அண்ணாமலைன்னா சும்மாவா.. பாஜக ஆஃபர் தந்தும் ஏற்கலயாமே? இன்று 12 மணிக்கு என்ன நடக்க போகுதோ
சென்னை: அண்ணாமலை இன்று தன்னுடைய முடிவை அறிவிக்க போகிறார்.. தமிழக அரசியலில் எத்தனையோ திருப்பங்கள், அதிரடிகள் அரங்கேறியிருக்கின்றன. ஆனால், கடந்த சில தினங்களாக ஒட்டுமொத்த அரசியல் திசையையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறார் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை. நேற்றைய தினம் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அண்ணாமலை, இன்று நண்பகல் 12 மணிக்கு சமூக வலைதளங்களில் நேரலையில் உரையாடப் போவதாக அறிவித்திருக்கிறார். இந்த ஒரு அறிவிப்புதான் இப்போது டெல்லி முதல் சென்னை வரை பெரும் அதிர்வலைகளைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.
பாஜக தலைவராகப் பொறுப்பேற்றது முதல் அண்ணாமலையின் அரசியல் பாணி முற்றிலும் வேறாக இருந்தது. ஆனால், சமீபகாலமாக கட்சிக்குள்ளேயே அவருக்குப் பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டதாகத் தகவல்கள் கசிந்தன.

அண்ணாமலை புது கட்சி?
குறிப்பாக, அண்ணாமலைக்கு தேசிய அளவில் பெரிய பொறுப்பு வழங்கப்படும் எனப் பலமுறை இழுத்தடிக்கப்பட்டதே அவரது இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் என்கிறார்கள். தன் மீதான சங்கடங்களை விவரிக்கவும், தனக்கு வழங்கப்பட்ட 'இசட்' பிரிவு பாதுகாப்பைத் திரும்பப் பெறக் கோரியும், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவும் அண்ணாமலை நேராக டெல்லிக்குச் சென்று நிதின் நவீன், அமித் ஷா ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
விஷயம் சீரியஸாவதை உணர்ந்த பாஜக மேலிடம், அவரை சமாதானப்படுத்த முயன்றது. தமிழகத்திலும் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அண்ணாமலையுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது.
அண்ணாமலை பாஜகவை விட்டு விலகுகிறார் என்ற செய்தி பரவியதும், தமிழகத்தில் உள்ள அவரது ஆதரவு மாவட்டப் பொறுப்பாளர்கள் பலரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யத் துணிந்தனர். இந்த ஆபத்தை உணர்ந்த அமித் ஷா, மீண்டும் அண்ணாமலையை அழைத்து, "நீங்கள் தனி இயக்கம் தொடங்கினாலும் சரி, பாஜக நிர்வாகிகளை மட்டும் உங்கள் பக்கம் இழுக்கக் கூடாது" என ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவிட்டாராம்.
ரஜினி கொடுத்த அக்ரிமெண்ட்
இந்நிலையில்தான் "தமிழகத்தில் புதிதாக ஒரு கட்சி வரப்போகிறது" என 2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவைப் போட்டிருந்தார். அது அண்ணாமலையைக் குறிவைத்து போடப்பட்டதுதான் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
கரூரைச் சேர்ந்த ஒரு நபர், தேர்தல் ஆணையத்தில் "தமிழக மக்கள் கழகம்" அல்லது "தமிழக மக்கள் கட்சி" என்ற பெயரில் ஒரு கட்சியைப் பதிவு செய்ய விண்ணப்பித்திருப்பதாகவும், இந்தக் கட்சியைத்தான் அண்ணாமலை கையில் எடுக்கப் போகிறார் என்றும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
அண்ணாமலை - சூப்பர் ஸ்டார்
இதையெல்லாம் விடப் பெரிய ட்விஸ்ட், அண்ணாமலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை 3 முறை ரகசியமாகச் சந்தித்துப் பேசியிருப்பதுதான்..
விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அவரது வருகையை அண்ணாமலை மூலமாகச் சமன் செய்ய முடியும் என அந்த ஸ்டார் நடிகர் நினைக்கிறாராம். "எனக்காக நீங்கள் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும்" என்று தமிழகத்தின் சில முக்கிய அரசியல் தலைவர்களிடம் அந்த ஸ்டார் நடிகர் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், அவரிடம் சில முக்கிய உத்தரவாதங்களைப் பெற்றுக்கொண்டே அண்ணாமலை களம் இறங்குவதாகவும் விபரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
இன்னொரு தரப்போ, உடனடியாக கட்சி ஆரம்பிக்காமல், தனது "வீ லீடர்ஸ்" அறக்கட்டளையை இன்னும் 6 மாதங்களுக்குள் ஒரு பெரும் அரசியல் இயக்கமாக மாற்றி, ஆட்டோ, பேருந்து, கிரிக்கெட் மட்டை போன்ற சின்னங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அண்ணாமலை டீம் ஆழம் பார்த்து வருவதாகக் குறிப்பிடுகிறார்கள்.
பாஜகவுக்கு லாபமா? நஷ்டமா?
தமிழகத்தில் பாஜகவுக்கென்று ஒரு பிரம்மாண்டமான இளைஞர் பட்டாளத்தையும், தீவிரமான ஆதரவாளர் வட்டத்தையும் மிகக் குறுகிய காலத்தில் உருவாக்கியவர் அண்ணாமலை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதை டெல்லி மேலிடமும் நன்றாகவே உணர்ந்துள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் அண்ணாமலை முற்றிலும் பா.ஜ.க-வை விட்டு வெளியேறினால், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் பாஜக பெற்ற ஒட்டுமொத்த வளர்ச்சியும் பல ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விடும் என்று தேசியத் தலைமை பயப்படுகிறது. இதனால் பா.ஜ.க-வுக்குப் பெரும் நஷ்டமே ஏற்படும்.
அதனால்தான் அண்ணாமலையைத் தக்கவைக்க, தேசிய அளவில் ஒரு மிக முக்கிய, அதிகாரமிக்கப் பொறுப்பை வழங்க அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் முன்வந்துள்ளனர். அண்ணாமலை பாஜகவில் நீடித்தால் அது கட்சிக்கு லாபம். மாறாக, அவர் விலகித் தனிப்பாதை அமைத்தால், தமிழகத்தில் பா.ஜ.க-வின் வாக்கு வங்கி பெருமளவில் சரியக்கூடும்.
அண்ணாமலைக்கு இந்தப் பாதை சரியானதா?
அண்ணாமலைக்கு இந்தத் தனிப்பாதை ஒரு மிகப்பெரிய ரிஸ்க் & சவால் நிறைந்த ஒன்றுதான். பாஜக போன்ற ஒரு தேசியக் கட்சியின் பின்னணி இல்லாமல், திராவிடக் கட்சிகளும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் இருக்கும்போது, புதிய கட்சியைத் தொடங்கி நடத்துவது சாதாரண விஷயமல்ல.
ஆனாலும், தமிழகத்தில் பாஜக என்ற லேபிளோடு பயணிப்பதை விட, ஒரு தனித்துவமான "தமிழ்நாட்டுத் தலைவராக" தன்னை முன்னிறுத்திக்கொள்ள அண்ணாமலை விரும்புகிறார்.
பாஜகவின் பாஜகவின் இந்துத்துவா பிம்பத்தைத் தாண்டி, அனைத்துத் தரப்பு இளைஞர்களையும் ஈர்க்க இந்தத் தனிப்பாதை அவருக்கு உதவக்கூடும். அதேநேரம், டெல்லி மேலிடம் தரும் தேசியப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, பாஜகவிலேயே நீடித்தால் அவருக்குப் பாதுகாப்பான எதிர்காலம் இருக்கும்.
ஆனால், அண்ணாமலையின் ஆளுமை ரிஸ்க் எடுப்பதில்தான் இருக்கிறது. அவர் பாஜகவின் தேசியப் பொறுப்பை ஏற்கப் போகிறாரா? அல்லது கார்த்தி சிதம்பரம் சொன்னபடி புதிய கட்சியை அறிவிக்கப் போகிறாரா? வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு சமூக வலைதள நேரலையில் இதற்கான விடை தெரிந்துவிடும்!
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்!












Click it and Unblock the Notifications