ஆஹா ஜிப் போட்ட பையில் பொங்கல் பரிசு.. பையில் இடம் பெற்ற முக்கிய வாசகம்!.. பாராட்டு மழையில் அரசு!
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் முதல்வர் படம் இடம் பெறவில்லை. மாறாக கொரோனா விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் கொரோனா நிவாரணமாக ரூ 4000 இரண்டு தவணைகளாக வழங்கியது. மேலும் கொரோனா நிவாரணமாக 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கியிருந்தது.
இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பொங்கலுக்கும் அரசு சார்பில் 20 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.
|
என்னென்ன பொருட்கள்
இந்த 20 பொருட்களுடன் சேர்த்து ஒரு முழு கரும்பும் வழங்கப்படுகிறது. பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகிய 20 பொருட்கள் துணிப்பையுடன் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். 2,15,48,060 குடும்பங்களுக்கு ரூ. 1088 கோடி நிதியில் பொங்கல் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

துணிப்பை
இந்த நிலையில் இந்த பொருட்களுடன் வழங்கப்படும் துணிப்பை குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. வழக்கம் போல் பொங்கலுக்கு வழங்கப்படும் பையை விட இந்த முறை சற்று அகலமாக உள்ளது. அதில் ஜிப்பும் இணைக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளே அரசு சொன்ன பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

வாணிப கழகம்
பையின் ஒரு புறம் அதில் இருக்கும் பொருட்கள் மற்றும் அதன் அளவுகள் இடம்பெற்றுள்ளன. மற்றொரு பக்கத்தில் தமிழக அரசு முத்திரை, நுகர்பொருள் வாணிப கழகம் என போடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு என அச்சிடப்பட்டு கொரோனா விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள்
நம்மையும் நாட்டு மக்களையும் காப்போம்
தொற்றிலிருந்து தமிழகத்தை மீட்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த கொரோனா நிவாரண பொருட்களின் போது வழங்கப்பட்டதை போல் முதல்வரின் படம் இந்த முறையும் அச்சிடப்படவில்லை. எனவே இது மக்களுக்கான அரசு என திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications