சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது லிஸ்ட்லயே இல்லையே.. மக்களின் வயிற்றில் பாலை வார்க்கும் ஸ்டாலின் அரசு.. 11 மாவட்டங்களில் சபாஷ்..!

Google Oneindia Tamil News

சென்னை: நாங்கள் மட்டும் என்ன சளைத்தவர்களா? என்ற ரீதியில் அதிரடியில் குதித்துள்ளது திமுக அரசின் அறநிலையத்துறை.. மொத்தம் 11 மாவட்டங்களில் கவனம் செலுத்தி மக்களின் வயிற்றில் பாலை வார்த்து வருகிறது.. !

ஒரு அரசு, ஒரு புதிய திட்டத்தை ஏதாவது கொண்டு வந்தால், இதை மக்களை மயக்க வரும் அறிவிப்பு என்று ஈஸியாக சொல்லிவிடுகிறோம்..

ஆனால், அப்படி நினைத்தாலும் அவ்வளவு ஈஸியாக கடந்து விட முடியாத ஒரு திட்டம்தான் இலவச உணவு திட்டம்..!

உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் - மோடி உடனான சந்திப்பு பற்றி ஸ்டாலின் விளக்கம் உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் - மோடி உடனான சந்திப்பு பற்றி ஸ்டாலின் விளக்கம்

 சிறப்பு திட்டம்

சிறப்பு திட்டம்

"3 வேளையும் நம் பிள்ளைகளுக்கு சாப்பாடு கிடைக்க வேண்டும்" என்ற அடிநாதத்தை, நம் அரசியல் ஆன்றோர்களும் சான்றோர்களும் படிப்படியாக உயர்த்தி இன்றுவரை கொண்டு வந்துள்ளனர்.. எந்த ஆட்சி வந்தாலும், தன் ஆட்சியை தக்க வைத்து கொள்ள எதையாவது புது புது திட்டம் அறிவித்தாலும், மக்களிடம் எந்த மாயாஜாலமும் இல்லாமல் நேரடியாக அவர்களின் மனசில் சென்று உட்கார்ந்துவிட்டது இந்த இலவச உணவு திட்டம்..!

 மளிகை பொருட்கள்

மளிகை பொருட்கள்

இப்போதுகூட கொரோனா தொற்று அதிகமாகிவிட்ட நிலையில், யார் கையிலும் காசு இல்லாத நிலையில், இந்த உணவு திட்டம் பேருதவியாகி கொண்டிருக்கிறது.. அதற்கான முன்னெடுப்பை திமுக அரசு கையில் எடுத்துள்ளது.. ஏற்கனவே ரேஷன் அட்டைகளுக்கு 4000 ரூபாய், மளிகை பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல, மற்றொருபக்கம் அறநிலைய துறை சார்பாகவும், கோயில்கள் மூலம் உணவு தயாரித்து அனைத்து ஆஸ்பத்திரிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன..

 11 மாவட்டங்கள்

11 மாவட்டங்கள்

ஆனால், தற்போது தமிழ்நாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.. இதில் 11 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறையாமல் உள்ளது.. அதனால், அந்த 11 மாவட்டங்களில் மட்டும் தளர்வுகள் அவ்வளவாக அறிவிக்கப்படவில்லை.. எனவே, இந்த 11 மாவட்டங்களில் இந்த இலவச உணவு திட்டம் இன்னமும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது...

 அனைவருக்கும் உணவு

அனைவருக்கும் உணவு

தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், அவர்களது சொந்தங்களுக்கும் சேர்த்து இந்த ஊரடங்கு நிறைவடையும் வரை அதாவது வரும் 21-ம்தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

 அம்மா உணவகம்

அம்மா உணவகம்

கொங்கு மண்டலத்தில் தொற்று பாதிப்பு இன்னமும் உள்ளதால், அங்கெல்லாம் சிறப்பு நலத்திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.. ஒருபக்கம் இலவச உணவு மற்றொரு பக்கம் அம்மா உணவகங்கள் என இரண்டும் சேர்ந்து மக்களை பசியாற்றி வருகின்றன.. சுகாதாரத்துறை, அறநிலையத்துறை, பள்ளிக்கல்வித்துறை என ஒவ்வொரு துறையிலும் அதிரடிகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அறநிலையத்துறையும் அதிரடி லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது...!

English summary
DMKs Super plan, Free Food Program will be extended 11 districts inTamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X