இளையராஜாவின் "தாமரை".. 10 பைசா செலவு செய்தாரா.. பாஜக பிளான் இதுதான்.. போட்டுடைத்த கே.ராஜன்
இளையராஜாவுக்கு எம்பி பதவி குறித்து கே ராஜன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்
சென்னை: இளையராஜா, இந்த பதவியை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறார்? இதுவரை தலித் மக்களுக்காக இளையராஜா ஒரு பத்து பைசா கூட செலவு செய்தவர் கிடையாது.. அவர் இதுவரை எந்த பட்டியலினத்து மக்களுடனும் சேர்ந்தவர் கிடையாது.. எனவே இளையராஜாவுக்கு எம்பி பதவி கொடுக்கலாம், அதனால் பாஜகவுக்கு ஓட்டு கிடைக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்க கூடாது" என்று கே.ராஜன் கூறியுள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
விரைவில் எம்பி தேர்தல் நடக்க போகிறது.. இதற்காக தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.. இதில் பாஜகதான் முதல்நபராக வியூகங்களை வகுத்து வருகிறது.
ஹைதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் அமித்ஷாவின் பேச்சு, தென் மாநிலங்களை திரும்பி பார்க்க வைத்தது.

அமித்ஷா
அந்த கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் பாஜக தனது ஆட்சியை விரைவில் நிலைநாட்டும். அடுத்த 40 வருடங்கள் பாஜகவின் சகாப்தம்தான்... பாஜகவின் அடுத்தகட்ட வளர்ச்சி தென்மாநிலங்களிலிருந்து வரும் என்று அனைவரிடமும் நம்பிக்கை உள்ளது" என்ற பேசியிருந்தார்.. இதற்கு முன்பு இப்படி சொல்லாத அமித்ஷா, இந்த முறை மட்டும் ஏன் இப்படி உறுதியாக சொன்னார்? என்ற சந்தேகம் எழுந்தது.

பாஜக பலவீனம்
ஒருவேளை தமிழகத்தில் அதிமுகவின் உட்கட்சி பூசலை கண்டும், அக்கட்சி நலிவடைந்து வருவதை கண்டும் இப்படி சொன்னாரா? அல்லது திமுகவின் பலவீனங்களை கண்டு இப்படி சொன்னாரா? என்ற குழப்பமும் ஏற்பட்டது.. அதேசமயம், இத்தனை நாட்கள் கிசுகிசுத்து வந்த செய்தி உறுதியானது.. மாநிலங்களவை நியமன எம்பியாக இளையராஜா தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.. அவருடன், கேரளாவை சேர்ந்த பி.டி. உஷா, கர்நாடகாவை சேர்ந்த வீரேந்திர ஹெக்டே, ஆந்திராவை சேர்ந்த விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் அடங்குவர்.

இளையராஜா
இவர்களுக்கு பதவி அறிவிக்கப்பட்ட பிறகுதான், தேர்வு செய்யப்பட்ட 4 பேரும் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், அமித்ஷா ஏன் அப்படி பேசினார் என்பதும் ஓரளவு விளங்க ஆரம்பித்தது.. எனினும், இளையராஜாவுக்கு பதவி தந்ததில் அரசியல் இல்லை என்று அண்ணாமலை சொன்னாலும், பொறுப்பு தருவதினால் மட்டும் தாமரை மலர்ந்து விடாது என்ற கருத்துக்களும் எழுந்தபடியே உள்ளன.. இதைதான் அரசியல் விமர்சகரும், சினிமா தயாரிப்பாளருமான கே.ராஜன் விலாவரியாக எடுத்து கூறியுள்ளார்.

கே ராஜன்
ஒரு சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் சொல்லும்போது,"இந்த பதவியை வைத்துக்கொண்டு இளையராஜா என்ன செய்யப்போகிறார் என்பது தெரியவில்லை... இப்படித்தான், பாஜகவில் ஒருமுறை 'சோ'வுக்கு எம்பி பதவி வழங்கப்பட்டது. ஆனால் அவர் எதையுமே செய்யவில்ல.. இளையராஜா பதவியை வைத்து டெல்லி செல்வாரா? மக்கள் பிரச்சினையை பற்றி பேசுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கிப்ட் தந்த பாஜக
அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு இளையராஜா பாராட்டிய போதே சொன்னேன், இளையராஜாவுக்கு இதுகுறித்து ஒரு பரிசு தரப் போகிறார்கள் என்று.. அந்த பரிசு தான் இது... மொத்தத்தில் அம்பேத்கரை அவமானப் படுத்தியதால் இளையராஜாவுக்கு இந்த பரிசு கிடைத்திருக்கிறது.. எம்பி ஆகும் இளையராஜா, இந்த தமிழகத்திற்காகவும், சினிமாத்துறைக்காகவும் என்ன செய்ய போகிறார்? ஏனென்றால் மோடி இந்த நாட்டுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
Recommended Video

தலித் மக்கள்
ஏழைகள் இன்னும் ஏழைகளாக சென்று கொண்டிருக்கிறார்கள், அதேபோல் இளையராஜாவுக்கு எம்பி பதவி கொடுத்தால் தலித் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்கள் என பாஜக நினைக்க கூடாது.. ஏனென்றால் இது வரை தலித் மக்களுக்காக இளையராஜா ஒரு பத்து பைசா கூட செலவு செய்தவர் கிடையாது.. அவர் இதுவரை எந்த பட்டியலினத்து மக்களுடனும் சேர்ந்தவர் கிடையாது.. எனவே இளையராஜாவுக்கு எம்பி பதவி கொடுக்கலாம், அதனால் பாஜகவுக்கு ஓட்டு கிடைக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்க கூடாது" என்றார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications