புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும்: திமுக வாக்குறுதி!
சென்னை: மீண்டும் திமுக ஆட்சி அமைக்கப்பட்டால் கல்லூரி மாணவர்களுக்கு புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலம் அளிக்கப்பட்டும் ரூ.1,000 உதவித்தொகை, இனி ரூ.1,500 ஆக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 25 நாட்களே இருக்கும் நிலையில், திமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியாகியது. இந்த நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். திமுக தரப்பில் தேர்தல் அறிக்கையை தயாரிக்க அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து திமுக தேர்தல் வாக்குறுதிகளை உருவாக்கி இருக்கிறது. இதனால் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன் முதல்வர் ஸ்டாலின், கனிமொழி தலைமையிலான குழுவினருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். அதேபோல் அந்தக் குழுவினருக்கு நன்றியையும் தெரிவித்தார்.
இதன்பின் முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் காலை உணவு திட்டம் 8ஆம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்படும், மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும், 10 லட்சம் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்ட தொகை ரூ.1500 உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலின் போது திமுக தேர்தல் வாக்குறுதியில் புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம் குறித்து இடம்பெறவில்லை. ஆனாலும் திமுக ஆட்சிக்கு வந்தபின், இந்த இரு திட்டங்களை உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் நலனுக்காக செயல்படுத்தியது. தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்திருப்பது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
அதேபோல் தமிழ்நாட்டில் காலை உணவு திட்டம் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், நடுநிலை பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்ய திமுக முடிவு எடுத்துள்ளது. இதனால் பெற்றோரின் சுமையை இன்னும் சுலமாக்கும் என்று கருதப்படுகிறது.
-
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications