Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ஜாக்கிரதை” இளைஞர்களே.. பெருகும் இளம் மரணங்கள்! ஜிம்முக்கு போகலாமா? இதய பிரச்சனையை கண்டறிவது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதய பிரச்சனைகளின் காரணமாக இளம் வயது மரணங்கள் சமீப காலங்களாக அதிகரித்து வரும் நிலையில், மாரடைப்பு என்றால் என்ன? இதய முடக்கம் என்றால் என்ன? இதய பிரச்சனைகளின் காரணமாக ஏற்படும் இளம் வயது மரணங்களை தவிர்ப்பது எப்படி? என்பன போன்ற பல்வேறு காரணங்களை விரிவாக விளக்கி இருக்கிறார் பொதுநல மருத்துவர் பரூக் அப்துல்லா.

இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ள அவர், "முதலில் மாரடைப்பு மற்றும் இதய முடக்கம் / செயலிழப்பு ஆகியவற்றுக்கான வித்தியாசத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மாரடைப்பு (MYOCARDIAL INFARCTION) என்பது இதயத்தின் தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை அளிக்கும் தமனிகளில் அடைப்பு ஏற்படுவது.

இதய முடக்கம் / செயலிழப்பு என்பது CARDIAC ARREST. இதில் ரத்த நாள அடைப்பு மரணத்திற்கு காரணமன்று. மாறாக இதயத்தின் நார்மலான துடிப்புக்கான இயங்குவியல் மற்றும் அதற்கு சக்தி தரும் மின்சார சர்க்யூட்டில் ஏற்படும் பிரச்சனையில் நிகழ்வதாகும்.

மாரடைப்பா? இதய முடக்கமா?

மாரடைப்பா? இதய முடக்கமா?

நாடு முழுவதும் விபத்துக்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நாட்டிலேயே விபத்துக்கள் நடக்கும் பெருநகரங்கள் பட்டியலில் சென்னைதான் முதலிடம் என்ற வேதனைக்குரிய தகவலும் வெளியாகி இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட சாலை விபத்துக்கள் குறித்த அறிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திடீர் இதய செயலிழப்பு ஏன்?

திடீர் இதய செயலிழப்பு ஏன்?

திடீர் இதய செயலிழப்பு என்பது திடீரென்று இதயத்தின் துடிக்கும் விதத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து அதனால் இதயத்தின் செயல்தன்மை பாதிக்கப்படுவது அல்லது நிற்பது என்று கொள்ளலாம். மிக இளம் வயதில் திடீர் இதய செயலிழப்பு நிகழ்வதற்கு காரணங்கள் என்ன? இதயத்தின் துடிக்கும் விதத்தில் பிரச்சனைகள் இருந்தால் இதயத்தால் முழு செயல்திறனுடன் ரத்தத்தை உடல் முழுமைக்கும் உந்தித் தள்ள இயலாது. இதன் விளைவாக இதயத்தின் தசைகள் அதிக வேலைப்பளுவுக்கு உள்ளாகி தடிமனாகும்.

இதய துடிப்பு

இதய துடிப்பு

இதை HYPERTROPHIC CARDIOMYOPATHY என்கிறோம். இன்னும் சிலருக்கு இதயத்தின் துடிப்பு தறிகெட்டு இருக்கும். சராசரியாக துடிக்கும் விகிதத்தை விட அதிகமாகத் துடிக்கும். இது அந்த இதயத்தில் உள்ளார்ந்த துடிக்கும் திறனில் ( CARDIAC RHYTHM) பாதிப்பை உண்டாக்கும். Congenital Long QT Syndrome பிறவியிலேயே ஏற்படும் இதய துடிப்பில் வரும் பிரச்சனை இது. அல்லது ACQUIRED LONG QT SYNDROME இது இதயத்தில் ஏற்பட்டுள்ள வேறு பிரச்சனைகளால் அல்லது உட்கொள்ளும் சில மருந்துகளால் ஏற்படலாம்

மார்பு பகுதியில் ஏற்படும் காயம்

மார்பு பகுதியில் ஏற்படும் காயம்

BRUGADA SYNDROME ( ப்ருகடா சிண்ட்ரோம்), WOLFE PARKINSON WHITE SYNDROME (வுல்ஃப் பார்கின்சன் வொய்ட் சிண்ட்ரோம் ), ARVC ( ARRHYTHMOGENIC RIGHT VENTRICULAR CARDIOMYOPATHY) மார்பு பகுதியில் ஏற்படும் பலத்த காயம், ( BLUNT CHEST INJURY) திடீரென விளையாடும் போதோ அல்லது சாலை விபத்திலோ மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்படும் போது இதயம் திடீரென செயலிழந்து விடும் இதை COMMOTIO CORDIS (கொமோசியோ கார்டிஸ்) என்கிறோம்.

அரிதான காரணங்கள்

அரிதான காரணங்கள்

இவையன்றி இதயத்தின் அறைகளில் ஓட்டைகள் / இதயத்தின் அறைகளில் தேவையற்ற இணைப்புகள் போன்ற பிறவியிலேயே தோன்றும் பிரச்சனைகளாலும் இதய செயலிழப்பு ஏற்படலாம். இதைப்படித்த உடன் மேற்சொன்ன பிரச்சனைகள் நமது பிள்ளைக்கும் இருக்குமோ என்ற அச்சம் தேவையில்லை. காரணம் மேற்சொன்ன பிரச்சனைகள் மிக மிக அரிதானவை.

உடற்பயிற்சியில் கவனம்

உடற்பயிற்சியில் கவனம்

ஆயினும் சில இதயம் சார்ந்த அறிகுறிகள் குறித்த நாம் விழிப்புணர்வுடன் இருப்பது இது போன்ற இதயம் சார்ந்த பிரச்சனைகளை கண்டுகொண்டு முறையான சிகிச்சை எடுத்து மரணத்தை தவிர்க்க உதவும். விளையாடும் போதோ ஓடும் போதோ உடற்பயிற்சி செய்யும் போதோ தலைசுற்றினால் அல்லது தலை சுற்றி கீழே விழுந்திருந்தால் (SYNCOPE) அது இதய செயல்திறன் பிரச்சனையாக இருக்கலாம்.

மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறல் (SHORTNESS OF BREATH), அதிலும் உடற்பயிற்சி செய்யும் போது அதிகமான மூச்சுத் திணறல் ஏற்படுவது. கவனிக்க - உடல் பருமன் இருக்கும் சிறார்கள் / ஆஸ்துமா போன்ற நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் வரலாம். எனினும் மருத்துவரை சந்திக்கும் போது மெய்யான காரணம் தெரியவரும்.

குடும்பத்தில் இள வயது மரணாம்

குடும்பத்தில் இள வயது மரணாம்

குடும்பத்தில் ஏற்கனவே இள வயது மரணங்கள் ஏற்பட்டிருக்கிறதா? அப்படி ஏற்பட்டிருந்தால் இன்னும் அதிக கவனம் தேவை. இதயம் சார்ந்த பிரச்சனைகள் முன்னமே கண்டறியப்பட்டால் அதீத உடல் பயிற்சியை தவிர்க்கலாம். இதயத்தின் துடிக்கும் விதத்தை சீராக வைத்திருக்கும் மாத்திரைகள் மருந்துகளை முறையாக உட்கொண்டு வரலாம்.

 இதயத்தில் ஓட்டை

இதயத்தில் ஓட்டை

இதயத்தின் அறைகளில் ஓட்டை / அறைகளுக்கிடையே ஒழுங்கற்ற இணைப்புகள் இருந்தால் அவற்றை காலத்தே அறுவை சிகிச்சை செய்து சீர் செய்யலாம். இதயத்தின் துடிக்கும் விதத்தில் பிரச்சனை இருப்பவர்களுக்கு இதயத்திலேயே பொருத்தப்படும் தானியங்கி இதய துடிப்பு சீராக்கி ( IMPLANTABLE CARDIOVERTER DEFIBRILLATOR) கருவியை பொருத்திக் கொள்ளலாம்.

12 வயது சிறுவன் மரணம்

12 வயது சிறுவன் மரணம்

ஒருவேளை இதய துடிக்கும் விதத்தில் மாறுபாடு/ ஒழுங்கின்மை தோன்றினால் அதை இந்தக் கருவி தாமாகக் கண்டறிந்து இதயத்துடிப்பை சீர் செய்து விடும். இக்கட்டுரை வழி நான் கூற விளைவது, இளம் வயதில் குறிப்பாக 35 வயதுக்குட்பட்டு அதிலும் கர்நாடகாவில் 12 வயது சிறுவன் இறந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

திடீர் இதய செயலிழப்பு

திடீர் இதய செயலிழப்பு

இந்த சிறுவனுக்கு இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. திடீர் இதய செயலிழப்பு ஏற்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம். குழந்தைப் பருவத்தில் இருந்து குழந்தைகள் நல மருத்துவர் / குடும்ப நல மருத்துவரிடம் முறையாக குழந்தைகளையும் சிறுவர் சிறுமியரையும் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் பழக்கம் இருப்பவர்களுக்கு குழந்தைகள் நல மருத்துவர் இது போன்ற பிரச்சனைகளை உடனடியாக கண்டறிந்துவிடுவார்.

இதய நோய் சிறப்பு நிபுணர்

இதய நோய் சிறப்பு நிபுணர்

இது போகவும் மேற்சொன்ன அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை அணுகி பிரச்சனை எதனால் ஏற்பட்டது என்பதை அறிந்து கொண்டு இதயத்தின் செயல்திறனில் பிரச்சனை கண்டறியப்பட்டால் அதற்கென பிரத்யேகமாக பயின்ற இதய நோய் சிறப்பு நிபுணர்களிடம் மேல் பரிந்துரை பெற்று சிகிச்சை பெற்று வருவது இது போன்ற இளம் வயது மரணங்களைத் தடுக்கும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+