மக்கள் தந்த பெரிய வரவேற்பு.. அறிவாலயத்தில் அதிரடி மாற்றம்! உதயநிதி கைக்குச் செல்லும் புதிய பவர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எதிர்பாராத பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தை அடிமட்டம் முதல் கட்சித் தலைமையகம் வரை முழுமையாக மறுசீரமைக்கும் பணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக இறங்கியுள்ளார்.

தேர்தல் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து, அமைப்பை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட சிறப்புச் சீரமைப்புக் குழு, தனது விரிவான ஆய்வறிக்கையை அண்மையில் தலைமைக்குச் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில், தோல்விக்குக் காரணமான கிட்டத்தட்ட 20 மாவட்டச் செயலாளர்களின் பதவிகளைப் பறிக்க வேண்டும் என்றும், ஒரு மாவட்டச் செயலாளரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்றும் மிகக் கடுமையான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

DMK restructuring committee

தலைமை தயங்குவது ஏன்?

இருப்பினும், சீரமைப்புக் குழுவின் இந்தப் பரிந்துரைகளை உடனடியாகச் செயல்படுத்துவதில் திமுக தலைமைக்குச் சில அரசியல் தயக்கங்கள் நிலவுகின்றன. இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்களும், இடைத்தேர்தல்களும் வரவிருக்கும் நிலையில், இந்தச் சமயத்தில் மாவட்டச் செயலாளர்களை அதிரடியாக மாற்றினால் அது கட்சிக்குள் பெரும் கொந்தளிப்பையும் உட்கட்சிப் பூசலையும் உருவாக்கக்கூடும் என மூத்த தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

தேர்தல் களத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழலில், கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பை உடைப்பது பின்னடைவை ஏற்படுத்தலாம் என்பதால், இந்தப் பரிந்துரைகள் மீதான இறுதிக்கட்ட முடிவை தலைமை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உதயநிதிக்குக் குவியும் புதிய அதிகாரம்!

இந்தச் சிக்கலான அரசியல் சூழலில்தான், கட்சியின் மிக முக்கிய முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரத்தையும் உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைக்க மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியைக் காலத்திற்கு ஏற்ப புதுப்பிப்பதற்கும், இளைஞர்களை அதிகளவில் உள்வாங்குவதற்கும் உதயநிதியின் அதிரடி முடிவுகள் உதவும் என தலைமை கருதுகிறது.

இதற்கிடையே, தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமைப் போராட்டத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி சென்னையில் கைது செய்யப்பட்டு, தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட உதயநிதி ஸ்டாலின் அன்று மாலையே ஸ்டேஷன் பிணையில் விடுவிக்கப்பட்டார். விடுதலையான பிறகு தஞ்சாவூரில் அவருக்குத் திரண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அளித்த பிரம்மாண்ட வரவேற்பு, திமுக வட்டாரத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் எகிறும் ஆதரவு

தஞ்சாவூர் வரவேற்பு நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை திமுக தொண்டர்களும், இளைஞரணியினரும் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி, தங்கள் கட்சிக்குச் சாதகமான அரசியல் அலையை உருவாக்கி வருகின்றனர்.

கைது நடவடிக்கைக்குப் பின் தொண்டர்களிடம் கிடைத்த இந்த ஆதரவு அலை, உதயநிதி ஸ்டாலினின் அரசியல் செல்வாக்கை வெகுவாக உயர்த்தியுள்ளது.

முக்கியப் பொறுப்பை நோக்கி உதயநிதி!

தொண்டர்கள் மத்தியிலும், கட்சி நிர்வாகிகளிடத்திலும் உதயநிதிக்கு உருவாகியுள்ள இந்த மாஸ் பிம்பத்தையும், வரவேற்பையும் சாதகமாகப் பயன்படுத்தி, அவரை கட்சியின் மிக முக்கிய அதிகாரப் பொறுப்பில் அமர்த்தத் திட்டமிடப்பட்டு வருகிறது. அதே போல் இதுவரை அரசு பாதுகாப்பு மற்றும் குடும்பப் பின்னணியின் நிழலில் செயல்பட்டு வந்த உதயநிதிக்கு, இந்த கைது சம்பவம் ஒரு அரசியல் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்குத் தேவையான அரசியல் வடுக்களையும் போராட்ட அனுபவத்தையும் இந்த நிகழ்வு அவருக்கு வழங்கியுள்ளது.

இதன் மூலம் உதயநிதிக்கு தேவையான மைலேஜ், கட்சி ஆதரவு, தொண்டர்கள் ஆதரவு என்று அனைத்தையும் அள்ளிக்கொடுத்துள்ளார் விஜய்!

திமுகவை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லவும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களை வலுவாக எதிர்கொள்ளவும் உதயநிதி ஸ்டாலினின் இந்த புதிய அதிகாரம் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+