விஜய் அரசுக்கு எதிராக திமுக மகளிர் அணி அதிரடி.. அக். 31ல் தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகியும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்ந்து வருகிறது. தொடர் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. சட்ட ஒழுங்கு பிரச்சனையைக் கண்டித்து அக்டோபர் 31 ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதங்களாகிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சிக்கு வந்தனர். திமுக ஆட்சியில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தவெக தீவிரமாக முன்வைத்தது. ஆனால், தவெக ஆட்சிக்கு வந்தும் காட்சிகள் மாறவில்லை. கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை தீவிரமடைந்துள்ளது.

TVK

சட்டம் ஒழுங்கு

தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு தவெக அரசைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் அக்டோபர் 31 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் விற்பனை ஆகியவை அதிகரித்து சட்டம் ஒழுங்கு பெரியளவில் சீர்கெட்டு இருப்பதோடு, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தைகள் கடத்தல் ஆகியவை மிகப்பெரிய அளவில் அதிகரித்து தமிழகத்தை பாதுகாப்பற்ற மாநிலமாக இந்த ஆட்சி கொண்டு வந்திருக்கிறது.

போராட்டம் அறிவிப்பு

இதுபோன்ற குற்றச் செயல்களில் ஆளும் த.வெ.க.வினரே பெரிய அளவில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்த அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

ஒரு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை படுகுழியில் தள்ளி உள்ள த.வெ.க. அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணியின் சார்பில் வருகிற 31.10.2026 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+