யார் கண்ணு பட்டுச்சோ.. நல்லா இருந்த கூட்டணி இப்படி ஆயிருச்சே! திமுக கூட்டணியில் எழுந்த புகைச்சல்!
சென்னை: பத்தாண்டுகளுக்கு மேலாக வலுவாக இருக்கும் திமுக கூட்டணியில் சற்று சலசலப்புகள் எழத் தொடங்கி இருக்கிறது. திமுக தலைமைக்கு எதிராக குரல் கொடுக்காத கட்சிகள், தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு வருகின்றன. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக என ஒவ்வொரு கட்சியும் அடுத்த கட்சியின் விவகாரங்களில் நுழைவதாக புகார் அளித்திருக்கிறது. இது திமுக தலைமைக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் தமிழக அரசியல் கட்சிக் கூட்டணிகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது. ஆனால் 2019ல் இருந்து திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. சொல்லப்போனால் 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்த கூட்டணி தொடரும் நிலையில் வரும் காலங்களிலும் தொடரும் என்றே திமுகவினர் சொல்கின்றனர்.
அதே நேரத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உள்ளிட்ட கோரிக்கைகள் திமுக கூட்டணியில் எழ ஆரம்பித்திருக்கிறது. கூட்டணி உடையும் அளவுக்கு இது செல்லாது என்றாலும், கூட்டணி பேச்சு வார்த்தைகளை திமுகவுக்கு சற்று அழுத்தத்தை தரலாம் என சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

திமுக கூட்டணி
இந்த நிலையில் திமுக கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகள் மற்ற கட்சிகளின் விவகாரங்களில் தலையிடுவதும் கூட்டணி தொடர்பான கருத்துக்களை பொதுவெளியில் பேசுவது திமுக தலைமை சற்றே அதிருப்தி அடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இது போன்ற பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி இருப்பதையும் கவனிக்க வேண்டும். கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ஆலோசகர் பிரவீன் சக்கரவர்த்தி கடன் பெறுவதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக கூறி இருந்தார்.
காங்கிரஸ் விவகாரம்
இதற்கு உடனடியாக திமுக தலைவர்கள் பதிலடி கொடுத்த நிலையில் அதற்கு பிறகு மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தங்கள் கட்சியின் விவகாரத்தில் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தலையிடக்கூடாது என மாணிக்கம் தாகூர் பற்ற வைக்க. அதனை செல்வப் பெருந்தகையும் ஏற்றுக் கொண்டார். இதுதான் அந்தக் திமுக கூட்டணியில் ஏற்பட்ட முதல் உரசலுக்கு காரணம்.
மதிமுக சர்ச்சை
தொடர்ந்து கடந்த இரண்டாம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போதை பொருட்களுக்கு எதிராக சமத்துவ நடை பயண நிகழ்ச்சியை தொடங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக இந்த நடைபயணத்தை தொடங்கி வைத்தது குறிப்பிட த்தக்கது. இதில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டு உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை. வைகோவின் நிகழ்ச்சியில் 'தேசிய தலைவரின்' படம் இடம்பெற்று இருந்ததாக கூறி காங்கிரஸ் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தது. துரை வைகோ, வைகோ உள்ளிட்டோர் விளக்கம் அளித்த போதிலும் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் மிக கடுமையாக இருப்பது திமுக கூட்டணியில் புகைச்சலை மேலும் அதிகரித்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள்
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையே மோதல் அதிகரித்திருக்கும் நிலையில் ராமதாஸ் தரப்பு திமுக தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. விரைவில் அவர்கள் திமுகவுடன் கூட்டணி சேரலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பாமக வந்தால் திமுக கூட்டணியில் விசிக இருக்காது என ஏற்கனவே சொல்லி இருந்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல் திருமாவளவன். இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு போல விடுதலை சிறுத்தைகளும் பாட்டாளி மக்கள் கட்சியும் ஒரே கூட்டணியில் சேர வேண்டும் என செல்வ பெருந்தகை பேசியதற்கு வன்னியரசு கடும் பதிலடி கொடுத்தார்.
பாமக கூட்டணி
பாஜக பாமக கூட்டணியில் எப்போதும் நாங்கள் சேர மாட்டோம்.. இப்படி பேசுவது சரியில்ல, வேறு மாநிலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைக்கச் சொன்னால் நீங்கள் இருப்பீர்களா என பதிலடி கொடுத்தார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தற்போது இருப்பிரிவுகள் இருக்கிறது. பல எம்எல்ஏக்கள் எம்பிக்களை பெற்று கொடுத்த திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என ஒரு தரப்பு வலியுறுத்தும் நிலையில் திமுகவில் மரியாதை குறைந்துவிட்டது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என பேசி வரும் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழக கூட்டணியில் இணைய வேண்டும் என்கிறது மற்றொரு தரப்பு. இதனால் அந்தக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் புகைச்சல் திமுக கூட்டணிகளும் எதிரொலித்துள்ளது.
ஸ்டாலின் கூட்டணி
இது மட்டுமல்லாமல் வட மாவட்டங்களில் வலுவாக இருக்கும் வன்னியர் சமூக வாக்குகளை பெறுவதற்காக ராமதாஸ் தரப்பை கூட்டணிக்கு அழைக்க முதலமைச்சர் ஸ்டாலின் விரும்பினாலும், விசிகவுக்கு அது பிடிக்கவில்லை. மேலும் ஏற்கனவே கிட்டத்தட்ட தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்ட நிலையில் பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வந்தால், பிற கட்சிகளுக்கான தொகுதிகளில் கை வைக்க வேண்டி வரும். இதனால் புதிய கட்சிகள் சேர வாய்ப்பு இருந்தாலும், தொகுதி பங்கீடு என்பது திமுகவுக்கு நெருக்கடியாக மாறி இருக்கிறது. கட்சியில் பிரச்சனை இருந்தால் சமாளித்து விடலாம் ஆனால் கூட்டணியில் பிரச்சனை இருக்கிறது. அதுவும் கூட்டணி கட்சித் தலைவர்களே ஒருவருக்கொருவர் விமர்சித்து வரும் நிலையில் இதனை திமுக தலைமை எப்படி அணுகப் போகிறது என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பு.
-
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications