"சித்தப்பா" எடப்பாடி வாயே திறக்கலயே.. திமுக உடன்பிறப்பு + சீமான் தம்பி.. கடுப்பான ரத்தத்தின் ரத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீமான் புது ட்விட்டரே ஆரம்பிச்சிட்டார்.. ஆனாலும், ஒரு விவாதம் இன்னும் முடியவில்லை.. திமுக + நாம் தமிழர் கட்சி + அதிமுக என 3 கட்சிகளும் பரபரப்பாகி உள்ளன.. என்ன காரணம்?

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி ஆகியோரின் ட்விட்டர் கணக்கு நேற்று திடீரென முடக்கப்பட்டது.
ஆனால், அதே நேரத்தில், நாம் தமிழர் கட்சியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்படவில்லை... இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்தனர்.

Do you know why did DMK Rajiv gandhi say about aiadmk edapadi palanisamy

முதல்வர் கண்டனம்: இதனிடையே, சீமான், திருமுருகன் காந்தி ஆகியோரின் ட்விட்டர் கணக்கை உடனே அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இது குறித்து ட்வீட் ஒன்றையும் ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.

அதில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.

புது அக்கவுண்ட்: இதனிடையே, "செந்தமிழன் சீமான்" என்ற பெயரில் புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளார் சீமான்... தன்னுடைய முதல் பதிவில் பாஜகவை சரமாரி விமர்சித்துள்ளார்.. அத்துடன் முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

"புதிய நாடாளுமன்றத்தை செங்கோல் நாட்டி திறந்து வைத்துவிட்டு ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து எழுதும் எழுதுகோல்களை முறித்து. குரல் வளையை நெறிக்கும் இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசின் கொடுங்கோன்மைச் செயல் வெட்கக்கேடானதாகும்.கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, எங்களது கீச்சகத்தை முடக்கி கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது வலிமையானக் கருத்தைப் பதிவுசெய்து, துணைநிற்கும் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

சீமான் நன்றி: சீமானுக்காக முதல்வர் ஆதரவு தந்தரும், முதல்வருக்காக சீமான் நன்றி சொன்னதும், அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பி விட்டுக் கொண்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில், இந்த விஷயத்தில் திமுகவின் ராஜீவ்காந்தி, எடப்பாடியை சீண்டியிருக்கிறார்.. இதுகுறித்து பதிவிட்டிருந்த ட்வீட்டில், "அண்ணன் சீமான் அவர்களின் சித்தப்பா...@EPSTamilNadu அவர்கள் சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை? மோடி அரசினை எதிர்த்து அரசியல் ஆளுமை எடப்பாடி வாய் திறப்பாரா? கேளுங்கள் சீமானின் தம்பிகளே!!" என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட், அதிமுகவுக்கு எரிச்சலை கிளப்பிவிட்டு வருகிறது.

Do you know why did DMK Rajiv gandhi say about aiadmk edapadi palanisamy

சாப்ட் கார்னர்: பொதுவாக, ஒவ்வொரு கட்சி மீதும், மக்களுக்கு ஒவ்வொரு புரிதல் உண்டு.. அந்தவகையில், நாம் தமிழர் கட்சி என்றால் திமுகவுக்கு எதிரானது என்றும், அதிமுக மீது ஒருவித ஃசாப்ட் கார்னர் உண்டு என்றும் சொல்லப்படுவது.. அதற்கேற்றவாறு, திமுகவை விமர்சிக்கும் அளவுக்கு, அதிமுகவை சீமான் அவ்வளவாக விமர்சிப்பதில்லை.. திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சீமான் பேசிவந்தாலும், திராவிடத்துக்குள் அடங்கியிருக்கும் அதிமுகவை அவர் பெரிதுப்படுத்துவதில்லை என்ற கருத்தும் நிலவுவதுண்டு.

போதாக்குறைக்கு, சமீபநாட்களாகவே, திமுக - நாம் தமிழர் கட்சியினரிடம் அடிக்கடி மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன.. எல்லாவற்றிற்கும் மேலாக, அதிமுகவினரை உறவுமுறை சொல்லி அழைப்பதை வாடிக்கையாக வைத்துள்ள சீமான், எடப்பாடி பழனிசாமியை சித்தப்பா என்றும் அழைத்து வருகிறார்.. யாராக இருந்தாலும், அவர்களை உறவு முறை சொல்லி அழைப்பது சீமானின் உயரிய பண்பு.

ராஜீவ்காந்தி: எனினும், அதிமுகவுடன் இணக்கமான போக்கை சீமான் கடைப்பிடித்து வருவதற்கு குறித்து அவ்வப்போது, சோஷியல் மீடியாவில் விவாதங்களே நடப்பதுண்டு. இந்த உறவுமுறையை குறிப்பிட்டுதான், திமுகவின் ராஜீவ்காந்தி, ட்வீட்டை பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.. ஆனால், இதற்கு முந்திக்கொண்டு வந்து, நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்தி பதிலடி தந்துள்ளார். ராஜீவ்காந்திக்கு பதிலளித்து ஒரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளார்.

அதில், "பரவாயில்லை! அறிஞர் அண்ணாவுக்கு இல்லாத துணிவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்குன்னு முழங்குனது ஞாபகம் இருக்கா ராஜீவ்?" என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளார்..

இதையடுத்து, இந்த 2 பேரின் ட்விட்களுக்கும் கமெண்ட்கள் பதிவாகி கொண்டிருக்கின்றன.. உடன்பிறப்புகள் ஒருபக்கமும், சீமானின் தம்பிகள் மறுபக்கமும், என காரசாரமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்... இதுக்கு நடுவில் அதிமுக கடுப்பாகி உள்ளது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+