இது லிஸ்ட்லயே இல்லையே.. அதிமுகவிற்கு கூட்டாக செக் வைத்த விஜய் + திமுக.. எதிர்பார்க்காத எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசியலில் அதிரடி திருப்பங்கள் நடக்க தொடங்கி உள்ளன. இன்று நடக்க உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தொடக்க விழா பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரு மூவ் காரணமாக அதிமுக தரப்பு அப்செட்டில் இருக்கிறதாம்.

பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் பிரஷாந்த் கிஷோர் இப்போது வெளிப்படையாக பணிகளை செய்வது இல்லை. அவரின் நிறுவனம் மட்டுமே பணிகளை செய்கிறது. அந்த நிறுவனத்தின் நிறுவனர் இப்போதும் பிரஷாந்த் கிஷோர்தான்.

aiadmk edappadi palaniswami

பிரஷாந்த் கிஷோர்

அவர் நேரடியாக பணிகளை செய்ய மாட்டார். ஏனென்றால் அவர் தனியாக அரசியல் கட்சி நடத்தி வருகிறார். ஆனாலும் பிரஷாந்த் கிஷோர்தான் தேர்தல் திட்டங்களை ஐபேக் நிறுவனத்திற்காக வகுத்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த நிறுவனத்துடன் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளாராம்.

aiadmk edappadi palaniswami

ஏற்கனவே இதற்கான ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் விஜய் நடைபயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தவெக நிகழ்ச்சியில் முதல்முறையாக கலந்துகொள்கிறார் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் பிரஷாந்த் கிஷோர் உடன் நடந்த சந்திப்பில் நடிகர் விஜயிடம் அவர் முக்கியமான ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. .. விஜயை சந்தித்த பிரஷாந்த் கிஷோர்.. தமிழ்நாட்டில் திமுக அதிமுகவின் வாக்கு வங்கி சேர்த்து மொத்தமாக 60-70% உள்ளது. ஆனால் விஜய் இதை 60%க்கும் கீழ் கொண்டு வருவார். விஜயின் கட்சிக்கு மட்டுமே மட்டுமே அதிமுக - திமுகவின் கூட்டு வாக்கு வங்கியை உடைக்கும் சக்தி உள்ளது என்று பிகே கூறி உள்ளாராம்.

aiadmk edappadi palaniswami

சுதாரித்த திமுக

இன்னொரு பக்கம் திமுக சுதாரித்துக்கொண்டு முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது.

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்த ராபின் சர்மாவின் Showtime நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Showtime நிறுவனம் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்தது. அங்கே சிவசேனாவுடன் இரண்டு பிரிவுகள் இடையே கடுமையான மோதல் நிலவியது. அதிலும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவே வலிமையாக இருந்தது. அதை மீறி ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்து அந்த கட்சியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அந்த நிறுவனத்துடன் ஆளும் திமுக ஆலோசனை செய்து வருகிறதாம்.

aiadmk edappadi palaniswami

இதே அமைப்புதான் ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு சந்திரபாபு நாயுடுவிற்காக பணியாற்றியது. அங்கேயும் சந்திரபாபு நாயுடு வெற்றிபெற இந்த அமைப்பு காரணமாக இருந்தது. இதே குழுவுடன்தான் இப்போது திமுக ஆலோசனை செய்து வருகிறதாம். இந்த ஒப்பந்தம் நேற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிமுக அம்பேல்

விஜய் மற்றும் திமுக இரண்டுமே கிட்டத்தட்ட பெரிய அரசியல் ஆலோசகர் குழுக்களை தங்கள் பக்கம் இழுத்துவிட்டது. திமுக Showtime தாண்டி இன்னும் சில சிறிய நிறுவனங்களையும் ஒப்பந்தம் செய்கிறது.

அதேபோல் விஜய் பிரஷாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்கிறார். ஜான் ஆரோக்கியசாமி உடன் ஒப்பந்தம் செய்கிறார். இதனால் அதிமுக யாருடனும் ஒப்பந்தம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. திமுக, தமிழக வெற்றிக் கழகத்தின் மூவ் காரணமாக அதிமுக தரப்பு அப்செட்டில் இருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+