• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

  கூர்க்கா, டூத் பேஸ்ட் அழகன்.. திருவேற்காடு கதைகளை பேசுவோம்.. டிடிவி தினகரனை கடுமையாக சாடும் முரசொலி

  |
   கூர்க்கா, டூத் பேஸ்ட் அழகன்... தினகரனை சாடிய முரசொலி -வீடியோ

   சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நடுவே வார்த்தைப் போர் வெடித்த நிலையில், திமுக நாளிதழான முரசொலியில், தினகரனை கடுமையாக சாடி கட்டுரை வெளியாகியுள்ளது.

   டிடிவி தினகரன் குறித்து முரசொலியில் வெளியான கட்டுரை, அதையடுத்து, ஸ்டாலின் அளித்த பேட்டியில், நேர்த்திக்கடன் போல பெங்களூர் சிறை செல்பவர் என கூறியது என, கூறியது போன்றவை மோதலுக்கு பிள்ளையார் சுழி போட்டன.

   இதையடுத்து டிடிவி தினகரன், ட்விட்டரில், ஸ்டாலின் குறித்தும், திமுக குறித்தும் சரமாரியாக விமர்சனங்களை முன் வைத்தார்.

   ஸ்டாலினை சுயநல புலி என்றும், சகோதரி 2ஜி வழக்கிற்காக சிறை சென்றவர், தாய் விசாரணைக்கு ஆஜரானவர் என்றெல்லாம் குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் சீற்றத்தோடு ட்வீட் செய்தார் தினகரன். இவ்வாறு, இரு தரப்புக்கும் மோதல் உச்சம் சென்ற நிலையில், இப்போது முரசொலி, தினகரனை மிக கடுமையான வார்த்தைகளால் வறுத்து எடுத்துள்ளது.

   சிதை, சிறை

   முரசொலியில் இடம் பெற்ற அந்த காட்டமான கட்டுரையின் முக்கியமான அம்சங்களை பாருங்கள்: ஜெயலலிதாவை சிதைக்கும், சித்தியை சிறைக்கும் அனுப்பிவிட்ட, போயஸ் கார்டனின் மாஜி கூர்க்கா ஒன்று தனக்குத்தானே, மக்கள் செல்வர் என நேம் போர்டு மாட்டிக் கொண்டு அலைகிறது.
   புதுச்சேரியில் தனிக்குடித்தனம் போனதால், கார்டனில் இருந்து விரட்டப்பட்டு பத்தாண்டு காலம் மும்பைக்கும், சென்னைக்கம், புதுவைக்குமாக பகலில் தூங்கித் திரிந்த ***விற்கு கடந்த டிசம்பரில் அடித்தது பம்பர் பரிசு.

   ஒரு கோடிக்கு தின்றார்கள்

   ஒரு கோடிக்கு தின்றார்கள்

   மந்திரிகளை தன் வீட்டு மந்தியாக மாற்றத் துடித்ததில் மண் விழுந்த ஆத்திரம் தலைக்கேறி அலைகிறது அது. "உன்னை மெட்ராஸுக்குள் பார்த்தால் என்கவுண்டர் செய்துவிடுவேன்" என்று ஜெயலலிதா சொன்னாரா இல்லையா சொல். அதன்பிறகு திருவேற்காடு கதைகளைப் பேசுவோம். ஜெயலலிதாவை அடுத்த ரூமில் படுக்க வைத்துவிட்டு, ஒரு கோடி ரூபாய்க்கு தின்றவர்கள்- உயிரோடு இருக்கும்போது எவ்வளவு தின்றாய் என்று கேட்டால் உறைக்கிறதா?

   டூத் பேஸ்ட்

   டூத் பேஸ்ட்

   நான் மறுபடியும் ஆர்.கே.நகரில்தான் போட்டியிடுவேன் என்று தினகரன் சொல்லட்டும். அரசியலில் இருந்து விலகுகிறேன் என்கிறாரே அமைச்சர் ஜெயக்குமார். 'டூத் பேஸ்ட் அழகன்' ஏன் இன்னும் பதில் சொல்லவில்லை. தலைவர் கலைஞர், எம்எல்ஏ ஆவதற்கு முன்பே கோபாலபுரத்தில் வீடு வாங்கிவிட்டார். ரூ.28 கோடி அபராதம் போடும் அளவுக்கு நீ பார்த்த தொழில் என்ன? 2ஜியில் குற்றமற்றவர் என விடுதலைத் தீர்ப்பு வந்தது. உங்கள் வீட்டு 3ஜிக்களும் ஜெயிலில் இருப்பது குற்றம் நிரூபிக்கப்பட்டதால். இந்த கோகுலத்து இந்திரன் இன்னமும் வெளியில் இருப்பது தீர்ப்புகள் வராததால்!

   விசாரணை அடுப்பு

   விசாரணை அடுப்பு

   ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அவர் மரணமடைந்த நேரத்தில் இருந்தே சொல்லி வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். மர்மம் விலகினால் குடும்பம் உள்ளே போக வேண்டுமே என்ற ஆத்திரத்தில் நிதானம் தவறி தலையால் நடக்கிறது அது. திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெ. மரணத்தின் மர்மம் விலகும். 'மருந்தே கொடுக்காமல்' கொன்றவர்கள்- 'மருந்து கொடுத்தும்' கொன்றவர்கள்- அழிக்க யாகம் நடத்தியவர்கள்- அபகரிக்க யாகம் நடத்தியவர்கள்- கேரளாவில் இருந்தாலும், கர்நாடகாவில் இருந்தாலும், இழுத்து வரப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். விசாரணை அடுப்பு மூட்டப்பட்டால் அயிரை மீன் என்னவாகும் என்பது அப்போது தெரியும்! இவ்வாறு விளாசியுள்ளது, முரசொலி.

   திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   மேலும் சென்னை செய்திகள்View All

    
    
    
   English summary
   The DMK party organ, Murasoli slam TTV Dinakaran for his comment on KArunanidhi family. Earlier party chief MK Stalin has also spoke against Dinakaran.

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   Notification Settings X
   Time Settings
   Done
   Clear Notification X
   Do you want to clear all the notifications from your inbox?
   Settings X
   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more