புதிய கல்விக் கொள்கை ஏன் வேண்டும் தெரியுமா? மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடுத்த புது விளக்கம்!
சென்னை: புதிய கல்விக் கொள்கை ஏன் வேண்டும் என்பதற்கு புது விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இந்தியாவில் 2.8 கோடி பேர் மீன்வளம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். உலகளவில் உள்ள மீன் தேவையில் 8% இந்தியா தான் பூர்த்தி செய்து வருவதாக கூறினார்.

மீன் மற்றும் மீன் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியில் உலகளவில் இந்தியா முதலிடம் வகிப்பதாகவும் இந்தியாவுக்கு போட்டியாக ஈக்குவாடர் என்ற சிறிய நாடு உள்ளதாகவும் தெரிவித்தார். பிரதமர் மோடி முன்னெடுத்த நடவடிக்கைகளின் காரணமாக உலகின் வளர்ந்த நாடுகளுக்கு கூட நாம் அதிகளவில் மீன் ஏற்றுமதி செய்துவருகிறோம் என எல்முருகன் பெருமிதம் தெரிவித்தார்.
இந்தியாவை பொறுத்தவரை மனித வளத்தில் சிறப்பாக இருக்கிறோம் என்றும் அதனால் தான் உலகின் பல்வேறு நாடுகளிலும் நம்மால் சிறப்பான பதவிகளை பிடிக்க முடிவதாகவும் இதற்குத் தான் புதிய கல்விக்கொள்கை கட்டாயம் வேண்டும் என்கிறோம் எனவும் பேச்சோடு பேச்சாக ஒரு புது விளக்கத்தையும் எல்.முருகன் கொடுத்தார் .
தமிழ்நாட்டில் மீன்வளத் துறை உள்கட்டமைப்பை மேம்படுத்த 2ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது எனக் கூறிய எல்.முருகன், இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு முதல் இதுவரை மீன் வளத்துறையில் ரூ.38,500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசிய நிலையில் அதற்கு மேடையில் இருந்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எந்த ரியாக்ஷனும் கொடுக்காதது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications