சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நான் கேள்வி கேட்டால்... முதலமைச்சர் கோபப்படுகிறார் -மு.க.ஸ்டாலின்

Google Oneindia Tamil News

Recommended Video

    நான் கேள்வி கேட்டால்.. முதலமைச்சர் கோபப்படுகிறார் -மு.க.ஸ்டாலின் | MK Stalin slams CM Edappadi

    சென்னை: பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் தாம் கேள்வி கேட்டால், முதலமைச்சர் பழனிசாமி கோபப்படுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

    குழந்தை சுஜித் மரணம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கோபத்தில் "அனைத்தும் பொய்" என ஒரே போடாகப் போட்டுவிட்டு முதலமைச்சர் கடந்து போகக் கூடாது.

    ஏன்டா என்னை தனியா விட்டுட்டு போனே.. தம்பி படத்தையே பார்த்து கொண்டிருக்கும் சுஜித் அண்ணன்!ஏன்டா என்னை தனியா விட்டுட்டு போனே.. தம்பி படத்தையே பார்த்து கொண்டிருக்கும் சுஜித் அண்ணன்!

    சாமானியன்

    சாமானியன்

    "ஸ்டாலின் என்ன விஞ்ஞானியா?" என்று அர்த்தமற்ற கேள்வியைக் கேட்கிறார்; தனது தோல்வியை மறைக்க தவியாய்த் தவிக்கிறார். நான் ஒன்றும் ஒரு விஞ்ஞானியின் கோணத்தில் கேள்வி கேட்கவில்லை; சாதாரண அறிவு கொண்ட சாமானியனாகத்தான் என்னுள் எழுந்த சந்தேகத்தைக் கேட்டேன்.

    எதிர்பார்க்க முடியாது

    எதிர்பார்க்க முடியாது

    ஏதோ ஒரு "கற்பனை உலகில்" மிதக்கும் முதலமைச்சரிடமிருந்து உண்மையை எதிர்பார்க்க முடியாதுதான். நான் எழுப்பிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளைப்போலவே; இன்றைய தினம் (30.10.2019) தினத்தந்தி குழுமத்திலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழான "DT நெக்ஸ்ட்", "ஒரு குழந்தையின் உயிரைக் காவு கொடுத்த தவறுகள்" என்ற தலைப்பில் கேள்விகள் எழுப்பி கட்டுரை வெளியிட்டுள்ளன. இதற்காக அந்தக் குழுமத்தின் மீது முதல்வர் எரிந்து விழுவாரா?

     கால விரயம்

    கால விரயம்

    "ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்த குழந்தைகளை மீட்கும் அனுபவம் தேசியப் பேரிடர் மீட்புப் படைக்கு இல்லை. எங்களுக்கு இதுதான் முதல் அனுபவம்" என்று அந்தப் படையின் செய்தித் தொடர்பாளரே பேட்டியளித்திருப்பது, மேலும் அதிர்ச்சியளிக்கிறது. "அனுபவம் இல்லாத தேசியப் பேரிடர் மீட்புப் படையை நம்பி அழைத்து, காலத்தை விரயம் செய்ததற்குப் பதிலாக, ராணுவத்தையோ, துணை ராணுவத்தையோ அழைக்காதது அ.தி.மு.க. அரசின் தோல்விதானே?" என்ற கேள்வியும் இயல்பாக எழத்தான் செய்கிறது.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    மாநிலத்தின்- நாட்டின் - அந்த வீட்டின் எதிர்காலமாக இருந்த சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்பதில் படுதோல்வி கண்டுள்ள தங்களின் பதிலையும் விளக்கத்தையும் அறிந்து கொள்ள நான் மட்டுமல்ல - ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனைக் காப்பாற்றத் தவறியதில் அ.தி.மு.க .அரசின் மீது கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தமிழ்நாட்டு மக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

    English summary
    dmk president mk stalin slams cm edappadi palanisami
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X