சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுங்கச்சாவடிக் கட்டண உயர்வுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்..!

Google Oneindia Tamil News

சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் திடீர் கட்டண உயர்வு அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 20 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தேசிய நெடுஞ்ச்சாலைகளிலும், சுங்கச்சாவடிகளிலும் வாகன ஓட்டிகளுக்கும், பயணிகளுக்கும் தேவையான எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு உள்ளது.

dmk cheif mk stalin condemned to highways authority

இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் மட்டும் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அனுமதி அளித்து வருகிறது.

சமயபுரம், செங்குறிச்சி, திருமாந்துறை,விக்கிரவாண்டி, போகலூர், விஜயமங்கலம் உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனை வாகன உரிமையாளர்கள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் மு.க.ஸ்டாலினும் தனது கண்டனத்தை ட்வீட்டரில் பதிவு செய்துள்ளார்.

இப்படியே இருக்க முடியாது.. என் நண்பனை விட்ருங்க.. ஏதாவது தீர்வு காணுங்க.. பூஜா பேடி குரல்இப்படியே இருக்க முடியாது.. என் நண்பனை விட்ருங்க.. ஏதாவது தீர்வு காணுங்க.. பூஜா பேடி குரல்

சுங்கச்சாவடிகளில் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ள கட்டண உயர்வு நடுத்தர வர்க்கத்தினரையும், வணிகர்களையும் பெரிதும் பாதிக்கும் என்றும், இந்த நடவடிக்கை கண்டனத்திற்குரியது எனவும் கூறியிருக்கிறார். அடிப்படை பராமரிப்பு வசதிகளை செய்து தராமல், கட்டணத்தை மட்டும் ரகசியமாக உயர்த்தியிருப்பது அரசின் பகல் கொள்ளை என விமர்சித்திருக்கிறார்.

மேலும், சுங்கச்சாவடிகள் மக்களின் நலனை சாகடிப்பதாக இருக்கக் கூடாது என தனது ட்வீட்டர் பதிவில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

English summary
dmk cheif mk stalin condemned to highways authority
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X