செல்லாது செல்லாது.. கொளத்தூர் தேர்தலில் எங்களுக்கு டவுட்! நாங்க கோர்ட்டுக்கு போறோம்.. திமுக அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொளத்தூர் தொகுதியில் 8 வாக்கு என்னும் இயந்திரங்களில் 3 இயந்திரங்கள் வேலை செய்யவில்லை. ஆகவே அடுத்தகட்டமாக தேவைப்பட்டால் நிச்சயம் உயர் நீதிமன்றத்தில் அல்லது உச்ச நீதிமன்றத்திலோ நாடுவோம் எனவும், வாக்குச்சாவடி 75ல் ஒவ்வொரு இயந்திரங்களிலும் சீல் ஒட்டப்பட்ட அடையாள எண் மாறுபட்டிருந்தது, 157வது வாக்கு சாவடியில் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் மூன்று பேலட் யூனிட் மற்றும் ஒரு கண்ட்ரோல் யூனிட் ஆகியவற்றில் உள்ள முகவரி டேக் புத்தம் புதிதாக உள்ளது என திமுகவின் என்ஆர் இளங்கோ கூறியுள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அளித்த மனுவின் அடிப்படையில், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பாதுகாப்பு கிடங்கில் கொளத்தூர் தொகுதி மின்னணு வாக்கு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணி நான்காவது நாளாக இன்று நடைபெற்றது.

இந்நிலையில், மின்னணு வாக்கு இயந்திரங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை கண்டித்து திமுக சட்டத்துறை மாநில செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான என்ஆர் இளங்கோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

DMK NR Elango EVM

கொளத்தூர் தேர்தல்

அப்போது பேசிய அவர்," திராவிட முன்னேற்றக் கழகம் 2021 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த போதிலும் வாக்கு என்னும் இயந்திரங்களின் சந்தேகத்தை போக்குவதற்காக சரியாக இயங்குகிறதா என்பதற்காக 2024 ம் ஆண்டு இது தொடர்பாக ரிட் மனு அளிக்கப்பட்டது.

இவிஎம், விவிபேட்

தமிழகத்தில் ஐந்து தொகுதிகளில் வாக்கு சரிபார்ப்பு முறை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். கொளத்தூர், காஞ்சிபுரம், ராஜபாளையம் இந்த மூன்று தொகுதிகளில் இந்த சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரத்தில் 10 வாக்கு எண்ணும் இயந்திரங்கள் சரி பார்க்க வேண்டும் என்று கூறி இருந்த நிலையில் அதில் ஒரு VVPAT இயந்திரம் செயல்படவில்லை என்று கூறினார்கள்.

கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதியில் 30ஆம் தேதி சரி பார்க்கப்பட்ட ஒன்றின் VVPAT சரி செய்யவில்லை.. ஆகையால் அவை பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல் நேற்றைய தினமும் அதே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள். தற்போது இன்று சிந்தாதிரிப்பேட்டை வாக்கு எண்ணும் மையத்தில் அடுத்த இரண்டு இயந்திரங்களை பார்வையிடுவதற்காக வந்தபோது வாக்குச்சாவடி 75ல் ஒவ்வொரு இயந்திரங்களிலும் சீல் ஒட்டப்பட்டு அதன் அடையாள எண் குறிப்பட்டிருக்கும். ஆனால் தற்போது எண்கள் மாறுபட்டிருந்தது.

வாக்கு எண்ணும் இயந்திரங்கள்

157வது வாக்கு சாவடியில் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் மூன்று பேலட் யூனிட் மற்றும் ஒரு கண்ட்ரோல் யூனிட் ஆகியவற்றில் உள்ள முகவரி டேக் புத்தம் புதிதாக உள்ளது. ஆகவே வாக்கு எண்ணும் இயந்திரங்கள் சரியாக பாதுகாக்கப்படவில்லை மற்றும் சரியாக பயன்படுத்தவில்லை என்பது அறிவியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் இந்த உண்மையை தெரிந்து கொள்ள முடிந்தது.

வாக்கு மறு எண்ணிக்கை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்த நிறுவனத்தில் இருந்து வந்திருக்கக் கூடிய அதிகாரிகளிடம் 19 கேள்விகளுக்கு பதில் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். வாக்கு மறு எண்ணிக்கை செய்யப்பட்ட முழு வீடியோ ஒரு சான்றிதழ் உடன் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு இயந்திரம் சரிவர இயங்கவில்லை. ஆகவே தேர்தல் மொத்த நடைமுறைகளிலும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

நீதிமன்றம் செல்கிறோம்

இந்த தேர்தல் சரியான முறைப்படி நடைபெறவில்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கொளத்தூர் தொகுதியில் 8 வாக்கு என்னும் இயந்திரங்களில் 3 இயந்திரங்கள் வேலை செய்யவில்லை. ஆகவே அடுத்தகட்டமாக தேவைப்பட்டால் நிச்சயம் உயர் நீதிமன்றத்தில் அல்லது உச்ச நீதிமன்றத்திலோ நாடுவோம்" என என்ஆர் இளங்கோ தெரிவித்தார்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+