சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இஸ்‌ரேல் செல்வதாக முதல்வர் கூறுவது வேடிக்கை..மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    MK Stalin gives 2 day deadline for cm edappadi palanisami

    சென்னை: உள்ளூரில் நீரைச் சேமிக்க முடியாமல் நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேல் செல்கிறேன் என முதலமைச்சர் கூறுவது வேடிக்கை மிகுந்த வினோதம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

    கொள்ளிடம் ஆற்றிலிருந்து கடலில் கலந்து வீணாகும் 20,000 கன அடி தண்ணீர் பற்றி தமிழக அரசு கவலைப்படாதது மிகுந்த வேதனையளிப்பதாக கூறியுள்ளார். திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட காவிரி கால்வாய் தூர்வாரும் திட்டத்தை அதிமுக அரசு கைவிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

    dmk president m.k.stalin statement about tamilnadu govt water management

    ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி.தண்ணீரை தேக்கி வைக்க நாகை-கடலூர் மாவட்டங்களுக்கு இடையில் ரூ.480 கோடி செலவில் கதவஐ மற்றும் தடுப்பணை கட்டும் திட்டம் ஒன்றை அறிவித்தார் என்றும், ஆனால் அறிவிப்பு வந்து 5 வருடங்களுக்கு மேலாகியும் அதிமுக அரசு எந்த பணியையும் முன்னெடுக்கவில்லை என கூறியிருக்கிறார்.

    துரைமுருகன் மகனுக்கு அடித்த ஜாக்பாட்... சென்னை கோட்டத்தில் முக்கிய பதவிதுரைமுருகன் மகனுக்கு அடித்த ஜாக்பாட்... சென்னை கோட்டத்தில் முக்கிய பதவி

    நானும் ஒரு விவசாயி என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லும் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு சாதகமான திட்டங்களை படுகுழியில் தள்ளி மண்ணை போட்டு மூடுவதிலேயே கவனமுடன் இருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், நீர் மேலாண்மையில் அதிமுக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

    பொதுப்பணித்துறையில் பல்வேறு பொறுப்புகளுக்கு பொறியாளர்கள் நியமிக்கப்படாமல் காலியாக உள்ளதாக தமக்கு செய்திகள் வருவதாகவும், பிறகு எப்படி அந்தத் துறையில் பணிகள் நடைபெறும் எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார். முதலமைச்சர் வசம் உள்ள பொதுப்பணித்துறையில் பொறியாளர்கள் மாற்றலில் தொடங்கி பதவி உயர்வு வரை லஞ்ச லாவண்யம் தலை விரித்தாடுவதாகவும் சாடியிருக்கிறார்.

    குடிமராமத்து பணிகள் என்று கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி, அது அதிமுகவினர் கமிஷன் அடிக்கும் பணியாக நடைபெறுவதாகவும், ஜெயலலிதா அறிவித்த கொள்ளிடத்தில் தடுப்பணை திட்டத்தையாவது தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என தாம் கேட்டுக்கொள்வதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

    English summary
    dmk president m.k.stalin statement about tamilnadu govt water management
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X