சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அணுக் கழிவுகளை கொட்ட தமிழகத்தை விட்டால் வேறு இடமே இல்லையா? -டி.ஆர்.பாலு MP பிரதமருக்கு கேள்வி..!

Google Oneindia Tamil News

சென்னை: அணுக் கழிவுகளை கொட்ட தமிழகத்தை விட்டால் வேறு இடமே இல்லையா என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு ஏற்காதா எனவும் அவர் வினவியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு டி.ஆர். பாலு எழுதியுள்ள கடிதத்தின் விவரம் பின்வருமாறு;

இது யாருக்கான இந்தியா? சில உண்மைகள் தெரிந்தாக வேண்டும்.. சாமானியர் கேள்வி இது யாருக்கான இந்தியா? சில உண்மைகள் தெரிந்தாக வேண்டும்.. சாமானியர் கேள்வி

கடிதம்

கடிதம்

சென்ற 23.07.2021 அன்று , கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்று மற்றும் நான்காவது உலைகளில் பயன்படுத்தப்பட்ட கழிவுகளை சேகரிக்கும் கிடங்கு ஒன்றினை அணுஉலைக்கு வெளியே அமைப்பதற்கு தேவையான அனுமதி இசைவை அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் இந்திய அனுசக்தி கழகத்திற்கு வழங்கியுள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள்.

மீறும் செயல்

மீறும் செயல்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிரந்தரமாக அணுஉலை கழிவுகளை சேமிக்க கூடாது என்று உத்திரவிட்டும் அங்கே இத்தகைய கிடங்கை ஏற்படுத்தும் திட்டத்துக்கு அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் இசைவு அளித்திருப்பது உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறும் செயலாகும்.

உலைக்கழிவு

உலைக்கழிவு

முதல் இரண்டு அலகுகளின் பயன்படுத்தப்பட்ட அணுஎரிபொருள் கழிவுகள் ரஷ்யாவுக்கு திரும்ப அனுப்பி வைக்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது என்பதை இங்கே தங்கள் கவனத்திற்கு சுட்டிக் காட்டவிரும்புகிறேன்.அதனால்தான் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் கூடங்குளம் வளாகத்தில் உலைக் கழிவு கிடங்கு பரிசீலிக்கப் படவில்லை.

ரஷ்யா

ரஷ்யா

ஆனால், ரஷ்யாவில் ஏற்கனவே அவர்களது அணுக் கழிவுகள் பிரச்சினைகள் கடுமையான நிலையில் கூடங்குளம் கழிவுகளை ஏற்க மாட்டார்கள் என்பதால் இந்த சேமிப்பு கிடங்கு இங்கேயே அமைக்கப் படுகிறது. ஜப்பான் நாட்டின் ஃபுக்குஷிமா மற்றும் ரஷ்யாவின் செர்னோபில் அணு விபத்துக்குகளுக்கு பிறகு உலகின் மூன்றாவது பெரிய விபத்து ரஷ்யாவின் மாயக் பகுதியில் ஏற்பட்டுள்ளது.

 ஜப்பான் நாடு

ஜப்பான் நாடு

ஜப்பான் நாட்டில் அமைக்க பட்ட உயர்மட்ட வல்லுநர் குழு ஃபுக்குஷிமா விபத்து பற்றி தீவிர விசாரணை நடத்தியபின், அங்கே அணுமின் நிலைய வளாகத்திலேயே அமைக்க பட்டிருந்த கழிவுகள் கிடங்கின் காரணமாகவே விபத்து பன்மடங்கு கடுமையான அழிவை ஏற்படுத்தியது என்ற முடிவுக்கு வந்துள்ளது. அதைப் போலவ, அமெரிக்காவும் மற்ற சில நாடுகளும் மேற்கொண்ட ஆய்வுகளும் இதே முடிவுக்கு த்தான் வந்துள்ளன.

 அணுசக்தி

அணுசக்தி

எனவே, இந்த உண்மைகளை எல்லாம் கருத்தில் கொண்டு, ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தப்படி முதல் இரண்டு அலகுகளின் கழிவுகளை ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்பி வைக்கவும், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திலேயே கழிவுகள் சேமிப்பு கிடங்கு அமைக்க மத்திய அரசின் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தால் தரப்பட்ட அனுமதியை ரத்து செய்து திரும்பப் பெற்றிடவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் வசிக்காத

மக்கள் வசிக்காத

அத்துடன், கூடங்குளம், கல்பாக்கம் உள்ளிட்ட அனைத்துஅணுமின் நிலையங்களின் பயன்பாடு முடிந்த அணுஉலை எரிபொருள் கழிவுகளை பத்திரமாக பாதுகாக்க நிரந்தர நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு உருவாக்கப் பட வேண்டும். இந்த நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு ஒரு தேசிய முன்னுரிமை திட்டமாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மக்கள் வசிக்காத நிலப்பகுதியில் கட்டப்படவேண்டும்.

நீண்ட கடிதம்

நீண்ட கடிதம்

சென்னை, புதுச்சேரி மற்றும் தென் தமிழகத்தில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாப்புடன் தொடர்புடைய அதிமுக்கியமான இந்த விஷயத்தில் கடும் காலவிரயம் ஆகிவிட்டதை உணர்ந்து பிரதமர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதிய நீண்ட விவரங்கள் அடங்கிய தனது கடிதத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

English summary
Dmk mp T.R.Balu wrote letter to Pm modi about Kudankulam issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X