முதல்வருக்கு துரைமுருகன் சிக்னல்! சபாநாயகரை பார்த்த ஸ்டாலின்! கோபமாக வெளியேறிய ஆளுநர்! நடந்தது என்ன?
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை படித்துக் கொண்டிருந்த போதே அவர் முழுமையாக உரையை படிக்கவில்லை என முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் துரைமுருகன் சிக்னல் கொடுத்தார். முதல்வரும் சபாநாயகரையே பார்த்தார். பிறகு சட்டசபை செயலாளரை அழைத்தார்.. அதன் பிறகுதான் கோபத்துடன் ஆளுநர் வெளியேறினார். தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடரில் என்னதான் நடந்தது?
தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் நேற்றைய தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த ஆண்டு முதல் காகிதம் இல்லா ஆளுநர் உரை என்பதால் அனைவருக்கும் ஆளுநர் உரையின் நகல் டேப்பில் கொடுக்கப்பட்டது. ஆளுநர் உரையை படிக்கத் தொடங்கியதும் சில இடங்களில் இருந்த தமிழ்நாடு என்ற வார்த்தையை படித்துவிட்டார்.
ஆனால் பல இடங்களில் தமிழ்நாடு அரசு என்பதற்கு பதிலாக அதாவது Tamilnadu Government என்பதற்கு பதிலாக This Government என்றே வாசித்தார். பின்னர் 3 ஆவது பக்கத்தில் 3ஆவது பாயிண்டை படிக்கும் போதுதான் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

3 ஆவது பாயிண்ட்
அந்த 3ஆவது பாயிண்டில் வந்த திராவிட மாடல் என்ற வார்த்தையை ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டை திமுக கூட்டணி கட்சிகள் தெரிவிக்கின்றன. அந்த பத்தியில் கூறியிருப்பதாதவது: இந்த வளர்ச்சி பயணத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நமது முதல்வர் அயராத உழைப்போடும் அக்கறையோடும் இந்த அரசை வழிநடத்தி வந்துள்ளார்கள். இந்த வகையில் அண்மையில் இந்தியா டுடே பத்திரிகை நடத்திய மாநிலங்களின் நிலை என்ற ஆய்வு, சிறப்பாகச் செயல்படும் பெரிய மாநிலங்களில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு என்று முடிவு செய்துள்ளது. இந்தச் சாதனை முதல்வரின் ஆற்றல்மிக்க தலைமைக்கும் சமூகநீதியையும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் அடிப்படையாக கொண்ட திராவிட மாடல் ஆட்சிக்கும் அளிக்கப்பட்டுள்ள நற்சான்றிதழாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

திராவிட மாடல்
இந்த திராவிட மாடல் என்பதை வாசிக்காமல் ஆளுநர் விட்ட போதே அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் முதல்வர் ஸ்டாலினை பார்த்து என்ன எது என செய்கையில் கேட்டார். அதற்கு முதல்வரும் பொறுங்க என்பதை போல் தலையசைத்தார். ஆளுநர் தன் உரையை வாசித்து முடிக்க போகும் நிலையில் பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராஜர், கலைஞர் ஆகியோரின் பெயரையும் சமூகநீதி, பெண்ணுரிமை, மதநல்லிணக்கம் உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்ததை அடுத்து மீண்டும் முதல்வரை பார்த்து துரைமுருகன் தனது அதிருப்தியை சொன்னார். உடன் முதல்வர் ஸ்டாலின் ஆளுநரையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு சபாநாயகரையும் பார்த்தார்.

முதல்வரின் பார்வை
முதல்வரின் பார்வையை புரிந்து கொண்ட சபாநாயகர் உடனே தனது அலுவலக ஊழியரை அழைத்து அவரிடம் எதையோ சொன்னார். இவை எல்லாம் ஆளுநர் உரை நடந்து கொண்டிருக்கும் போதே நடந்தது. ஆளுநர் உரையாற்றி முடித்தவுடன் சபாநாயகர் தமிழாக்கத்தை வாசிப்பதற்குள் முதல்வர் இருக்கைக்கு துரைமுருகன் சென்றார். அப்போது ஏதோ சில பேப்பர்களை இருவரும் மாற்றி கொண்டனர். இதையடுத்து ஆளுநருக்கு முன்னால் உட்கார்ந்திருந்த சட்டசபை செயலாளரை முதல்வர் அழைத்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேச தொடங்கினார். ஆளுநர் உரை என்பதால் சபாநாயகருக்கும் ஆளுநருக்கும் மட்டுமே மைக் வழங்கப்பட்டிருந்தது.

ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை
அரசு தயாரித்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை என முதல்வர் தெரிவித்தார். அப்போது முதல்வர் என்ன பேசுகிறார் என தெரியாமல் ஆளுநர் தனது செயலாளர், பாதுகாப்பு அதிகாரியை அழைத்து கேட்க, அதற்கு பாதுகாப்பு அதிகாரி எதையோ சொன்னார், அதை கேட்டதும் ஆளுநர் கோபத்துடன் மின்னல் வேகத்தில் அவையை விட்டு வெளியேறினார். தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின், சபாநாயகரை பார்த்தும் துரைமுருகனை பார்த்தும் சிரித்தார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications