நீட், இந்தி திணிப்பு எதிர்ப்பு.. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்களை திணறவைத்த திமுக!
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால மற்றும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நீட் முறைகேடுகள் குறித்து விரிவாக விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று டெல்லியில் இன்று மத்திய அரசு நடத்திய அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, திருச்சி சிவா வலியுறுத்தினர். மேலும் மத்திய அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; இந்தி மொழியை திணிக்கக் கூடாது உள்ளிட்டவைகளையும் திமுக எம்பிக்கள் வலியுறுத்தினர்.
நாடாளுமன்ற மழைக்கால மற்றும் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை முதல் ஆகஸ்ட் 12-ந் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளாக நடைபெற உள்ளது. நாளை பொருளாதார அறிக்கையையும் நாளை மறுநாள் மத்திய பட்ஜெட்டையும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த மத்திய அரசு டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜுஜூ ஆகியோர் தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் தவிர பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
திமுகவின் மூத்த எம்பிக்களான டிஆர் பாலு, திருச்சி சிவா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், ரவிக்குமார் உள்ளிட்டோர் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் டிஆர் பாலு, திருச்சி சிவா இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விரிவாக விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம். அதேபோல ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றோம்.
இந்தி மொழித் திணிப்பு மூயற்சியை மத்திய அரசு கைவிட்டாக வேண்டும். இந்தியை மத்திய அரசு தீவிரமாக திணிப்பது தொடர்ந்தால் 1965-ம் ஆண்டு போல மீண்டும் ஒரு மொழிப் போராட்டம் நடப்பது தவிர்க்க முடியாததாகிவிடும் என்றோம்.
நாட்டில் தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்; இதற்கு உடனடியாக தீர்வு காணாமல் போனால் வங்கதேச நிலைமை இந்தியாவிலும் வெடிக்கும் எனவும் திமுக தலைவர்கள் டிஆர் பாலு, திருச்சி சிவா இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சுட்டிக்காட்டினர்.
மேலும் காவிரி நதிநீர் பிரச்சனை, தமிழ்நாட்டுக்கான வெள்ள நிவாரண நிதியில் பாரபட்சம், மத்திய- மாநில அரசு திட்டங்களில் மத்திய அரசின் நிதியைத் தராமல் மாநிலங்களின் தலையிலேயே கட்டுகிற போக்கு ஆகியவற்றையும் திமுக தரப்பில் திருச்சி சிவா, டிஆர் பாலு ஆகியோர் விவரித்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications