சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புர்காவில் யாருன்னு பாருங்க! மசூதிக்கு போன தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.! என்ன பின்னணி?

ஓமன் நாட்டின் சுல்தான் கபூஸ் மசூதிக்கு சென்ற திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்

Google Oneindia Tamil News

சென்னை: தென்சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் புர்கா அணிந்துகொண்டு மசூதிக்கு சென்ற படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றிருந்த தமிழச்சி தங்கபாண்டியன் அங்கிருந்து ஓமன் நாட்டுக்கும் சென்றிருந்தார்.

அப்போது ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள சுல்தான் கபூஸ் மசூதிக்கு சென்ற போது தான் புர்கா அணிந்தவாறு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருக்கிறார் தமிழச்சி தங்கபாண்டியன்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிப். 3ல் அமைதிப் பேரணி.. கட்சி நிர்வாகிகளுக்கு திமுக அழைப்பு! முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிப். 3ல் அமைதிப் பேரணி.. கட்சி நிர்வாகிகளுக்கு திமுக அழைப்பு!

ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகம்

திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், இலக்கியவாதியுமான தமிழச்சி தங்கபாண்டியன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றிருந்தார். அங்கு துபாய், ஷார்ஜா உள்ளிட்ட இடங்களில் தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகளில் பங்கேற்ற அவர் குடியரசுத் தினத்தை துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் கொண்டாடினார். முன்னதாக புத்தக வெளியீடு உள்ளிட்ட இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளிலும் பங்கேற்றார்.

சுல்தான் கபூஸ்

சுல்தான் கபூஸ்

ஐக்கிய அரபு அமீரகம் பயணத்தை முடித்துக் கொண்டு அதன் அருகாமை நாடான ஓமனுக்கு சென்ற தமிழச்சி தங்கபாண்டியன், அங்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு இடங்களை ஆர்வமுடன் பார்த்தார். அந்த வகையில் ஓமன் நாட்டின் மிகப்பெரிய மசூதி என்ற பெருமையை பெற்றுள்ள மஸ்கட்டில் உள்ள சுல்தான் கபூஸ் மசூதிக்கு இன்று தமிழச்சி தங்கபாண்டியன் சென்றிருந்தார். இதனிடையே அந்த மசூதிக்கு பெண்கள் செல்ல வேண்டும் என்றால் புர்கா அணிந்து தலைமுடியை மறைக்க வேண்டும் என்பது அங்குள்ள நிபந்தனை.

தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழச்சி தங்கபாண்டியன்

இதனால் புர்கா அணிந்தவாறு சுல்தான் கபூஸ் மசூதிக்கு சென்ற தமிழச்சி தங்கபாண்டியன், பாரம்பரியமிக்க அரேபிய கட்டிடக் கலைகளை ஆர்வமுடன் பார்த்து ரசித்தார். இதனிடையே அந்த மசூதியில் நின்றவாறு புர்காவுடன் தமிழச்சி தங்கபாண்டியன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தப் படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழச்சி தங்கபாண்டியனே வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

நிபந்தனை

நிபந்தனை

மஸ்கட்டில் உள்ள சுல்தான் கபூஸ் மசூதியை போன்றே, அபுதாபியில் உள்ள கிரான்ட் மசூதிக்குள் பெண்கள் செல்ல வேண்டுமென்றாலும் புர்கா அணிந்து வர வேண்டும் என்பது நிபந்தனையாகும்.

English summary
South Chennai DMK MP Thamizhachi Thangapandian wearing a burqa and visited Sultan Qaboos Mosque in Oman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X