சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் வந்திறங்கியது உண்மையில் நாய்கறியா? ஏன் இந்த திடீர் பரபரப்பு.. உண்மை என்ன?

நாய்கறி குறித்து வந்த செய்திகளும், அது குறித்து பரவும் கிளை கதைகளும் மக்களையும், அசைவ பிரியர்களையும் பெரிய அளவில் பீதிக்கு உள்ளாக்கி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னைக்கு வந்தது நாய்க்கறி தானா?.. பரபரப்புக்கு காரணம் என்ன?- வீடியோ

    சென்னை: நாய்கறி குறித்து வந்த செய்திகளும், அது குறித்து பரவும் கிளை கதைகளும் மக்களையும், அசைவ பிரியர்களையும் பெரிய அளவில் பீதிக்கு உள்ளாக்கி உள்ளது. திடீர் என்று பரவும் நாய்கறி செய்திகளுக்கு பின் நிறைய பேசப்பட வேண்டிய விஷயங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னையில் கடந்த வாரம் வந்து இறங்கியது அந்த மர்மமான கறி. அதில் இருந்தே சென்னையில் 90% சதவிகித பிரியாணி கடைகளில் ஆட்கள் வரவு குறைந்துவிட்டது.

    உணவுகளில் மாட்டுக்கறி, ஆட்டுக்கறிக்கு பதில் நாய்கறியை பயன்படுத்துகிறார்களா என்று கேள்வி எழுந்தது. இதனால் அசைவ பிரியர்கள் பெரிய பீதிக்கு உள்ளானார்கள்.

    சபரிமலையில் பாஜகவினர் போராட்டம்.. பினராயி விஜயன் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு சபரிமலையில் பாஜகவினர் போராட்டம்.. பினராயி விஜயன் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு

    எவ்வளவு கிலோ

    எவ்வளவு கிலோ

    சென்னையில் கடந்த வாரம் எக்மோர் ரயில் நிலையத்தில் பரபரப்பான காலை நேரத்தில்தான் அந்த கேட்பாரற்ற பார்சல் கண்டுபிடிக்கப்பட்டது. 20 பெட்டிகள் கொண்ட அந்த பார்சலில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து ரயில்வே போலீசுக்கும், உணவு பாதுகாப்பு துறைக்கும் தகவல் அனுப்பப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் நடத்திய சோதனையில் 20 பெட்டிகளிலும் அந்த கறி இருந்தது.

    எப்படி இருந்தது

    எப்படி இருந்தது

    மொத்தம் 2000 கிலோ கறி அதில் இருந்தது. இந்த கறி அழுகிய நிலையில் இருந்தது. கறியை எப்படி ஏற்றுமதி செய்து கொண்டு வர வேண்டுமோ அப்படி கொண்டு வரவில்லை. இதனால் வெப்பநிலை அதிகரித்து அந்த கறி மொத்தமும் அழுகி உள்ளது. இதில் இருந்து மோசமாக துர்நாற்றம் வந்துள்ளது.

    எங்கிருந்து வந்தது இந்த கறி

    எங்கிருந்து வந்தது இந்த கறி

    ஜோத்பூரில் இருந்து மன்னார்குடி செல்லும் ஜோத்பூர் ரயிலில்தான் இந்த கறி வந்து இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இதை இறக்க வேண்டும். முறைப்படி அங்கு வந்து கறிக்கு உரிய நபர்கள் இதை வாங்க வேண்டும். ஆனால் இது யாருக்கு அனுப்பப்பட்டது என்று எந்த குறிப்பும் இந்த பார்சலில் அடங்கவில்லை.

    யார் அனுப்பியது

    யார் அனுப்பியது

    இதை அனுப்பியது ஏகே என்று பெயர் கொண்ட நபர். ஆனால் இது நபரா, நிறுவனமா, இல்லை குறியீடா என்று எந்த விளக்கமும் இல்லை. இதில் வேறு எந்த விலாசமும் , போன் நம்பரும் இல்லை. இதனால் இதன் உரிமையாளர் யார் என்று தெரியவில்லை.

    குழப்பம் என்ன

    குழப்பம் என்ன

    இதை கைப்பற்றிய உணவு துறை அதிகாரிகள் பெரிய குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளனர். முதலில் இது ஆட்டுக்கறியாக இருக்க வாய்ப்புள்ளது என்று கூறினார்கள். அதன்பின் உடல் அமைப்பு அப்படி இல்லை என்று கூறினார்கள். இது எந்த விதத்திலும் உண்ணும் நிலையில் இல்லை. எந்த சான்றிதழும் பெறாமல் இது ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்கள் உணவுத்துறை அதிகாரிகள்.

    உண்மையில் என்ன என்றே தெரியாது

    உண்மையில் என்ன என்றே தெரியாது

    அவர்கள் சொல்லாத ஒரு விஷயம்தான் தற்போது பெரிய பிரச்சனை ஆகியுள்ளது. எந்த இடத்திலும் இந்த கறி நாய்கறிதான் என்று உணவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. அதேபோல் இது என்ன கறி என்று சோதனை செய்து வருகிறோம். உடல் அமைப்பு காரணமாக நாய்கறியா என்றும் சோதனை செய்கிறோம் என்றுதான் கூறினார்கள். உறுதியாக எங்கும் நாய்கறி என்று கூறவில்லை.

    ஆடாக இருக்க வாய்ப்புள்ளதா?

    ஆடாக இருக்க வாய்ப்புள்ளதா?

    இந்த நிலையில் இது ஆட்டுக்கறியாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வருகிறது. முதலில் இதன் வால் நீளமாக இருக்கிறது என்றுதான் இது ஆட்டுக்கறி இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் வால் நீளமாக இருக்கும் ஆடுகள் ஜோத்பூரில் நிறைய உள்ளது. இதுவும் மீட் என்ற பெயரில்தான் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், இது ஆடாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்று ஒருசாரர் தெரிவிக்கிறார்கள்.

    வேகன் மார்க்கெட்

    வேகன் மார்க்கெட்

    இதை எல்லாம் விவாதிக்கும் முன், மிக முக்கியமான வேகன் மார்கெட் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். உலகம் மொத்தமும் தற்போது இறைச்சி ஏற்றுமதி மிகப்பெரிய சந்தையாக உள்ளது. ஆனால் வேகன் சந்தை இன்னும் 10 வருடங்களில் உலகின் மிகப்பெரிய சந்தையாக உருவெடுக்கும். வேகன் என்பது - வெஜிடேரியன் என்பதன் மில்லினியம் வெர்ஷன்தான்.வேகன் என்பது சைவம் உண்பவர்களுக்கான பெரிய இயக்கமாக உருவெடுத்துள்ளது.

    அரசியல் இருக்கிறது

    அரசியல் இருக்கிறது

    இந்த வேகன் மார்க்கெட்டை உயர்த்தும் வகையில் உருவாக்கப்பட்ட அச்சம்தான் இந்த நாய் கறி அச்சம் என்று விவாதம் செய்யப்படுகிறது. அதற்கு தகுந்தாற் போலவே தற்போது அசைவ மார்க்கெட்டில் கடந்த இரண்டு நாட்களில் அசைவ விற்பனை பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது. நிறைய நாடுகளில் வேகன் மார்க்கெட் அங்கிருந்த அசைவ சந்தைகளை பெரிய அளவில் சிதைத்தது குறிப்பிடத்தக்கது.

    அசைவத்திற்கு எதிரான போர்

    அசைவத்திற்கு எதிரான போர்

    இதை அசைவத்திற்கு எதிரான போர் என்று கூட வரையறுக்கலாம். தெருவில் கறி வெட்டி விற்கும் நபர் தொடங்கி பெரிய பெரிய ஹோட்டல் நிறுவனங்கள் வரை இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும். சென்னையில் மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க இந்த நாய் கறி பிரச்சாரம் பெரிய பாதிப்பை, பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாகவே இதன் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும்.

    இன்னொரு கிளை தகவல்

    இன்னொரு கிளை தகவல்

    இதில் இன்னொரு தகவலும் தெரிவிக்கப்பட வேண்டும், ஒருவேளை அது உண்மையாகவே நாய் கறியாக இருக்கும் பட்சத்தில் அது எதற்காக இங்கே கொண்டு வரப்பட்டது என்றும் ஆய்வு செய்ய வேண்டும். சென்னையில் தற்போது வடமாநில கடைகள், பியூட்டி பார்லர்கள், மால்கள் எல்லாம் வடகிழக்கு மாநில மக்கள்தான் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்காக நாய் கறி தயாரிக்கும் நிறைய ஹோட்டல்கள், வீடுகள் சென்னையில் உள்ளது. அவர்களுக்கு நாய் கறி உணவு என்பது மிகவும் இயல்பானது. ஞாயிறுகளில் அவர்கள் அதை குடும்பத்துடன் உண்பார்கள். அதற்காக இந்த கறிகள் கொண்டு வரப்பட்டதா என்றும் சோதிக்க வேண்டும்.

    English summary
    Dog Meat vs Vegan: The real reason for the recent food storm.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X