலம் இல்லாதவை. எனவே கமல் கட்சிக்கு அடுத்து தேமுதிகவுக்கு கூடுதல் இடம் கொடுத்தாக வேண்டும்.

கூட்டணி

கூட்டணி

அப்படி இடம் தருவதாக இருந்தால் எல்லோருமே தங்களது தொகுதிகளைக் குறைத்துக் கொண்டு அதில் எடுத்து தேமுதிகவுக்கு தர வேண்டும். இதுதவிர தேர்தல் செலவெல்லாம் வேறு இருக்கிறது. இதற்கு முன்பு அதிமுக கூட்டணியில் இடம் பெற்றபோது தேர்தல் செலவுக்கும் அதிமுக தரப்பிலிருந்து பணம் தருவார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் கமல் கூட்டணியில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

தேமுதிக

தேமுதிக

இப்படி பல தரப்பிலும் இடையூறுகள் இருக்கும் ஒரு நிலையிலும், கமல் கட்சியுடன் கூட்டணி தொடர்பாக தேமுதிக பேசி வருவதாக சொல்கிறார்கள். உண்மையில் கமல் கட்சிக்கும், விஜயகாந்த் கட்சிக்கும் கொள்கை ரீதியாக ஏகப்பட்ட முரண் பாடுகள் உள்ளன. தேமுதிக என்பது தேசியம், திராவிடம் என ஒரு குழப்பமான கொள்கையுடன் உள்ள கட்சி. கமல் கட்சியோ இது இரண்டையும் தொடாமல் மய்யம் என்ற வித்தியாசமான நூதனமான கொள்கையுடன் வலம் வரும் கட்சி.

 கூட்டணி

கூட்டணி

இப்படி வித்தியாசமான இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பதே முதலில் வினோதம்தான். அதேசமயம், விஜயகாந்த் என்ற மனசுக்காக, முகத்துக்காக கமல் கூட்டணிக்கும் ஒரு விதமான பலம் வந்து சேரும் என்பதையும் நாம் மறுக்க முடியாது. பார்ப்போம்.

English summary
DMDK Will allliance with Kamalhasan, sources say
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X