திமுக ஜென்சி கூட்டம் நடத்தலாம்.. ஜென்சி இளைஞரை எம்எல்ஏ ஆக்க முடியுமா.. தவெக எம்எல்ஏ கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சியமைத்து 3 மாதங்கள் நிறைவடைந்துவிட்டது. சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் சூடுபிடித்துள்ளது. பட்ஜெட் பற்றிய கருத்துகளை கடந்து தவெக, திமுக இடையே கருத்து யுத்தம் ஏற்பட்டு வருகிறது. தவெகவின் வெற்றி தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். தவெக பாணியில் திமுக, அதிமுகவும் ஜென்சி இளைஞர்களை குறிவைத்து அரசியல் செய்கிறது. இதற்கு தவெக இளம் எம்எல்ஏ அபிஷேக் திமுகவை சீண்டி விமர்சனம் செய்தார்.

தவெக அரசின் முதல் பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இடையே காரசார விவாதம் நடந்து வருகிறது. தமிழக அரசியல் ஜென்சி இளைஞர்களை மையப்படுத்தி நகர்கிறது. சட்டமன்றத்திலும் ஜென்சி அரசியல் அதிகம் பேசப்படுகிறது.

Gen Z Politics

முதியவரின் ஆசை

சட்டமன்றத்தில் போளூர் தொகுதி தவெக எம்எல்ஏ அபிஷேக் பேசுகையில், "2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ளார். நீண்ட காலமாக மக்களுக்கு பலனளிக்க கூடிய வெளிப்படையான திட்டங்கள் வருமா.. வருமா.. என்று தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். இந்த பட்ஜெட் அவர்களின் தாகத்தை தணித்துள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு என்னுடைய போளூர் தொகுதிக்கு நான் கடந்த வாரம் சென்றேன்.

ஒரு முதியவர் என் கையை பிடித்து கொண்டு, நீ என் பேரன் மாதிரி இருக்காய்பா. நான் பல முதலமைச்சர்களை பார்த்துள்ளேன். இப்போதுள்ள முதலமைச்சரை பார்க்கும்போது எம்ஜிஆரை பார்ப்பது போல உள்ளது. பஞ்சாயத்து ஆபிஸ்ல எல்லாம் காசே வாங்கறதில்லயா. ஆச்சர்யமா இருக்கு. எனக்கு இப்போதான் வாழணும்னு ஆசை வந்துருக்கு என கண்ணீர் மல்க கூறினார். இதுதான் உண்மையான மக்களாட்சி.

ஜென்சி அரசியல்

அந்த முதியவர் வாழ ஆசைப்பட்டார் அல்லவா அதுதான் மாற்றம். இது தளபதியால் ஏற்பட்ட மாற்றம். அடிநாக்கில் நஞ்சையும், நுனி நாக்கில் விஷயத்தையும் வைத்து கொண்டு மாற்றம் எங்கே மாற்றம் எங்கே என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகிறார்கள். அவர்களுக்கு ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறேன். எதிர்க்கட்சியினரும், அவர்களின் தூண்டுதலிலும் ஜென்சி இளைஞர்கள் கூட்டம் நடத்தலாம். என்னை போல ஜென்சி இளைஞரை தவெக தலைவரால் மட்டுமே எம்எல்ஏ ஆக்க முடியும்.

முதலமைச்சர் விஜய் மட்டுமே அதை சாத்தியப்படுத்தி காட்டியுள்ளார். தவெகவின் கொள்கை தலைவர்களில் ஒருவரான அம்பேத்கர், கற்பி.. ஒன்று சேர்.. அரசியல் பழகு.. புரட்சி செய் என்பார். அவர் வழியில் தளபதி எங்களுக்கு அரசியல் கற்பித்தார். எங்களை எல்லாம் ஒன்று சேர்த்தார். மக்கள் வாக்களித்து அரசியல் புரட்சி செய்துள்ளார். இதுதான் ஓ.ஜி சமூகநீதி மாடல். இதற்கு பெயர் தான் முதலமைச்சர் ஜோசப் விஜய் மாடல்" என்றார். அவரின் பேச்சுக்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+