திமுகவில் மீண்டும் மு.க. அழகிரி? சென்னையில் முக்கிய பேச்சுவார்த்தை?
சென்னை: திமுகவில் மீண்டும் மு.க. அழகிரியை சேர்ப்பது தொடர்பாக சென்னையில் ஒரு இடத்தில் முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video

திமுகவில் இருந்து 7 ஆண்டுகளுக்கு முன்னதாக, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் நீக்கப்பட்டார் அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி. கருணாநிதி மறைவுக்குப் பின் திமுகவில் இணைவதற்கான முயற்சிகளை அழகிரி மேற்கொண்டார்.

பிரம்மாண்ட ஆலோசனை
ஆனால் இந்த முயற்சிகள் கைகூடவில்லை. இதனால் அண்மையில் மதுரையில் தமது ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டி பிரம்மாண்ட ஆலோசனை கூட்டத்தை அழகிரி நடத்தினார்.

அழகிரி தனிக்கட்சி முயற்சி
இந்த கூட்டத்தில் கலைஞர் திமுக எனும் தனிக் கட்சியை அழகிரி தொடங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி இருந்தனர். ஆனால் இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் அழகிரி தரப்பு திடீரென அமைதியானது.

சென்னை பேச்சுவார்த்தை
மேலும் இதுவரை அழகிரி பெயரையே உச்சரிக்காமல் தவிர்த்து வந்த திமுக தரப்பு திடீரென பல்வேறு சூழ்நிலைகளில் அவரது பெயரை குறிப்பிட தொடங்கியது. இந்த நிலையில் சென்னையில் ஒரு இடத்தில் மு.க. அழகிரியை திமுகவில் மீண்டும் இணைப்பது தொடர்பான முக்கியமான பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேர்தல் களத்தில் பரபரப்பு
சென்னையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் பல முக்கியமான நபர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. சட்டசபை தேர்தல் களத்தில் இந்த பேச்சுவார்த்தை மிக முக்கியமான பரபரப்பானதாக இருக்கும் என கூறப்படுகிறது.
-
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!










Click it and Unblock the Notifications