சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தோட்டத்துக்கு சென்ற ஆ.ராசா.. "நீயும்.. நானும்".. முட்டிமோதும் மனைவியின் நினைவுகள்.. உலுக்கும் படம்

திமுகவின் ஆ ராசாவின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவின் ஒரு போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது..!

Recommended Video

    A Rasa-வின் உலுக்கும் படம் | மனைவியை இழந்த கணவர்களுக்கு மட்டுமே இந்த வலி புரியும்

    "இழந்தவர்களுக்குதான்" எல்லாம் புரியும்.. அதிலும் மனைவியை இழந்தவர் நிலைமை பரிதாபத்துக்குரியது.. வேதனைக்குரியது.. கவலைக்குரியது..!

    தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்! தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

    கணவனை இழந்த மனைவியை விடவும், மனைவியை இழந்த கணவன் தான் அதிக அளவு பாதிப்பை அடைகிறார்கள்..

    மனைவி

    மனைவி

    கணவனை இழந்த மனைவி, தன் பிள்ளைகள் மூலம் தைரியத்தையும், மன உறுதியையும் பெற்று கொள்கிறார்.. ஆனால், கணவன் அப்படி இல்லை.. மனைவியை இழந்துவிட்டால் சகலமும் இழந்ததுபோலதான்... இந்த வலிகளை வரிகளால் சொல்லிவிட முடியாது.. வார்த்தைகளில் கொட்டிவிடவும் முடியாது.. இழப்பின் வலியை இழந்தவர்கள்தான் உணர முடியும்..!

     புற்றுநோய்

    புற்றுநோய்

    அந்த வகையில், ஆ.ராசாவும் அப்படி ஒரு பரிதவிப்பில் சிக்க உழல்வது போலவே தெரிகிறது.. இவர் மனைவி பரமேஸ்வரி, கடந்த சில மாதங்களாகவே புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.. வென்டிலேட்டர் வரை கொண்டு சென்று, சிகிச்சையும் நடந்து வந்தது.. மனைவிக்கு தீவிரமான சிகிச்சை நடந்தபோது, ராசாவால் பக்கத்தில் இருந்து கவனிக்க முடியவில்லை..

     நல்லடக்கம்

    நல்லடக்கம்

    தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் தீவிரமாய் இருந்தார்.. பிரச்சாரம் முடிந்ததுமே, சிகிச்சை பெற்று வந்த மனைவியை கவனித்து வந்தார். ஆனால், டாக்டர்கள் எவ்வளவோ பாடுபட்டும் பலனளிக்கவில்லை.. கடந்த வாரம் பரமேஸ்வரி இறந்துவிட்டார். பரமேஸ்வரியின் உடல் சொந்த ஊரான பெரம்பலூரை அடுத்த வேலூர் கிராமத்தில், ராசாவின் சொந்த நிலத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது...

    உடன்பிறப்பு

    உடன்பிறப்பு

    பரமேஸ்வரியின் மறைவின்போது, முதல்வர் ஸ்டாலின் கண்ணீர் அஞ்சலி அறிக்கையை வெளியிட்டிருந்தார்.. அந்த அறிக்கையின் இறுதியில், "ஆ.ராசா இந்தத் துயரில் இருந்து மீண்டெழ, உடன்பிறப்பு என்ற சொல்லுக்கேற்ப கழகம் தோள் கொடுத்துத் துணை நிற்கும்" என்றும் ஸ்டாலின் நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்திருந்தார்.

     அமைதி

    அமைதி

    இந்த நிலையில், மனைவி இழப்பை தாங்க முடியாமல் ராசா மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகி இருப்பதாக தெரிகிறது.. ராசாவின் அரசியல் வாழ்க்கை நீண்ட நெடியது.. பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தது.. அப்போதெல்லாம் ராசாவுக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளார் பரமேஸ்வரி.. இப்படிப்பட்ட நினைவுகள் முட்டி மோதியதாலோ என்னவோ, சொந்த நிலத்தில் அடக்கம் செய்யப்பட்ட மனைவியின் சமாதிக்கு ராசா சென்றுள்ளார்.. அந்த போட்டோ தற்போது வெளியாகி உள்ளது..

     வைரல்

    வைரல்

    சமாதியை சுற்றி யாருமே இல்லை.. அந்த சமாதியில் மண் போட்டு மூடப்பட்டுள்ளது.. மாலைகள் உள்ளன.. பானை உள்ளது.. தூரத்தில் ஒரு ஓட்டு வீடு தெரிகிறது.. சுற்றிலும் தோட்டம் தென்படுகிறது.. ஆ.ராசா மாஸ்க் அணிந்து, அந்த சமாதி முன்பு ஒற்றை ஆளாக நின்று கொண்டு சமாதியையே வெறித்து பார்க்கிறார்.. மனதில் என்னவெல்லாம் நினைவலைகள் எழுந்து செல்கின்றவோ தெரியவில்லை.. ஆனால், இந்த துயரத்தில் இருந்து ராசா மீண்டு வர பல நாட்கள் பிடிக்கும் என்று மட்டும் நன்றாக தெரிகிறது..!

    English summary
    DMK MP A Rasa's Perambalur Velur Village photo viral on socials
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X