சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விறுவிறு வேகத்தில் திமுக.. 4 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம்.. யாருக்கு எத்தனை?

Google Oneindia Tamil News

சென்னை: ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கூட்டணிகளும் கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்வதில் வேகம் காட்டி வருகின்றன.

இதில், அதிமுக தரப்பில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 21 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

DMK is the front runner to make alliance ahead of Tamil Nadu assembly election 2021

திமுக கூட்டணியில் மிகவேகமாக, கூட்டணிகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இதில் லேட்டஸ்டாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இணைந்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக இன்று கையெழுத்தாகியுள்ளது. நேற்று, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. முன்னதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

அந்த வகையில், இதுவரை நான்கு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்துள்ளது திமுக. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது திமுக.

English summary
So far DMK has signed with 4 political parties to make an alliance for upcoming assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X