"என்னை பார்க்காதீங்க! வீட்டு பக்கம் வராதீங்க".. அந்த 4 பேருக்கு வார்னிங் தந்த ஓபிஎஸ்.. பரபர பின்னணி
சென்னை: தன்னிடம் சமாதானம் பேச வந்த எடப்பாடி ஆதரவு அதிமுக நிர்வாகிகளிடம் ஓபிஎஸ் கோபமாக கண்டிப்புடன் பேசியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் நடக்கும் உச்ச கட்ட உள்கட்சி மோதல் கிளைமேக்ஸை நெருங்கி வருகிறது. நாளை மறுநாள் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது.
இன்று அதிமுகவில் தீர்மானக்குழு கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவதற்கான தீர்மானம் உருவாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமாதானம்
ஆனால் பொதுச்செயலாளர் பதவி தொடர்பான தீர்மானத்தை உருவாக்க ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஓபிஎஸ்தான் ஒருங்கிணைப்பாளர் என்பதால் அவர்தான் தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும். ஆனால் அவரோ ஒற்றை தலைமைக்கு வாய்ப்பே இல்லை. அந்த தீர்மானத்தை அனுமதிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். பொதுக்குழுவையே ஒத்திவைக்க அவர் பரிந்துரை செய்துள்ளார். இந்த நிலையில் ஓபிஎஸ்ஸை சமாதானம் செய்ய அதிமுக நிர்வாகிகள் தீவிரமாக முயன்று வருகிறார்கள்.

வரிசையாக பேசினார்
எடப்பாடி ஆதரவு நிர்வாகிகள் இதற்காக கடந்த 4 நாட்களாக வரிசையாக ஓபிஎஸ்சை சந்தித்து ஆலோசனை செய்தனர். பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க அனுமதி கொடுங்கள். உங்கள் இரண்டு மகனுக்கும் கட்சியில் பதவி கொடுக்கிறோம். அதோடு உங்களுக்கு அவை தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை கொடுக்கிறோம். கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும். இந்த முறை விட்டுக்கொடுங்கள் என்று எடப்பாடி சார்பாக பேசி உள்ளனர்.

மறுப்பு
முக்கியமாக முதல் இரண்டு நாட்கள் ஆர்பி உதயகுமார் மற்றும் காமராஜ் ஆகியோர் ஓபிஎஸ்ஸை சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை செய்தனர். அதன்பின் செங்குட்டுவன் எடப்பாடி சார்பாக ஓபிஎஸ்ஸிடம் தூது சென்றார். இவர்களின் சமாதான பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் மசியவில்லை. பின்னர் கடைசியாக எம்பி தம்பிதுரை ஓபிஎஸ்ஸிடம் எடப்பாடி சார்பாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் ஓபிஎஸ் இந்த பேச்சுவார்த்தை அனைத்திலும் உறுதியாக நின்று ஒற்றை தலைமையை எதிர்த்துள்ளார்.

வராதீங்க
இந்த நிலையில், இந்த 4 பேரிடமும்.. இனிமேல் இது தொடர்பாக என்னிடம் பேச வேண்டாம் என்று ஓபிஎஸ் கூறி இருக்கிறாராம். மற்ற விஷயங்களை பேச வேண்டுமானால் வாருங்கள். ஒற்றை தலைமை பற்றி பேச வேண்டாம். அப்படி பேச நினைத்தால் என் வீட்டிற்கே வர வேண்டாம். ஒற்றை தலைமைக்கே வாய்ப்பு இல்லை என்று கடுமையான குரலில் ஓபிஎஸ் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே நேற்று பிற்பகலுக்கு பின் சமாதானம் பேச யாரும் ஓபிஎஸ் வீட்டிற்கு செல்லவில்லை.
Recommended Video

அடுத்த மூவ் என்ன?
இந்த நிலையில் பொதுக்குழுவிற்கு முன்பாக அதை ஒத்திவைக்க ஓபிஎஸ் வழக்கு தொடுப்பார் என்கிறார்கள். வழக்கு அவசரமாக விசாரிக்கப்படவில்லை என்றால் பொதுக்குழுவை புறக்கணிக்கவும் ஓபிஎஸ் முடிவு செய்வார்கள் என்கிறார்கள். இதன் மூலம் பொதுக்குழுவில் எடுக்கும் முடிவு எதற்கும் அவர் கையெழுத்து போட மாட்டார் என்று கூறப்படுகிறது. பின்னர் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக அவர் சட்ட போராட்டம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications