சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக வேட்பாளர் பட்டியல் மார்ச் 10ல் ரிலீஸ்: பழையவர்களுக்கு கல்தா - புது ரத்தம் பாய்ச்சும் ஸ்டாலின்

சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வரும் 10ஆம் தேதி வெளியிட உள்ளதாக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியல் மார்ச் 10ல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மு.க ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். சிட்டிங் எம்எல்ஏக்கள் பலருக்கு கல்தா கொடுத்து விட்டு புது ரத்தம் பாய்ச்ச புது முகங்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. கூட்டணி கட்சியினருடன் தொகுதிகளை இறுதி செய்யும் பணியில் திமுக விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளது. திருச்சியில் 7ஆம் தேதி மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டத்தை நடத்தி பத்தாண்டுகளுக்கான தொலை நோக்குத்திட்டத்தை அறிவிக்கப் போகிறார் மு.க ஸ்டாலின்.

பத்தாண்டு காலமாக ஆட்சியில் இல்லாத திமுக இந்த முறை எப்படியாவது வென்று ஆளுங்கட்சியாக அரியணையில் அமரவேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கியுள்ளது.

வேட்பாளர்கள் தேர்வு

வேட்பாளர்கள் தேர்வு

திமுகவில் மாவட்ட செயலாளர்களாக இருப்பவர்கள் கண்டிப்பாக போட்டிடுவது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளில் பலர் தோல்வியை தழுவினாலும் சுய பலத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக சட்டசபைக்குள் நுழைந்தவர்கள் இருக்கின்றனர். சிட்டிங் எம்எல்ஏக்களாக இருப்பவர்களின் செயல்பாடுகளைப் பார்த்து வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் தேர்வில் ஐபேக்

வேட்பாளர்கள் தேர்வில் ஐபேக்

திமுகவில் தற்போது 99 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இந்த 99 பேரும் மீண்டும் சீட் கேட்டு விருப்ப மனு அளித்துள்ளனர். ஏற்கெனவே, தொகுதிவாரியாக ஐவர் மற்றும் மூவர் பட்டியல் எனப்படும் உத்தேச வேட்பாளர் பட்டியலைத் தலைமைக்குக் கொடுத்துவிட்டது ஐபேக் டீம்.

புது முகங்களுக்கு வாய்ப்பு

புது முகங்களுக்கு வாய்ப்பு

மக்கள் செல்வாக்கு இல்லாத சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது என்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இம்முறை சீட் ஒதுக்கக் கூடாது என்றும் கறாராக சொல்லியிருக்கிறதாம் ஐபேக் டீம். இதனை அறிந்துதான் இம்முறை தேர்தலில் போட்டியிட சீட் பல புதுமுகங்கள் விருப்பமனு கொடுத்துள்ளார்களாம்.

எதிர்க்க ஆளில்லை

எதிர்க்க ஆளில்லை

விருப்ப மனு நேர்காணலின் போது பல தொகுதிகளுக்கு ஏராளமானோர் விருப்பமனு கொடுத்திருந்தாலும் அருப்புக்கோட்டை, திருச்சுழியில் போட்டியிட சிட்டிங் எம்எல்ஏக்களான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தவிர வேறு புதிதாக யாரும் மனு கொடுக்கவில்லை. எனவே அவர்கள் இருவர் மட்டுமே நேர்காணலில் பங்கேற்றனர்.

மார்ச் 10ல் வேட்பாளர் லிஸ்ட்

மார்ச் 10ல் வேட்பாளர் லிஸ்ட்

வேட்பாளர் தேர்வுக்காண நேர்காணல் முடிந்துள்ள நிலையில் மாவட்ட செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை
நடத்தியுள்ளார் மு.க ஸ்டாலின். அப்போதுதான் மார்ச் 10ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இந்த முறை 200 தொகுதிகளில் களமிறங்க திட்டமிட்டுள்ளது திமுக அந்த எண்ணத்தில்தான் கூட்டணி கட்சியினருக்கு அள்ளிக்கொடுக்காமல் இடங்களை கிள்ளிக்கொடுத்து வருகிறது.

புது ரத்தம் பாய்ச்சுவாரா

புது ரத்தம் பாய்ச்சுவாரா

திமுக இம்முறை வெற்றி பெற்றால் அமைச்சராகி விடலாம் என்று கனவோடு பல சிட்டிங் எம்எல்ஏக்கள் இருக்கின்றனர்.
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் கிடைக்குமா? அல்லது புது முகங்களை களமிறக்கி புது ரத்தம் பாய்ச்சுவாரா திமுக தலைவர் மு.க ஸ்டாலின் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

English summary
According to the souce the list of DMK candidates contesting the assembly elections will be released on March 10. MK Stalin stated this in a consultation meeting with the district secretaries. It has been reported that many of the sitting MLAs have decided to give kalta and give new faces a chance to shed new blood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X