அப்பாவிடம் செல்லக் கோபம்.. உதயநிதிக்கு ஓகே சொன்ன ஸ்டாலின்! உடையும் ‘மாஜிகள்’ கோட்டை.. திகுதிகு திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு திமுகவில் அமைப்பு ரீதியாக பல மாற்றங்களை செய்ய நினைத்திருந்தார் மு.க.ஸ்டாலின். குறிப்பாக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க திட்டமிட்டு இருந்தார். ஸ்டாலினின் லண்டன் பயணத்தால் இந்த திட்டம் தள்ளிப் போயிருந்த நிலையில் தற்போது அதனை செயல்படுத்த முடிவெடுத்திருக்கிறார் என்கின்றனர். இதில் உதயநிதியின் பங்கு மிக அதிகம் என்கின்றனர் திமுக உடன் பிறப்புகள்.

2026 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக ஆளும் கட்சியாக இருந்தபோதே தோல்வி அடைந்தது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினின் தோல்வியை திமுகவினரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

Udhayanidhi Stalin

தமிழக அரசியலில் நீண்ட காலமாக ஆட்சியையும், கட்சியையும் வலுவாக நடத்தி வந்த திமுக, சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பாராத பின்னடைவை சந்தித்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியால் ஆட்சியை இழந்தது.

திமுக

இந்த நிலையில், தோல்விக்கான காரணங்களை ஆராய்வதோடு மட்டுமல்லாமல், கட்சியின் அடித்தள அமைப்பையும் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இருந்ததை திமுக தலைவர் முக ஸ்டாலின் உணர்ந்ததாக சொல்கின்றனர் திமுகவினர். இதற்காகவே தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 36 பேர் கொண்ட சிறப்பு கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள், முன்னணி உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களிடம் கருத்துக்களை சேகரித்தது.

மு.க.ஸ்டாலின்

இந்த ஆய்வுக் குழு தனது விரிவான அறிக்கையை விரைவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது. தற்போது உள்ள 78 மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தும் திட்டத்தை திமுக தலைமை மீண்டும் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சில திமுக புள்ளிகள்," தற்போது சில மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டில் நான்கு முதல் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகள் வரை உள்ளன.

திமுக மாவட்ட செயலாளர்கள்

இதனால், ஒவ்வொரு பகுதியையும் நேரடியாக கண்காணிப்பதிலும், அடிமட்ட நிர்வாகிகளை ஒருங்கிணைப்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, கிராமங்கள் மற்றும் வார்டு அளவிலான கட்சி பணிகள் பல இடங்களில் சீராக நடைபெறவில்லை என்ற புகார்கள் அதிகமாக முன்வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட செயலாளர்களுக்கு அதிக பொறுப்புகள் இருப்பதால், எல்லா பகுதிகளிலும் சம அளவு கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மறுசீரமைப்பு

இந்த சூழலில், பெரிய மாவட்டங்களை இரண்டாக அல்லது மூன்றாக பிரித்து புதிய அமைப்பு மாவட்டங்களை உருவாக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாவட்ட செயலாளரின் கீழ் இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் மட்டுமே இருக்கும் வகையில் மறுசீரமைப்பு செய்யப்படலாம் என்னர். மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்பட்டால், தற்போது பதவி கிடைக்காமல் காத்திருக்கும் பல இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இளைஞர் அணியினர்

கடந்த சில ஆண்டுகளாக மாவட்ட செயலாளர் பதவிக்காக காத்திருக்கும் பலரும் இந்த மாற்றத்தை வரவேற்கும் நிலையில் இருந்தனர். புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதால் இளைஞர் அணியினருக்கும், கட்சிக்காக நீண்ட காலமாக பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கிடையே இந்தத் திட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.

தமிழக வெற்றி கழகம்

திமுக தலைவர் ஸ்டாலின் லண்டன் பயணத்தால் தான் தாமரம் ஏற்பட்டதாகவும், தற்போது பலரும் அதிருப்தி அடைந்து தமிழக வெற்றி கழகத்திற்கு சென்று வருவதால், திமுக அரசியல் ரீதியாக ரீதியாக பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக இந்த திட்டத்தை செயல்படுத்த ஸ்டாலின் திட்டமிட்டு இருக்கிறார் என்கின்றனர். மேலும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என திமுக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் ஆன உதயநிதி ஸ்டாலின் தனது தந்தையும் திமுக தலைவர் ஆன ஸ்டாலினிடம் வலியுறுத்தி இருந்தார்.

மூத்த தலைவர்கள் அதிருப்தி

இதை அடுத்து திமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு இறுதி அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் பல ஆண்டுகளாக நான்கு முதல் ஐந்து சட்டமன்ற தொகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்த மூத்த தலைவர்கள் அதிருப்தி அடையலாம் என்பதால் அவர்களை சமாதானப்படுத்தும் படலமும் அரங்கேறி உள்ளது என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+