ஒரிஜினல் லைசென்ஸ் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் நீங்க வாங்கணுமா? ரொம்ப ஈஸி
சென்னை: டிரைவிங் லைசென்ஸ் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதற்கு ஆன்லைனிலேயே சூப்பர் வசதி உள்ளது.. என்ன தெரியுமா?
வாகன பதிவு தொடர்பாக, மொத்தம் 42 சேவைகளை தமிழக இணைய வழியில் பெறலாம் என்று தமிழக அரசு கடந்த வருடம் வெளியிட்டிருந்தது.. இதில், ஆர்டிஓ அலுவலகம் செல்லாமலேயே, ஆன்லைன் மூலமாகவே, ஆதார் அட்டையை பயன்படுத்தி டிரைவிங் லைசென்ஸ் பெறலாம் என்ற அறிவிப்பானது, தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

அதிரடி: இதனால், போக்குவரத்து அலுவலகம் சென்று நீண்ட நேரம் வரிசையில் பொதுமக்கள் நிற்க வேண்டிய அவசியமும் இல்லை, நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும் என்பதால் பொதுமக்கள் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தந்துள்ளனர்.
டிரைவிங் லைசென்ஸ் பெற்ற பிறகு, ஒரு விண்ணப்பதாரர் நிரந்தர ஓட்டுநர் உரிமத்திற்கு 30 நாட்களுக்குப் பிறகு பழகுநர் உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் https://sarathi.parivahan.gov.in/sarathiservices/stateஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத் தேர்விற்கு https://sarathi.parivahan.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்..
தேவையான ஆவணங்கள்: பிறந்த தேதி சான்று, 10ம் வகுப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுச் சான்றிதழ், முகவரி சான்று, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் போன்றவை இதற்கு தேவைப்படும் முக்கிய ஆவணங்களாகும்.
ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பித்து பெற்றுக்கொள்வது போலவே, டிரைவிங் லைசென்ஸில் திருத்தங்கள் ஏதாவது இருந்தாலும், செய்து கொள்ளலாம். இதற்கு ஆதார் அட்டை, 10 அல்லது 12 வகுப்பு சான்றிதழ், பாஸ்போர்ட்டின் நகல், பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் தேவை.
தொலைந்துவிட்டதா: அதேபோல, உங்களது டிரைவிங் லைசென்ஸ் தொலைந்துவிட்டால் அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? முதலில் அருகிலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் FIR பதிவு செய்ய வேண்டும்..
உங்கள் டிரைவிங் லைசென்ஸ் மிகவும் பழையதாகிவிட்டாலோ, அல்லது அது தெளிவாக தெரியாமலோ அல்லது கிழிந்துவிட்டாலோ, நீங்கள் அசல் பிரதியை நகல் எடுக்க வேண்டும். பிறகு, டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கான வழிமுறைகள் இதுதான்:
- முதலில் போக்குவரத்து துறையின் வெப்சைட்டிற்கு சென்று, கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்ப வேண்டும்
- பிறகு, LLD படிவத்தை நிரப்பி, அதை பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும்
- இதனுடன் உங்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும்
- இந்த படிவத்தையும், அனைத்து ஆவணங்களையும் ஆர்டிஓ அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம். அப்படி சமர்ப்பிக்கும்போது, ஒரு ரசீது தரப்படும்.. அந்த ரசீதை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும்.
- ஆன்லைன் செயல்முறை முடிந்த அடுத்த 30 நாட்களுக்கு பிறகு, டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் உங்களுககு வந்து சேர்ந்துவிடும்.
இந்த டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸை, நீங்கள் ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம். இதற்கு, அசல் ஓட்டுநர் உரிமம் பெற்ற ஆர்டிஓ அலுவலகத்துக்கு செல்ல வேண்டும்.. LLD படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து, துறை நிர்ணயித்த கட்டணத்தையும் அதனுடன் சேர்த்து கட்ட வேண்டும். விண்ணப்பித்த 30 நாட்களில் டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் கிடைத்துவிடும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications