சல்லி சல்லியா போச்சே.. டோட்டலா எகிறிய எடப்பாடி "கிராஃப்".. ஆமா யாருப்பா அந்த 4 பேர்.. அப்ப அவ்ளோதானா
சென்னை: ஓரிரு நாட்களிலேயே எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு உயர தொடங்கிவிட்டது.. அதிலும் தென்மண்டலத்தில் உயர தொடங்கிவிட்டது.. அதிலும் முக்குலத்தோர் மத்தியில் உயர தொடங்கிவிட்டது.. எப்படி?
அதிமுகவை பொறுத்தவரை தற்போது நீதிமன்ற தீர்ப்பு ஒன்றையே நம்பி உள்ளது.. ஒவ்வொரு முறையும், ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி என இரு தரப்புக்கும் ஆதரவுகள் மாறி மாறி கிடைத்துவரும், சுப்ரீம்கோர்ட் என்ன சொல்ல போகிறது என்பதுதான், இவர்களின் வருங்கால அரசியலை தீர்மானிக்க கூடியதாக உள்ளது.
இதனிடையே, ஓபிஎஸ் தன்னுடைய பலத்தை பெருக்கி கொள்ளும் முயற்சியில் இறங்கி உள்ளார்.. எடப்பாடி பழனிசாமியோ, தனக்கிருக்கும் பலத்தை இழந்துவிடக்கூடாது என்பதில் முனைப்பு காட்டி வருகிறார்.

தெற்கு பிளான்
அதிலும் இருவருமே தென்மண்டலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள்.. கொங்குவில் தன் செல்வாக்கு எடுபடாத நிலையில், தென்மண்டலத்தில் குறிப்பாக தன்னுடைய முக்குலத்தோர் ஆதரவை ஒருபோதும் இழந்துவிடக்கூடாது என்பதே ஓபிஎஸ்ஸுக்கு தற்போதுள்ள முக்கிய டென்ஷன்.. ஆனால், கொங்குவில் வலுவான ஆதரவை வைத்திருக்கும் எடப்பாடியோ, தெற்கையும் தன்பிடியில் வைத்திருக்கும் பிளானை, கடந்த ஒரு வருடத்துக்கு முன்பேயே எடுத்துவிட்டார் என்பதுதான் கூடுதல் தகவலாக உள்ளது.

உதயகுமார்
நீதிமன்ற உத்தரவுகளுக்கேற்ப, ஒருசில மாஜிக்கள், ஓபிஎஸ் பக்கம் தாவினாலும்கூட, எடப்பாடிக்கான மதிப்பு தெற்கில் கூடிவருகிறதாம்.. இதற்கு சில காரணங்களுக்கும் சொல்லப்படுகின்றன.. முக்குலத்தோர் சமூக மக்களின் மனதை குளிர வைப்பதற்காகவே பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி ஆர்பி உதயகுமாருக்கும் தந்து அழகுபார்த்தார் எடப்பாடி.. அதேபோல கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் உதயகுமாரைதன் பொறுப்பாளராக நியமித்திருந்தார். மேலும், தென்மண்டல சுற்றுப்பயணத்தில், தனித்தனியாக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசியிருந்தார் எடப்பாடி..

4 சீனியர்கள்
இதனிடையே, மேஜர் அசைன்மென்ட் 4 சீனியர் அமைச்சர்களிடம் தந்திருந்தார்.. குறிப்பாக, நத்தம் விஸ்வநாதன், உதயகுமார், ராஜன் செல்லப்பா, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு, சில பணிகளை பிரித்து தந்திருந்த நிலையில், அவர்கள் கடந்த ஒரு மாத காலமாகவே சைலண்ட்டாக களமிறங்கினர்.. இவர்களின் முக்கிய பணி, தென்மண்டலங்களில் இருந்து ஓபிஎஸ் பக்கம் யாரும் தாவிவிடக்கூடாது என்பதுதான்.. அய்யப்பன் தவிர முக்கிய நபர்கள் வேறு யாரும் ஓபிஎஸ் டீமுக்கு செல்லவில்லை என்பதே எடப்பாடியின் சக்சஸ்தான் என்கிறார்கள்.

ஜெயபிரதீப்
முன்னதாக, இன்னொரு தகவலும் கசிந்தது.. வெறும் முக்குலத்தோர் சமுதாயத்தை மட்டும் குறி வைத்தால், ஒட்டுமொத்த கட்சிக்கு அதன்மூலம் சறுக்கலாகிவிடும் என்பதால், ஓபிஎஸ் + சசிகலா இணைந்து ரூ.100 கோடியில் அந்த திட்டத்தை வகுத்து, ரகசிய ஒப்பந்தமும் செய்துள்ளதாக கூறப்பட்டது. முதலில், அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்களை இழுப்பதற்காக, ரூ.100 கோடி பிளானை போட்டு சசிகலா ஓபிஎஸ்சிடம் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.. அந்தவகையில் முதல் ஆபரேஷன் தென்மாவட்ட நிர்வாகிகளிடம் ஆரம்பமாகி உள்ளதாகவும், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஓபிஆர், ஜெயபிரதீப் மற்றும் ஓபிஎஸ் நேரடியாகவே களம் இறங்கி வருவதாகவும் செய்திகள் வந்தன.. இதில்தான் அய்யப்பன் விக்கெட் விழுந்தது.. இவ்வளவு பிளான்களை செய்திருந்தும், ஓபிஎஸ் தரப்பு பின்னடைவை சந்தித்துள்ளதாகவே கருதப்படுகிறது.

சக்ஸஸ் A
கடந்த ஒருவார கால அரசியல் நிகழ்வை மட்டும் எடுத்துக் கொண்டால், எடப்பாடிக்கு முக்குலத்தார் மத்தியில் செல்வாக்கு கூடிவிட்டதாம்.. பூலித்தேவர் பிறந்தநாள் விழாவுக்கு எடப்பாடி டீமை வரவிடாமல் தடுக்க எத்தனையோ மறைமுக வேலைகள் நடந்தன.. ஆனாலும் எடப்பாடி அசரவில்லை.. நத்தம் விஸ்வநாதன், ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா, தளவாய் சுந்தரம், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு உள்ளிட்ட 17 பேர் டீமை அனுப்பி வைத்திருந்தார் எடப்பாடி.. இந்த 17 பேரும் பம்பரமாக சுழன்று, ஓபிஎஸ் டீமின் பிளானை நொறுக்கி தள்ளினிர்கள்..

சக்ஸஸ் B
பூலித்தேவர் பிறந்தநாள் விழாவுக்கு, 500-க்கும் மேற்பட்ட கார்களில் எடப்பாடி தரப்பினர் வந்திறங்கி, ஓபிஎஸ் டீமுக்கே ஷாக் தந்தார்கள்.. ஆனால், ஓபிஎஸ் டீமில் இந்த அளவுக்கு தடாலடி எதுவும் நடக்கவில்லை.. வழக்கம்போல், ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்ட ஒருசிலர் மட்டுமே விழாவுக்கு வந்திருந்தனர்.. தென்மண்டலங்களில் எடப்பாடிக்கு கொஞ்சம்கூட ஆதரவே இல்லை என்று விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இத்தனை பெரிய கூட்டத்தை இவரால் எப்படி திரட்ட முடிந்தது? என்று திகைத்து போனது ஓபிஎஸ் டீம் மட்டுமல்ல, முக்குலத்தோர் சமுதாயமும்தான்.. அதுமட்டுமல்ல, இன்னும் சில பிளான்களையும் எடப்பாடி தற்போது கையில் வைத்துள்ளாராம்..

சக்ஸஸ் C
தென்மண்டல தலைவர்களுக்கு தொடர்ந்து மரியாதை செலுத்த வேண்டும், இறந்து போன அந்தந்த சமூக தலைவர்களின் சிலைகளுக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்த வேண்டும், அந்த தலைவர்களின் சேவையை எடுத்துரைப்பது, போன்றவைகளை செய்து, முக்குலத்தோர் சமுதாயத்தை கவரவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.. தற்சமயம், ஹைகோர்ட் தீர்ப்பு வந்துவிட்டதால், இனி யாரும் ஓபிஎஸ் பக்கம் வர வாய்ப்பு இல்லை என்பதும் எடப்பாடிக்கு கூடுதல் தெம்பை தந்துள்ளது.. ஆக, எடப்பாடி டீம் வலுவாகி வருவதுடன், தெற்கிலும் அவருக்கான கிராஃப் உயர்ந்து கொண்டே வருவதாக தெரிகிறது.. இது நீடிக்குமா? ஓபிஎஸ் + டிடிவி + சசிகலா இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அதை நொறுக்குவார்களா? தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!











Click it and Unblock the Notifications