சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கன்னியாகுமரியில் திமுக 4 தொகுதிகள்.. 2ல் இழுபறி.. அசரவைக்கும் நாம் தமிழர்.. சத்தியம் கணிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் திமுக காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக சத்தியம் டிவி கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. 2 இடங்களில் இழுபறி உள்ளதாகவும், குமரி மாவட்டத்தில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக நாம் தமிழர் உருவெடுத்திருப்பதாகவும் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதிநடைபெற உள்ள நிலையில் சத்தியம் தொலைக்காட்சி தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்பது குறித்து கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் எல்லைப்புற மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியே மொத்தமாக வெல்லும் என்று சத்தியம் டிவி தனது கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

திமுக வெல்லும்

திமுக வெல்லும்

கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி 45 சதவீதம் ஆதரவை பெற்றுள்ளதாகவும், அதிமுக பாஜக கூட்டணிக்கு 36 சதவீதம் ஆதரவு உள்ளதாகவும் கணிப்பில் சத்தியம் டிவி கூறியுள்ளது. நாம் தமிழர் கட்சி 10 சதவீதம் ஆதரவை பெற்றுள்ளதாகவும், அமமுக 2 சதவீதம் ஆதரவு பெற்றுள்ளதாகவும், மநீமவிற்கு ஆதரவு இல்லை என்றும் நோட்டாவிற்கு 7 சதவீதம் ஆதரவு உள்ளதாகவும் சத்தியம் டிவி தனது கணிப்பில் தெரிவித்துள்ளது,

இழுபறி

இழுபறி

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் இழுபறி உள்ளதாக கூறியுள்ளது. எனினும் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் களம் இறங்கும் காங்கிரஸ் வேட்பாளர் 36 சதவீத வாக்குகளை பெறுவார் என்றும், அதிமுக 34 சதவீத வாக்குகளை பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இங்கு நாம் தமிழர் கட்சி 9 சதவீத ஆதரவை பெற்றுள்ளதாகவும், அமமுக 4 சதவீத ஆதரவை பெற்றுள்ளதாகவும் மநீம 3 சதவீத ஆதரவை பெற்றுள்ளதாகவும், நோட்டா 14 சதவீத ஆதரவை பெற்றுள்ளதாகவும் சத்தியம் டிவி கூறுகிறது.

திமுகவிற்கு வாய்ப்பு

திமுகவிற்கு வாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதியில் திமுக 33 சதவீத ஆதரவை பெறும் என்றும் பாஜக 24 வாக்குகளை பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இங்கு நாம் தமிழர் கட்சி 15 சதவீத ஆதரவை பெற்றுள்ளதாகவும், அமமுக 2 சதவீத ஆதரவை பெற்றுள்ளதாகவும் மநீம 2 சதவீத ஆதரவை பெற்றுள்ளதாகவும், நோட்டா 23 சதவீத ஆதரவை பெற்றுள்ளதாகவும் சத்தியம் டிவி தனது கணிப்பில் தெரிவித்துள்ளது.

ஆதரவு யாருக்கு

ஆதரவு யாருக்கு

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் திமுக 40 சதவீத ஆதரவை பெறும் என்றும் அதிமுகு 36 வாக்குகளை பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இங்கு நாம் தமிழர் கட்சி 6 சதவீத ஆதரவை பெற்றுள்ளதாகவும், அமமுக 3 சதவீதம் ஆதரவை பெற்றுள்ளதாகவும் மநீம 4 சதவீதம் ஆதரவை பெற்றுள்ளதாகவும், நோட்டா 11 சதவீதம் ஆதரவை பெற்றுள்ளதாகவும் சத்தியம் கணிப்பில் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் கடும் இழுபறி காணப்படுகிறது. எனினும் காங்கிரஸ் கட்சி 35 சதவீத ஆதரவை பெறும் என்றும் பாஜக 33 சதவீதம் வாக்குகளை பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இங்கு நாம் தமிழர் கட்சி 7 சதவீத ஆதரவை பெற்றுள்ளதாகவும், தேமுதிக 4 சதவீதம் ஆதரவை பெற்றுள்ளதாகவும் மநீம 5 சதவீதம் ஆதரவை பெற்றுள்ளதாகவும், நோட்டா 16 சதவீதம் ஆதரவை பெற்றுள்ளதாகவும் சத்தியம் டிவி தனது கணிப்பில் குறிப்பிட்டுள்ளது.

நாம் தமிழர்

நாம் தமிழர்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 39 சதவீத ஆதரவை பெறும் என்றும் பாஜக 28 வாக்குகளை பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இங்கு நாம் தமிழர் கட்சி 16 சதவீத ஆதரவை பெற்றுள்ளதாகவும், தேமுதிக 3 சதவீதம் ஆதரவை பெற்றுள்ளதாகவும் மநீம 3 சதவீதம் ஆதரவை பெற்றுள்ளதாகவும், நோட்டா 11 சதவீதம் ஆதரவை பெற்றுள்ளதாகவும் சத்தியம் டிவி கணிப்பில் கூறியுள்ளது.

திமுக 4 இடங்களில்

திமுக 4 இடங்களில்

ஒட்டமொத்தமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும் என்றும் 2 தொகுதிகளில் இழுபறி உள்ளதாகவும் சத்தியம் டிவி தனது கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வெற்றியை தீர்மானிக்கும் கட்சியாக 6 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி உருவெடுத்திருப்பதாக சத்தியம் டிவி நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகளில் தெரியவந்துள்ளது.

English summary
sathiyam tv prediction that DMK likely win 4 constituencies in Kanyakumari. There will be fierce competition in 2 assembly constituencies. 'Naam Tamilar likely decide the victory in all 6 constituencies in Kanyakumari.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X