"கேம் ஓவர்".. ஆசை ஆசையாய் பாஜக.. "ஆளுநர்" ரஜினி கன்பார்ம்.. எங்கே தெரியுமா? இந்தா கிளம்பிட்டாங்கல்ல
: ரஜினிகாந்த்தை கர்நாடக கவர்னர் ஆக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகிறார்களாம்
சென்னை: ரஜினிகாந்த் ஆளுநராக போகிறார் என்று தகவல்கள் வட்டமடித்து கொண்டிருக்கும்நிலையில், அவர் எந்த மாநிலத்துக்கு ஆளுநராக போக போகிறார் என்ற செய்திகளும் கிளம்பி உள்ளன.
விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ளது.. இதற்காக தமிழகத்தை நோக்கி இப்போதே மேலிட பாஜக காய் நகர்த்த துவங்கிவிட்டது.
இதனிடையே, சமீபத்தில் ஆளுநரை ராஜ்பவனில் ரஜினி திடீரென சந்தித்து பேசியிருந்தார்.. அரசியல் காரணங்களுக்காக பேசினேன் என்று வெளிப்படையாக சொன்ன ரஜினி, அவைகள் என்ன என்பதை கூற மறுத்துவிட்டார்..

என்ன காரணம்?
அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக ரஜினி அறிவித்ததில் இருந்து, பெரிதாக எந்த பேச்சும் எழவில்லை.. சமீபத்தில் இவர் டெல்லி சென்றுவிட்டு வந்தபிறகுதான், பரபரப்புகள் மீண்டும் ஆரம்பமாகி உள்ளன.. இதற்கு பிறகு ஆளுநர் ரவியை சந்தித்து பேசியதும், அந்த பரபரப்பு உச்சத்துக்கு சென்றுவிட்டது.. தமிழகத்தில் பாஜக ஆட்சி மலர்வது உறுதி என்று அமித்ஷா அன்று ஹைதராபாத் சொன்னதில் இருந்தே, தமிழக பாஜக சுறுசுறுப்பாக களம் இறங்கி விட்டது.. தேசிய பாஜகவும், தமிழகத்தில் வாக்குகளை அறுவடை செய்யும் வியூகத்தை கையில் எடுத்துள்ளது.. அந்தவகையில் முதல் சாய்ஸ் ரஜினிகாந்த் மட்டுமே..!

நிறம் மாறாத ரஜினி
கடந்த முறை மாதிரி இல்லாமல், இந்த முறை ரஜினியை பாஜக முழுமையாகவே பயன்படுத்தி கொள்ளக்கூடும் என்கிறார்கள்.. அதற்காகவே ஆளுநர் பதவி ஆசை அவருக்கு காட்டப்பட்டுள்ளதாகவும், இதற்கு ரஜினி ஓகே சொல்லிவிட்டதாகவும், கடந்த ஒரு மாத காலமாகவே செய்திகள் கசிந்து வருகின்றன.. ரஜினியை தங்கள் பக்கம் இழுத்து, சில பொதுக்கூட்டங்களில் பேச வைப்பது + கட்சி ரீதியாக ரஜினி பேச தயங்குவதால், கட்சி சாராத பொதுக்கூட்டங்கள் அல்லது விழாக்களை நடத்தி அதில் ரஜினியை பேச வைப்பது + ஏதாவது ஒரு சிறிய மாநிலத்தின் ஆளுநராக நியமிப்பது என்பது போன்ற திட்டங்களையும் பாஜக யோசித்து வருகிறது.

அர்ஜுன மூர்த்தி
அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினியே மீண்டும் ஒருமுறை செய்தியாளர்களிடம் திட்டவட்டமாக சொல்லிவிட்ட பிறகும்கூட, பாஜகவின் ஆசை அடங்கவில்லை.. ரஜினிதான் கட்சிக்கு வரவில்லை, அவருடைய ரசிகர்களையாவது இழுத்து கொண்டு வருவோம் என்று பிளான் செய்து, அந்த வேலையையும் கனகச்சிதமாக முடித்து கொண்டு வருகிறது.. இன்னொரு பக்கம் ரஜினியின் வலதுகரம் என்று சொல்லப்பட்ட அர்ஜுன மூர்த்தியையும் கட்சிக்குள் கொண்டுவந்துவிட்டது.. இப்படி ரஜினியை சுற்றியே காய்களை பாஜக நகர்த்தி வரும்நிலையில், ரஜினியின் ஆளுநர் பதவி குறித்த தகவல்களும், றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது.

சான்ஸ் + சாய்ஸ்
10 நாட்களுக்கு முன்பு, இந்தியா டுடேவில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.. அதில், "தமிழக ஆளுநராக ரஜினி விரைவில் நியமிக்கப்படுவார்" என்று கூறப்பட்டிருந்தது.. ஏதோ சிறிய மாநிலத்துக்கு ஆளுநராக பதவியில் அமர்த்தப்படலாம் என்று செய்திகள் வந்தநிலையில், தமிழ்நாட்டுக்கே ஆளுநரா? என்றஅதிர்ச்சி அப்போது ஏற்பட்டது.. காரணம், ஒரே மாநில நபரை ஆளுநராக நியமிக்க வாய்ப்பில்லை.. அப்படி இருக்கும்போது ரஜினிக்கு எப்படி இந்த வாய்ப்பு கிடைக்கும் என்பதே அனைவரின் சந்தேகமாக எழுந்தது.

கலர் ரஜினி
இப்போது இன்னொரு தீயை பற்ற வைத்துள்ளனர்.. கர்நாடக மாநில ஆளுநராக ரஜினியை நியமிக்க போகிறார்களாம்.. பிறந்து வளர்ந்த சொந்த மாநிலத்துக்கே ஆளுநரா? என்ற கேள்வி இயல்பாக எழுந்தாலும், கர்நாடகம் போன்ற பெரிய மாநிலத்துக்கு ரஜினியா? என்ற திகைப்பும் ஏற்படத்தான் செய்கிறது.. அதுமட்டுமல்ல, மக்களிடம் இன்றும் நெருக்கமான தொடர்பு கொண்டவர் ரஜினி என்று பாஜகவினர் பேசத் துவங்கிஉள்ளனராம்.. இப்படித்தான், அன்று ஆளுநர் ரவியை ரஜினி புகழ்ந்து பேசினார்.. ரஜினியை பாஜகவினர் புகழ்ந்து பேசுகிறார்கள்.. இதை பற்றி கேட்டால், என்மீது கலர் பூசுகிறார்கள் என்பார் ரஜினி..

பிசினஸ் - A
அங்கே தொட்டு, இங்கே தொட்டு, கடைசியில் கர்நாடக மாநிலத்தின் ஆளுநர் என்ற பேச்சில் வந்து நின்றுள்ளது ரஜினிகாந்தின் "வியாபார அரசியல்".. சமீபகாலமாகவே, எத்தனையோ பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைகள் காரணமாக, தமிழகத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், எதற்குமே வாய் திறக்காத ரஜினி, ஏப்ரல் மாதத்திற்கு பிறகு, தன்னுடைய ரசிகர்களை ரஜினி சந்திக்க போகிறாராம்.. அதுவும் தன்னுடைய படத்தை ஓடவைப்பதற்கான முயற்சிக்கான சந்திப்பாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..

பிசினஸ் - B
ரஜினியை பொறுத்தவரை, எப்போதெல்லாம் தன் படங்கள் வெளிவருகிறதோ, அப்போதெல்லாம் அரசியல் என்ற வியாபார யுக்தியை கையில் எடுக்கிறார் என்றும், தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் பழுதில்லாமல் கொண்டு செல்வதற்கான அச்சாரமாக, ரசிகர்களை பயன்படுத்தி கொள்வது ரஜினியின் யுக்தியாக இருந்து வருவதாகவும் தொடர்ந்து கூறப்படுகிறது.. இப்போது ரஜினி என்ட்ரி, ஆளுநர் பதவி போன்ற தகவல்களை வைத்து, இணையதளத்தில் விவாதங்களே கிளம்பி விட்டன.

பிசினஸ் - C
"இந்த வயதிலேயும், பேத்தி வயது பெண்களுடன் ஜோடியாக நடித்து கொண்டு, கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்.. ஆனால், பேசுவதெல்லாம் ஆன்மீகம்.. அதுவும் ஆன்மீகத்தை ஏற்காத குடும்ப கட்சியின் படங்களில் கோடி கோடியாக வாங்கி கொண்டு நடிப்பார்...இதுதான் ரஜினியின் பிசினஸ் அணுகுமுறை.. அதனால், நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால், ரஜினி, கண்டிப்பாக அரசியலுக்கு வரட்டும்.. ஏன் பாஜகவுக்கும் வரட்டும்.. அப்போதாவது, ரஜினி வாய்ஸ் என்று பாஜக ஆதரவாளர்கள் சொல்வது எந்த பலனையும் தராது என்று அவர்கள் புரிந்து கொள்வார்கள்" என்கிறார்கள் நொந்துபோன ரசிகர்கள்.

புரமோஷன் + பப்ளிசிட்டி
பொதுவாக, ரஜினி நடிக்கும் பட வேலை ஆரம்பமாகும்போதும், பட வெளியீட்டின் போதும், அவர் பற்றிய பேச்சு இன்னும் அதிகரிக்கும்... அப்படித்தான், ஜெயிலர் பட வேலைகளும் துவங்கி உள்ளன.. அதேசமயம், ரஜினியின் அரசியல் பேச்சும் துவங்கி உள்ளது.. படத்துக்கு புரமோஷன் + பப்ளிசிட்டி + என இந்த காட்சிகளை 25 வருடங்கள் பார்த்து பார்த்து சலித்து போயுள்ளது இநத் தமிழகம்.. இதைவிட முக்கியம், ரஜினியே இல்லாமல் பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்து வருகிறது என்பதையும் நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும்.. அப்படி இருக்கும்போது, பாஜகவை நம்பி ரஜினி இருக்கிறாரா? அல்லது ரஜினியை நம்பி பாஜக உள்ளதா? என்று தெரியவில்லை.. எதுவானாலும் மண் குதிரையை நம்புவது போல்தான்..!












Click it and Unblock the Notifications