• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறங்க.. முடியாவிட்டால் மன்னிப்பு கேளுங்க.. ஸ்டாலின்

|

சென்னை: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஜுன் 12ம் தேதி திறந்துவிட வேண்டும் அல்லது முடியாவிட்டால் தனது கையாலாகாத்தனத்திற்காக அதிமுக அரசு டெல்டா விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான முக ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் "காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்குத் தேவையான நீர்ப்பாசனத்திற்கு மேட்டூர் அணையை திறந்துவிட நிர்ணயிக்கப்பட்டுள்ள ஜூன் 12 ஆம் தேதி திறப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு காலம் கழிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த எட்டு ஆண்டுகளிலும் உரிய காலத்தில் குறுவைப் பாசனத்திற்கு நீர் திறந்து விட வழிகாணாமல் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து அவர்களின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு சூறையாடி அழித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி கழக ஆட்சியில் பெறப்பட்ட 192 டி.எம்.சி காவிரி நீரை,177.25 டி.எம்.சி.யாக குறைப்பதற்குக் காரணமான அ.தி.மு.க அரசு, அதிகாரம் படைத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும் கோட்டை விட்டது.

'கடத்தப்படும்' வாக்குப்பதிவு இயந்திரங்கள்.. பின்னணியில் பாஜக.. வெளியான பரபர வீடியோக்கள்

காவிரி வாரியத்தை கூட்டுங்கள்

காவிரி வாரியத்தை கூட்டுங்கள்

பல்லும், ‘பவரும்' இல்லாத வெறும் கூடு போன்றதொரு ஆணையத்தை அமைக்க மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசுக்கு அனுசரணையாக இருந்த அ.தி.மு.க அரசு, இன்றுவரை அந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை கூட்டுவதற்கோ உரிய தண்ணீரைப் பெறுவதற்கோ, டெல்டா விவசாயிகளின் உயிர் காக்கும் விவசாயத் தொழிலைக் காப்பாற்றிடும் நோக்கில் எவ்வித கோரிக்கையும் விடுக்கவில்லை என்பது மிகுந்த கவலைதரும் செய்தியாகும்.

தமிழக அரசு கொடுத்ததா

தமிழக அரசு கொடுத்ததா

உச்சநீதிமன்றம் உறுதி செய்த காவிரி இறுதி வரைவுத்திட்டத்தின்படி, ஜூன் முதல் நாள் நீராண்டின் துவக்கம். ஜூன் மாதத்திலிருந்து வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு குறித்த அறிக்கையை முன்கூட்டியே காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவிடம் தமிழக அரசு கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கப்பட்டதாக செய்திகள் ஏதும் இல்லை.

அதேபோல் அந்த அறிக்கையின் அடிப்படையில் ஜூன் முதல் நாள் காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டப்பட வேண்டும்.

கோட்டைவிட்ட தமிழக அரசு

கோட்டைவிட்ட தமிழக அரசு

அக்கூட்டத்திற்கான அறிகுறிகளும் இதுவரை தென்படவில்லை."திருத்தப்பட்ட இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்குரிய 177.25 டி.எம்.சி நீரை ஒவ்வொரு மாதமும் எவ்வளவு டி.எம்.சி. வீதம் விடுவிக்க வேண்டும் என்பதை காவிரி ஆணையம் முடிவு செய்யும்" என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி ஒவ்வொரு மாதமும் தமிழகத்திற்குத் தர வேண்டிய தண்ணீரின் அளவினை காவிரி மேலாண்மை ஆணையம் முடிவு செய்து விட்டதா? அதற்கும் பதில் இல்லை. ஆகவே காவிரி நீரைப் பெறுவதில் அ.தி.மு.க அரசு முற்றிலும் கோட்டை விட்டு மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறது.

எவ்வளவு பற்றாக்குறை

எவ்வளவு பற்றாக்குறை

மேட்டூர் அணை நீர் மட்டம் 50 அடிக்கும் கீழே சென்று தரைதட்டி விட்டதாகச் செய்திகள் வருவதால் கடந்த ஜூன் முதல் டிசம்பர் வரையிலும், இந்த வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரையிலும் தமிழகத்திற்கு நடுவர் மன்ற உத்தரவின்படி வர வேண்டிய காவிரி நீர் கிடைத்ததா? அதில் எவ்வளவு பற்றாக்குறை? அந்தப் பற்றாக்குறையைப் பெற அ.தி.மு.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்பது பற்றியெல்லாம் எந்தத் தகவலும் தமிழக விவசாயிகளின் நலன் கருதி இதுவரை வெளியிடப்படாதது மிகவும் வருந்தத்தக்கது.

அரசு மெத்தனம்

அரசு மெத்தனம்

ஆகவே, தன் கட்டுப்பாட்டிலேயே நீர் வளத்துறையையும் வைத்துக் கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமி, தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரைப் பெறுவதில் மெத்தனமாகவும், மேம்போக்காகவும் இருந்துவிட்டார்.அ.தி.மு.க அரசின் இந்தப் படு தோல்வியால் இந்த வருடம் மட்டுமின்றி கடந்த எட்டு வருடங்களாகவே மேட்டூர் அணையை காவிரி நீர் பாசனத்திற்காக ஜூன் 12 ஆம் தேதி திறக்க முடியாத அவல நிலைமை அ.தி.மு.க ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் வற்றி, விவசாயிகள் தாங்கமுடியாத துயரத்தில் தள்ளப்பட்டு விழி பிதுங்கி நிற்கும் வேதனை கப்பிய சூழல் அ.தி.மு.க அரசின் நிர்வாகத் தோல்வியால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன்

ஹைட்ரோ கார்பன்

இதைத் திசை திருப்பவும், விவசாயிகளை மேலும் மேலும் வாழ்வா சாவா என்ற சோதனைக்கு ஆளாக்கி விளிம்பு நிலைக்குத் தள்ளவும், ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வு, விவசாய நிலங்கள் வழியாக கெயில் குழாய்கள் பதிப்பு என்று அ.தி.மு.க அரசும் மத்திய பா.ஜ.க அரசும் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு, டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கிடவும், அங்கே தொடர் போராட்டச் சூழ்நிலையை ஏற்படுத்தி, பொது அமைதியைக் குலைத்திடத் துடிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

காவிரி கூட்டம்

காவிரி கூட்டம்

ஆகவே ஆழ்ந்த மெத்தனத்திலிருந்து அ.தி.மு.க அரசு தன்னை உடனடியாக விடுவித்துக் கொண்டு விவசாயிகளின் இன்னல்களைப் போக்கி, தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் காவிரி டெல்டா மண்டலத்தை காப்பாற்றிட வேண்டும். "வெறும் 48 மணி நேரம் கால அவகாசம் கொடுத்து காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தை கூட்டலாம்" என்று காவிரி இறுதி வரைவுத் திட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை திறப்பு

மேட்டூர் அணை திறப்பு

அதனால் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் கூட்டங்களைக் கூட்டுவதற்கு, துறை அமைச்சர் என்ற முறையில் முதல்வர் பழனிசாமி உடனடியாக உருப்படியான நடவடிக்கை மேற்கொண்டு, தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கையாலாகாதத்தனம்

கையாலாகாதத்தனம்

அப்படி முடியவில்லை என்றால், அ.தி.மு.க அரசு தலை கவிழ்த்து தனது கையாலாகாத் தனத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, டெல்டா விவசாயிகளிடம் தனது கையை விரித்து மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டும்" இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

 
 
 
English summary
dmk leader mk stalin demand tn government to open mettur dam on june 12, for cauvery delta's kuruvai culivation
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X