மருத்துவமனைக்கு உதயநிதி வந்த நொடி.. கார் முன் அமர்ந்து தர்ணா செய்த கிண்டி மருத்துவர்கள்.. பரபரப்பு
சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாகனம் முன்பு மருத்துவர்கள் தர்ணா செய்து வருகின்றனர். கிண்டி மருத்துவமனையில் அமர்ந்து மருத்துவர்கள் தர்ணா செய்து வருகின்றனர்.
கத்தியால் குத்தப்பட்ட அரசு மருத்துவரின் உடல்நிலை குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் கேட்டறிந்தார்.சென்னையில் அரசு மருத்துவர் மீது நடந்த கத்திக்குத்து குறித்து துணை முதல்வர் உதயநிதி செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். இதை தொடர்ந்து பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

6 மாதங்களாக சிகிச்சையில் இருந்த தாயுடன் வருபவர் என்பதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. மருத்துவரை கத்தியால் குத்தியவர் 6 மாதங்களாக இங்குதான் தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளார்..
தனியார் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் சொன்னதை கேட்டு இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
வேலை நிறுத்தம் அறிவித்துள்ள மருத்துவ சங்கத்தினருடன் இன்றே பேச்சுவார்த்தை நடத்தப்படும். மருத்துவரை கத்தியால் குத்தியவர் 6 மாதங்களாக இங்குதான் தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளார்..
தனியார் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் சொன்னதை கேட்டு கோபம் அடைந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளார், என்று துணை முதல்வர் உதயநிதி செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார் .
இந்த சம்பவம் குறித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில்.. இந்த விவகாரமும் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் மருத்துவர் மீது தாக்குதல் நடந்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதால் நாடு முழுக்க மீண்டும் போராட்டங்கள் நடக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
என்ன நடந்தது?: இதையடுத்து அங்கே செய்யப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்துள்ளார். மருத்துவர் பாலாஜியின் கழுத்து, முதுகு, தலை உட்பட 7 இடங்களில் கத்திக்குத்து நடத்தப்பட்டு உள்ளது. மருத்துவர் இதய நோயாளி என்பதால் கத்திக்குத்தில் ரத்தம் அதிக அளவில் வெளியேறி உள்ளது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி அளித்துள்ளார். 4 பேர் மருத்துவரை சுற்றி வளைத்து தாக்கி உள்ளனர்.
அதில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 2 பேரும் வடஇந்தியர்கள். மருத்துவரை சுற்றி வளைத்து அவரின் கழுத்தில் முதலில் குத்தி உள்ளனர். அதன்பின் பிற பாகங்களில் குத்தி உள்ளனர்.
ஸ்டாலின் அறிக்கை: இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் திரு. பாலாஜி அவர்களை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் திரு. பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும், என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார். போலீசார் கைப்பற்றிய கத்தி.. காய்கறி கட் செய்ய பயன்படுத்தப்படும் கத்தி ஆகும். இதில் தீயில் வாட்டிய மார்க் இருந்துள்ளது. இதனால் இதை தீயில் வாட்டி அதை சூடு படுத்தி இருக்கலாம்.. அதன் பின் அதை கூர்படுத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடந்து வருகிறது.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய்












Click it and Unblock the Notifications