சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!

Google Oneindia Tamil News

சென்னை: ஊழல், லஞ்சத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது திமுக தான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சமூக நீதிப் போராளி ரெட்டமலை சீனிவாசன் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் இரட்டைமலை சீனிவாசன் உருவப்படத்திற்கு மலர் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது.

Recommended Video

    ஊழல், லஞ்சத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது திமுக... நாம் தமிழர் சீமான் கடும் சாடல்

    இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசன் உருவப்படத்துக்கு மலர் தூவி மலர்வணக்கம் செலுத்தினார்.

    சென்னை ஷாக்! 5 வயது சிறுவனுக்கு சூடு வைத்து, தலையை சுவற்றில் அடித்துக் கொலை செய்த அக்காசென்னை ஷாக்! 5 வயது சிறுவனுக்கு சூடு வைத்து, தலையை சுவற்றில் அடித்துக் கொலை செய்த அக்கா

    கவர்னர் நியமனம்

    கவர்னர் நியமனம்

    மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அது பாஜக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி அவர்களுக்கு ஆதரவாக, நெருக்கமாக இருப்பவர்களைதான் ஆளுநராக போடுவார்கள். தற்போதும் தமிழக்தின் புதிய ஆளுநர் அப்படித்தான் வந்துள்ளார். மக்களை சந்தித்து, மக்களுடன் நெருக்கமாக இருந்தவர்களை ஆளுநர்களாக போட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். ஓய்வு பெற்ற நீதிபதி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகியோரை ஆளுநர்களாக போடுவது எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என்பது தெரியவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூட இதனை எதிர்த்துள்ளார்.

    எது அரசியல்?

    எது அரசியல்?

    மக்கள் கடைசியாக நம்பி இருப்பது நீதிமன்றத்தைதான். ஓய்வு பெற்ற நீதிபதிகள் எதையோ எதிர்பார்த்து பொறுப்பில் அமர்ந்தால் நீதி எப்படி இருக்கும். எனவே மக்களை சந்திப்பவர்களை ஆளுநர்களாக போட வேண்டும். இந்த நியமனங்களில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தம்பி உதயநிதி ஸ்டாலின் உள்பட பலரும் நீட் தேர்வை அரசியலாக்க வேண்டாம் என்கிறார்கள். மாணவி அனிதா இறந்தபோது இப்போது இருக்கும் முதல்வர் அதனை அரசியளிக்கவில்லையா? அப்படியானால் எது அரசியல்? எங்கள் பிள்ளைகளின் உயிரை விட உயர்ந்த அரசியல் ஒன்று உள்ளதா?

    தீர்மானம்

    தீர்மானம்

    நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் இயற்றுகிறார்கள். இதனை ஒன்றிய அரசு மதிப்பதில்லை. மாநில அரசின் சட்டத்தை மதிக்காத ஒன்றிய அரசின் சட்டத்தை ஏன் மதிக்க வேண்டும்? என்று ஒன்றிய அரசிடம் கேள்வி கேட்க தமிழக அரசுக்கு துணிவு இருக்கிறதா? கருணாநிதி ஆட்சி காலத்தில் நோக்கியா நிறுவனம் மூடப்பட்டது. இப்போது போர்டு நிறுவனம் மூடப்பட்டுள்ளது. சமூக நீதிக்காக பெரியார் மட்டுமே போராடினார் என்பதை நான் ஏற்கவில்லை. எங்களின் முன்னோர்கள் பலர் சமூக நீதிக்காக போராடியுள்ளனர்.

    ஊழல், லஞ்சம்

    ஊழல், லஞ்சம்

    உள்ளாட்சி பதவிகளை தேர்தலில் ஏலம் விடுவது நடக்கும். உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடப்பது ஏன்? தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்ட பிறகு ஒரே கட்டமாக நடத்த முடியாதா?
    தி.மு.க தங்களை நேர்மையாளர்கள் என காட்டிக்கொள்ள நினைக்கிறார்கள். ஊழல், லஞ்சத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது திமுக தான். தமிழகத்தில் எந்த தீய திட்டத்திற்கும் வேர் தேடி போனால் தி.மு.க தான் இருக்கும். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

    English summary
    seeman, the chief co-ordinator of the Naam Tamilar Party, said that it was the DMK that introduced corruption and bribery to the world
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X