கொடநாடு வழக்கு மட்டுமல்ல.. எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் செக்.. ஆளும் தரப்பு எடுத்த புதிய அஸ்திரம்
சென்னை: கொடநாடு வழக்கு மேல் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிவிட்டதால் மேல் விசாரணை தொடங்கி இதில் எடப்பாடி தரப்பினரின் பெயர் இடம் பெறுமோ என்ற பதற்றம் காணப்படுகிறது. இதனிடையே கொடநாடு வழக்கை தாண்டி நெடுஞ்சாலைத்துறை கோப்புகளையும் அடுத்தகட்ட அஸ்திரமாக எடுக்க போகிறதாம் ஆளும் திமுக தரப்பு. இதனால் அதிமுகவில் மேலும் கலக்கம் அதிகரித்துள்ளது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விவகாரத்தில் மேல் விசாரணைக்குத் தடை கேட்டு அ.தி.மு.க பிரமுகர் அனுபவ் ரவி உச்ச நீதிமன்றத்தை அண்மையில் நாடினார். இதனால் தமிழக அளவில் இருந்த விஷயம், தேசிய அளவில் விவாதப்பொருளாக மாறி உள்ளது.
இது ஒருபுறம் எனில் கொடநாடு வழக்கு மேல் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிவிட்டது. இதனால் , வழக்கு விசாரணையை 60 நாள்களுக்குள் முடித்துவிட்டு இரண்டாவது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வருவதாக காவல்துறை வட்டாரத்தில் இருந்த வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை விசாரிக்கப்பட்டவர்களை தவிர்த்து புதிதாக கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் அண்மையில் போலீஸாரால் விசாரிக்கப்பட்டிருக்கிறார். விசாரணையின்போது, 'அ.தி.மு.க பிரமுகர் கூடலூர் சஜ்ஜீவனை ஏன் நீங்கள் விசாரிக்கவில்லை?' என்று கேட்டு அதிர வைத்தார்.

பதற்றத்தில் எடப்பாடி
இதனிடையே கொடநாடு எஸ்டேட் பங்களாவின் கணினி ஆபரேட்டர் தினேஷ், ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் இருவரின் மரணங்களையும் சந்தேக மரணங்களாக மாற்றி, அந்த வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க காவல்துறை ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் எடப்பாடிக்கு நெருக்கமானவர்களின் பெயரையோ அல்லது அவர் பெயரையோ சேர்க்க வாய்ப்பு உள்ளதா என்ற பரபரப்பு அதிகரிதுள்ளது. இதனால் எடப்பாடி தரப்பு பதற்றத்தில் இருக்கிறதாம்.

விசாரணை?
இது ஒருபுறம் எனில், கொடநாடு பங்களாவில் என்ன இருந்தது என்பது சசிகலாவிற்கு தெரியும் என்பதால் அவரிடம் போலீசார் விரைவில் விசாரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. கொடநாடு விவகாரத்தில் சசிகலா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளார். அவரிடம் விசாரிக்கப்பட்டால் கொடநாடு வழக்கில் புதிய திருப்பத்திற்கு வாய்ப்பு உள்ளது.

புதிய அஸ்திரம்
இதனிடையே கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும், எடப்பாடி உறவினரின் நிறுவனம் செய்திருந்த கட்டட ஒப்பந்தங்கள் தொடர்பாக சில கோப்புகள் ஆளும் தரப்புக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. கொடநாடு இரண்டாவது குற்றப்பத்திரிகை மூலம், செக் வைத்திருக்கும் ஆளும் திமுக தரப்பு, கூடுதலாக நெடுஞ்சாலைத்துறை கோப்புகளையும் அடுத்தகட்ட அஸ்திரமாக எடுத்து வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் நெடுஞ்சாலை துறை கோப்புகள் மீது ஆக்சன் எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
Recommended Video

இருவருக்கும் சிக்கல்
ஒரு பக்கம் சசிகலாவிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ்களை அனுப்பி முடக்கி வரும் நிலையில் மறுபக்கம், கொடநாடு வழக்கு, நெடுஞ்சாலைத்துறை கோப்புகள் என திமுக தரப்பும் அதிரடி மூவ்களை செய்து வருவதால், அதிமுகவில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. அதிமுவை கைப்பற்ற விரும்பும் சசிகலாவிற்கும் சரி, அதிமுகவின் தலைமையாக உள்ள எடப்பாடிக்கும் சரி இப்போது நெருககடியான காலம் தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.












Click it and Unblock the Notifications