Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திராவிடர்கள் யார் தெரியுமா? ஆளுநர் ரவி சொன்ன ஸ்டேட்மென்ட்.. இதுதான் உண்மை.. விளக்கம் தந்த திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வரும் கருத்தரங்கில் பங்கேற்று பேசிய ஆளுநர் திராவிடம் குறித்து கூறியிருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் அவரது கருத்துக்கு பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆளுநரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விளக்கமளித்துள்ளார் திமுகவின் ராஜீவ் காந்தி.

இது குறித்து அவர் டிவிட்டரில் எழுதியுள்ள பதிவு வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

திராவிட மாடல்

திராவிட மாடல்

வடமாநிலங்களில் பரவலாக நீடித்து வரும் தீண்டாமை கொடுமை, சமூக ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் மக்களின் வாழ்வாதாரம் எவ்வளவோ பரவாயில்லை என்கிற அளவில் இருக்கிறது. இதனை மத்திய அரசின் புள்ளிவிவரங்களும் உறுதி செய்து வருகின்றன. இவ்வாறு இருக்கையில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் திராவிட மாடல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் திராவிட மாடல் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே பாரதம்

ஒரே பாரதம்

கிண்டி ஆளுநர் மாளிகையில் ஒரே பாரதம்! உன்னத பாரதம்!! இணைக்கும் பாரதம் தொடர் எனும் தலைப்பில் கருத்தரங்கம் இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கை தொடக்கி வைத்து உரையாற்றிய ஆளுநர், "ஆங்கிலேயர்கள்தான் இந்தியாவை இணைத்தனர் என பலர் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை இல்லை, இந்தியா என்பது எப்போதும் ஒருவர் ஆட்சிக்கு கீழ் இருந்தது இல்லை. ஆங்கிலேயர்கள் 1905ஆம் ஆண்டு வங்கத்தை மேற்கு வங்கம், கிழக்கு வங்கம் என மத அடிப்படையில் பிரித்த நேரத்தில் தமிழகத்தில் வா.உ.சி, பாரதியார் போராடினார்கள்.

 பாரதம்

பாரதம்

இந்தியாவை தெரிந்துகொள்ள புரிந்து கொள்ள வேண்டும் என்றால் பாரதம் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பாரதம் என்பது பல்வேறு கலாச்சாரங்களை அடிப்படையில் கொண்டது. ஆனால் பாரதம் என்பது யாரோ ஒருவரின் கீழ் இருப்பதில்லை அது எப்போதும் தர்மத்தை கடை பிடிப்பதாக இருந்தது. அரசர்கள் தர்மத்தை மீறினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1956ஆம் ஆண்டு வரை மதராஸ் மாகாணமாக இருந்தது. அதன் பின் மொழி அடிப்படையில் கேரளா,கர்நாடக,ஆந்திரா அதிலிருந்து தற்போது தெலுங்கானா என அரசியலுக்காக மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டது.

தமிழ்

தமிழ்


பல நூறு ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்தவர்கள் நான், நீ என தற்போது பேசி வருகின்றனர், தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு தெலுங்கானா,கர்நாடகா,ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியதுதான் ஆனால் தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறப்பட்டு வருகிறது.

அரசியல் கட்சிகள் நம்முடைய பார்வையை குறுக்கி உள்ளன. அவர்கள் தங்களின் அதிகாரத்கிற்காக மொழி அடிப்படையிலும்,சாதி அடிப்படையிலும், சாதியின் உள் உள்ள உட்கட்டமைப்புகளை வைத்து அரசியல் செய்வார்கள். ஆனால் அனைவருக்கும் இடையே உள்ள கலாச்சாரம் மற்றும் ஆன்மிக ஒற்றுமைதான் இந்தியா." என்று கூறியிருந்தார்.

விளக்கம்

விளக்கம்

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள திமுகவின் தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, "அந்த நிலங்களின் மூத்த தாய் மொழி தமிழ். அதில் இருந்துதான் தெலுங்கு, கண்டம், மலையாளம், துளு, கோண்டு, ராஹ்மகால் போன்ற மொழிகள் பிரிந்தன! இனத்தால்,நிலத்தால் நாங்கள் திராவிடர்கள். மொழியால் தமிழர் அதில் இருந்து பிரிந்த தெலுங்கர்,கண்டர்,மலையாளிகள்" என்று விளக்கமளித்துள்ளார்.

திராவிடம் எனும் கோட்பாட்டை பாஜக உள்ளிட்ட வலதுசாரி கட்சிகளும் அமைப்புகளும் அழிக்க முற்படுகின்றன என்றும் திமுக தரப்பில் தொடர் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+