சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லோக்சபா கூட்டணி.. திமுக இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை.. புதிய கட்சிகள் இணைகிறது!

திமுக சார்பாக லோக்சபா தேர்தலுக்காக இன்று இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: திமுக சார்பாக லோக்சபா தேர்தலுக்காக இன்று இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான கட்சிகள் தீவிரமான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு வாரமாக நடக்கும் பேச்சுவார்த்தை காரணமாக தமிழக அரசியல் மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கிறது.

DMK will hold its 2nd term alliance talk with parties from today

ஏற்கனவே திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் மொத்தம் 10 லோக்சபா இடங்களில் போட்டியிட உள்ளது. இந்த நிலையில் திமுக மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

நடந்து முடிந்த பேச்சுவார்த்தையின் படி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு திமுகவில் ஒரு தொகுதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திமுக தனது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்க இருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் திமுக இன்று பேச உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இதற்கான பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது. தேமுதிகவுடனும் திமுக பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆலோசனையின் முடியில் திமுகவில் புதிய கட்சிகள் இணையும், தோழமை கட்சிகளுக்கு இடங்கள் அறிவிக்கப்படும் என்று கூறுகிறார்கள். இன்று மாலைக்குள் தொகுதி உடன்படிக்கை இதில் எட்டப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

English summary
DMK will hold its 2nd term alliance talk with parties from today. It may give some major announcement today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X