அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு! ஸ்டாலின் சொன்ன மேஜர் அறிவிப்பு! திமுக சிக்ஸர் வாக்குறுதி
சென்னை: அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு உடனே வழங்கப்படும், அரசு ஊழியர்களுக்கான காலி பணியிடங்கள் உடனே நிரப்படும், அதற்கான தேர்வுகள் வாரியாக பணியிடங்கள் நிரப்பப்படும், என்று முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தனி செயலி மூலம் பெறப்பட்ட கருத்துக்களை வைத்து தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டது. திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் குழு உருவாக்கப்பட்டது. திமுக தேர்தல் அறிக்கை செயலி, வாட்ஸ்அப், சமூக வலைத்தளங்கள் வழியாக கருத்துகள், பரிந்துரைகளைச் சேகரித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது.

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்கள் (விவசாயிகள், வணிகர்கள், தொழில் அதிபர்கள் உட்பட) கருத்துக்களைப் பெற ஜனவரி 3, 2026 சனிக்கிழமை புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டது. இக்குழுவில், திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், திமுக சொத்து பாதுகாப்புக் குழுச் செயலாளரும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா, திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா முன்னாள் எம்.பி., திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், திமுக சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, திமுக மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு) ஜி.சந்தானம், கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம்பெற்றனர்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் பின் வரும் வாக்குறுதிகளை வழங்கி உள்ளது:
காலை உணவு திட்டம் விரிவாக்கம் : 8ம் வகுப்பு வரை விரிவு செய்யப்படுகிறது
உயர்கல்வி படிக்கும் 35 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்
இல்லத்தரசி கூப்பன் என்ற பெயரில் 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பனைப் பயன்படுத்தி வாஷிங் மெஷின், டி.வி., ஃபிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை, வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக்கொள்ளலாம் அல்லது ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு புதிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் 10 புதிய டைடல் பார்க் அமைக்கப்படும்
திருச்சி, மதுரை, சேலம் அருகில் புதிய நகரங்கள் உருவாக்கப்படும்
மகளிர் உரிமை தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்
விவசாயிகளுக்கு நவீன பாம்பு செட் அமைத்து தரப்படும்
புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்ட தொகை 1500 ரூபாயாக உயர்வு செய்யப்படும்
சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்
மத்திய - மாநில உறவு தொடர்பான நீதிபதி குரியன் ஜோசப் அறிக்கை நாடு முழுக்க எடுத்து செல்லப்படும்
சுய உதவிக்குழுவிற்கு பிணியின்றி ரூ.5 லட்சம் கடன்
அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு உடனே வழங்கப்படும், அரசு ஊழியர்களுக்கான காலி பணியிடங்கள் உடனே நிரப்படும், அதற்கான தேர்வுகள் வாரியாக பணியிடங்கள் நிரப்பப்படும், என்று முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications