சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது பேருந்தில் முதல்வருக்கு டிக்கெட்டா?.. விஷயமே தெரியாதா அண்ணாமலை?.. வச்சு செய்யும் திமுக

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை உறுப்பினர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் பேருந்துகளில் டிக்கெட் எடுக்க தேவையில்லை எனும் போது தமிழகத்தின் முதல்வரும், கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான ஸ்டாலின் டிக்கெட் எடுத்தாரா என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியது சமூகவலைதளங்களில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    திமுக அரசின் ஓராண்டு நிறைவு... அரசு பேருந்தில் ஏறி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர்!

    திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி கோபாலபுரம் சென்ற முதல்வர் ஸ்டாலின் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார்.

    இதையடுத்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்று கொண்டிருந்த போது அவர் அவ்வழியாக வந்த 29 சி எனும் அரசு பேருந்தை கண்டார்.

    பட்டினப்பிரவேசம் நடத்த முதல்வர் ஸ்டாலின் வாய்மொழியாக உறுதி- தருமபுரம் ஆதீனம் பரபரப்பு! பட்டினப்பிரவேசம் நடத்த முதல்வர் ஸ்டாலின் வாய்மொழியாக உறுதி- தருமபுரம் ஆதீனம் பரபரப்பு!

     காரை விட்டு இறங்கிய முதல்வர்

    காரை விட்டு இறங்கிய முதல்வர்

    உடனே காரை நிறுத்திவிட்டு அந்த பேருந்தில் பயணிகளுடன் பயணம் செய்தார். மேலும் இலவச பயணம் குறித்து நிறைகளையும் குறைகளையும் அந்த பேருந்தில் பயணம் செய்த பெண்களிடமே கேட்டுத் தெரிந்து கொண்டார். இலவச பயணம் மேற்கொள்ள ஏதுவாக அதற்குரிய பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும் என மகளிர் கோரிக்கை விடுத்தனர்.

    பஸ் பயணம்

    பஸ் பயணம்

    இந்த நிலையில் முதல்வரின் பஸ் பயணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் பேருந்தில் ஏறினாரே டிக்கெட் எடுத்தாரா என கேள்வி எழுப்பியுள்ளார். இது இணையதளத்தில் கேலிக்குரியதாகிவிட்டது.

     திமுகவினர் கிண்டல்

    திமுகவினர் கிண்டல்

    இதுகுறித்து திமுகவை சேர்ந்த ராஜீவ் காந்தி கூறுகையில், இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத அளவுக்கு பெண்களின் வருமானத்தில் 11 சதவீதம் பஸ் கட்டணத்தை இலவச பஸ் பயண அறிவிப்பின் மூலம் சேமித்து கொடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அரசியல் தெரியாத அண்ணாமலை முதல்வர் பேருந்தில் டிக்கெட் எடுத்தாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

     பயணம் செய்ய டிக்கெட் தேவையில்லை

    பயணம் செய்ய டிக்கெட் தேவையில்லை


    நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்கள் பேருந்துகளில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்கத் தேவையில்லை எனும் போது மாநிலத்தின் முதல்வர் எதற்கு டிக்கெட் எடுக்க வேண்டும். இது காலையில் நடந்தது. பின்னர் மாலையே இன்னொரு விஷயத்தையும் அண்ணாமலை பேசியுள்ளார்.

    லுலு நிறுவனம்

    லுலு நிறுவனம்

    தமிழகத்தில் லுலு நிறுவனத்தின் ஒரு செங்கல்லை கூட வைக்க விட மாட்டோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் லுலு நிறுவனம் ரூ 2000 கோடியை முதலீடு செய்துள்ளது. தமிழகத்திற்கு ஒரு நீதி, குஜராத்திற்கு ஒரு நீதியா என கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    DMk trolls BJP Annamalai for asking whether CM took ticket to travel in bus or not?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X