Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உயில் இருந்தால் மகள்களுக்கு சொத்தில் பங்கு உண்டா? தாயின் பூர்வீக சொத்து யாருக்கு? சட்டம் சொல்வதென்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெற்றோரின் சொத்துக்களில் மகள்களுக்கு இருக்கும் உரிமைகள் குறித்து பலருக்கும் சில குழப்பங்கள் இருக்கலாம்.. குறிப்பாக உயில் உள்ள நிலை மற்றும் உயில் இல்லாத நிலை என்றால் என்ன? இந்த 2 வேறு சூழல்களில் சொத்துக்கள் அதன் வாரிசுதாரர்களை எப்படி சென்றடையும்? என்பது குறித்துச் சட்ட நிபுணர்கள் விளக்குகிறார்கள். இது குறித்த விரிவான சட்ட நடைமுறைகளை இங்கே சுருக்கமாக காணலாம்.

சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பெற்றோரின் சொத்துகளில் மகள்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்ற குழப்பம் இன்னும் தொடர்கிறது.. குறிப்பாக உயில் எழுதியிருந்தால் என்ன ஆகும்? உயில் இல்லையென்றால் யாருக்கு எவ்வளவு பங்கு? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.. இதுகுறித்து சட்ட நிபுணர்கள் தெளிவான விளக்கங்களை வழங்கியுள்ளனர்..

Wills Legal Heir Property Rights

தாயின் சொத்துக்கள் யாருக்கு

ஒரு தாய் தன் சொந்தமாக சம்பாதித்த சொத்து இருந்தால், அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் வழங்கும் முழு உரிமை அவருக்கே உள்ளது.. அவர் உயிருடன் இருக்கும்போதே மகன்களுக்கு மட்டுமே சேர வேண்டும் என்று உயில் எழுதி வைத்தால், அந்த சொத்தில் மகள்கள் எந்த சட்ட உரிமையும் கோர முடியாது.. கோர்ட்டை நாடினாலும் அந்த சொத்து கிடைக்காது..

ஆனால் தாய் எந்தவிதமான உயிலும் எழுதாமல் இறந்துவிட்டால், மகன்களுக்கும் மகள்களுக்கும் சமமான பங்கு சட்டப்படி கிடைக்கும்.. இதில் எந்த சந்தேகமும் இல்லை..

மகள்களுக்கு உரிமை உள்ளதா

அதேபோல் தாய் தனது மூதாதையர் வழியாக வாரிசு அடிப்படையில் பெற்ற சொத்துக்களில் மகள்கள் சட்டப்படி பாகப்பிரிவினை கோர முடியும். தாய் தர மறுத்தாலும் பூர்வீகச் சொத்து என்பதால் நீதிமன்றம் மூலம் மகள்கள் தங்கள் பங்கை பெற்றுக்கொள்ள வழிவகை உள்ளது.

தந்தையின் சொத்துரிமையை பொறுத்தவரை மகள்கள் திருமணமானவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தந்தையின் சொத்தில் சமமான பங்கு பெற தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்... தந்தை தான் சுயமாக சம்பாதித்த சொத்தை உயில் ஏதும் எழுதாமல் விட்டுச் சென்றால் அவருடைய நேரடி வாரிசுகள் என்ற அடிப்படையில் மகன்கள் மற்றும் மகள்கள் இருவருக்குமே அதில் சமமான உரிமை சேரும்.


தந்தையின் சொத்து யாருக்கு

இருந்தாலும், தந்தை தனது சுயசம்பாத்திய சொத்தை வேறு யாருக்காவது உயில் எழுதி வைத்துவிட்டாலோ அல்லது குறிப்பிட்ட நபருக்கு மட்டும் என எழுதி வைத்தாலோ அதில் மற்ற வாரிசுகள் உரிமை கோர சட்டத்தில் இடமில்லை. வாரிசுகள் இல்லாத ஒரு நபர் தனது சொத்தை யாருக்காவது எழுதி வைத்தால் அது முழுமையாக அந்த நபரையே சேரும்.

ஒருவேளை வாரிசு இல்லாத தம்பதியினர் உயில் எழுதாமல் இறந்துவிட்டால் அவர்களின் இரண்டாம் நிலை வாரிசுகளான உடன்பிறந்த சகோதர சகோதரிகளுக்கு அந்த சொத்துக்கள் சென்றடையும்.

அதேபோர, விவாகரத்து பெற்ற பெண்களின் வாரிசுகளுக்கான உரிமையும் சட்டத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.. ஒரு பெண் தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றிருந்தாலும் அவர் மறுமணம் செய்யாத நிலையில் அந்தப் பெண்ணின் குழந்தைகளுக்கு தந்தையின் பூர்வீகச் சொத்தில் முழு உரிமை உண்டு.

பூர்வீக சொத்தில் பங்கு

முன்னாள் கணவர் மறுமணம் செய்து அவருக்கு வேறு குழந்தைகள் இருந்தாலும் முதல் மனைவியின் மகனுக்கோ மகளுக்கோ பூர்வீக சொத்தில் உள்ள பங்கு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. வாரிசுரிமை சட்டமானது நேரடி வாரிசுகள் அனைவரையும் சமமாகவே கருதுகிறது.

மேலும் ஒருவருக்கு முதல் மனைவி மூலம் வாரிசுகள் இல்லை என்றால் அந்த சொத்து அவரது இரண்டாம் நிலை வாரிசுகளான பேரன் பேத்திகள் அல்லது சகோதரர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். இப்படியாக, உயில் உள்ள நிலை மற்றும் உயில் இல்லாத நிலை என 2 வேறு சூழல்களில் சொத்துக்கள் அதன் வாரிசுதாரர்களை சென்றடைகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+