Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவையில் ஒலித்த குறுகிய சத்தம்.. திடீர்னு அவரை கூப்பிட்ட ஆளுநர்! சட்டென முகம் மாறி! அடுத்த சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த போது தனது தனிச் செயலாளரிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன பேசினார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மான நகலை வாசித்துக் கொண்டிருந்த போது திடீரென ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது எப்படி என்றும் இறுக்கமான முகத்துடன் அவர் வெளியேறியது எப்படி என்பதும் பலரது கேள்வியாக உள்ளது.

நேற்றைய தினம் என்ன நடந்தது. ஆளுநர் எப்படி வெளியேறினார் என்பதை பிளாஷ்பேக்குடன் பார்க்கலாம். அவை சரியாக நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் ரவி சட்டசபைக்குள் வந்தவுடன் அவருக்கு அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர்.

பேரவைத் தலைவர்

பேரவைத் தலைவர்

இதையடுத்து அவர் பேரவை தலைவரின் பகுதிக்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த மைக்கில் பேசத் தொடங்கினார். அவரை பேச விடாமல் திமுக கூட்டணி கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மேலும் எங்கள் நாடு தமிழ்நாடு எங்கள் நாடு தமிழ்நாடு, ஆளுநரே வெளியேறுங்கள் என முழக்கங்களை மதிமுக, விசிக, காங்கிரஸ், தவாக, மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட்கள் எழுப்பின.

சபாநாயகர்

சபாநாயகர்

இதற்கு சபாநாயகர் அவரை கட்டுப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை பாஜகவினர் முன் வைக்கிறார்கள். இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் அவையிலிருந்து வெளியேறினர். இதையடுத்து அவை அமைதியானது ஆளுநரும் தொடர்ந்து உரையை வாசித்துக் கொண்டே வந்த நிலையில் 3ஆவது பக்கத்தில் இடம் பெற்றிருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையை ஆளுநர் படிக்காமல் விட்டுவிட்டார்.

திராவிட மாடல்

திராவிட மாடல்

இதற்கு அடுத்து மற்றொரு இடத்தில் வந்த திராவிட மாடல் வார்த்தையையும் அவர் படிக்காமல் விட்டுவிட்டார். பின்னர் 64 ஆவது பாயிண்டில் கடைசியில் வந்த தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்ற வரியையும் விட்டுவிட்டார். இதன் பிறகு 65 ஆவது பத்தியில் இடம் பெற்ற பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராஜர், கலைஞர் ஆகியோரின் பெயர்கள் கொண்ட பத்தியையும் விட்டுவிட்டார்.

சமூகநீதி

சமூகநீதி

அந்த பத்தியில் சமூகநீதி, சமத்துவம், மதநல்லிணக்கம் உள்ளிட்ட பத்திகள் இருந்தன. இதனால் அந்த பத்தியையே ஆளுநர் படிக்காமல் தவிர்த்துவிட்டார். இதையடுத்து ஆளுநர் உரை முடிந்தது. அவரது உரையை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய அப்பாவு தயாராக இருந்தார். ஆளுநர் சட்டசபை கூட்டத் தொடரின் போது தான் ஆற்றிய உரையை சபாநாயகர் தமிழாக்கம் செய்து, அதன் பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டவுடன்தான் சட்டசபை மரபுகளின்படி ஆளுநரை சபாநாயகர் வழி அனுப்பி வைப்பார்.

தமிழாக்கம்

தமிழாக்கம்

அதனால் சபாநாயகர் தமிழாக்கத்தை படிக்கும் வரை ஆளுநர் அவையிலேயே அமர்ந்திருந்தார். இதையடுத்து ஆளுநர் அரசு எழுதி கொடுத்த உரையை முழுமையாக படிக்காததை அறிந்த முதல்வர் ஸ்டாலின் "அரசு தயாரித்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை. அவர் அவ்வாறு படிக்காதது எனக்கு வருத்தம் அளிக்கிறது. அதனால் ஆளுநர் படித்த உரை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் அரசால் தயாரிக்கப்பட்டு அச்சடிக்கப்பட்ட உரையே இடம் பெற வேண்டும் என தீர்மானத்தை வாசித்தார்.

பாஜக எம்எல்ஏக்கள்

பாஜக எம்எல்ஏக்கள்

அப்போது பாஜக எம்எல்ஏக்கள் கூச்சலிட்டனர். முதல்வர் ஸ்டாலின் எழுந்து என்ன சொல்கிறார் என புரியாமல் உட்கார்ந்திருந்த ஆளுநர், பாஜக எம்எல்ஏக்களின் கூச்சலை வைத்து ஏதோ நடக்கிறது என்பதை புரிந்து கொண்டார். உடனே தமிழ் தெரிந்த தனது தனிச் செயலாளரிடம் What's happening என கேட்டிருப்பார். அப்போது அவர் அவைகுறிப்பிலிருந்து ஆளுநர் படித்த உரை நீக்கப்படுவது குறித்து கூறியுள்ளார்.

ஆளுநர் கோபம்

ஆளுநர் கோபம்

இதனால் ஆளுநர் கோபமடைந்து தனது பாதுகாப்பு அதிகாரியை அழைத்தார். அவரிடம் தான் புறப்படுவதற்கு வாகனம் தயார் நிலையில் இருக்கிறதா என கேட்டார், அவர் ஆம் என சொன்னதும் உடனே எழுந்து வேகமாக புறப்பட்டு சென்றார். அப்போதுதான் திமுக எம்எல்ஏக்கள் சிலர் தமிழ்நாடு தமிழ்நாடு என கூச்சலிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+